நாளை இசை வெளியீட்டு விழா- மலேசியா புறப்பட்டார் விஜய்

இப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இன்று மாலை பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் வெளியாக உள்ளது.
நாளை இசை வெளியீட்டு விழா- மலேசியா புறப்பட்டார் விஜய்
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே, இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் மலேசியாவுக்கு புறப்பட்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com