search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை குஷ்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழலில் ஊறிப்போன தி.மு.க. பா.ஜனதாவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்ற கட்சி.
    • தி.மு.க. தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த தேர்தலுக்கு பிறகு மோடி ஆயுள் தண்டனை பெறுவார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். புதுவைக்கு வரும் கவர்னர்களிடம் சொத்துக்கணக்குகள் கேட்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.

    இது தொடர்பாக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-

    விலை கொடுத்து வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு அந்த எண்ணம் தான் வரும். இன்று ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி முதல் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு சென்றவர்கள். அவர்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் என்பதையும் வெளியிட்டால் நல்லது.


    மற்றவர்களின் சொத்துக்கணக்கை கேட்க ஆசைப்படும் தி.மு.க.வினர் முதலில் அவர்களது பின்புலத்தையும் இப்போதைய சொத்துக்களையும் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். ஊழலில் ஊறிப்போன தி.மு.க. பா.ஜனதாவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்ற கட்சி.

    லாலுபிரசாத் யாதவ் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர். வடகிழக்கு மாநிலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஒரு 350 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுக்க ஊழல் செய்பவர்கள் செய்பவர்களோடு கூட்டணி அமைத்து மக்களிடம் ஓட்டு கேட்க போகிறார்கள்.


    எப்படி மக்கள் ஆதரிப்பார்கள். ஊழலை ஒழிக்க போராடுகிறார் மோடி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிலைமை என்ன ஆகுமோ? என்ற பயத்தில் தான் இப்படி கதறுகிறது. தி.மு.க. தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
    • சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு.

    மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

    சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சமூக வலைதளத்தில் மிரட்டல் வருவதாக எழுந்த புகாரை அடுத்து 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது.
    • நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது-

    காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் விடாததால் டெல்டா பகுதியில் பயிர்கள் கருகி கிடக்கின்றன. தி.மு.க. அரசு தண்ணீர் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறதாம். இப்படியே எத்தனை நாள் தான் மக்களை ஏற்றுவீர்கள்?

    கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி தானே நடக்கிறது. அவர்களிடம் பேசி தண்ணீர் பெற முடியாத நிலையில் தானே தி.மு.க. உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தராத கட்சியை தலை மீதும், தோள் மீதும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

    தமிழகத்தை பா.ஜனதா வஞ்சிப்பதாக கூறும் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறுவாரா?

    நாங்கள் எந்த மாநிலத்தையும் பிரித்து பார்க்கவில்லை. மணிப்பூரை பா.ஜனதா கண்டு கொள்ளவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இந்தியா கூட்டணி. ஆனால் இப்போது வாடும் பயிரை காப்பாற்ற இந்தியா கூட்டணி முன்வரவில்லையே. தமிழகம் இந்தியாவில் ஒரு மாநிலம் தானே. இந்த மாநிலத்தின் விவசாயம் அழிவதை இந்தியா கூட்டணி கண்டு கொள்ளவில்லையே. இப்படிப்பட்ட கூட்டணி தமிழகத்துக்கு தேவையா?

    பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது. நாங்குனேரி சம்பவம் அதற்கு ஒரு சாட்சி. குழந்தைகள் மனதில் சாதிய உணர்வை தூண்டி விடுகிறார்கள். அரசு பள்ளிகளில் மட்டும் தான் இப்படிப்பட்ட சம்வங்கள் நடக்கிறது. இதை தடுக்க தவறியது அரசின் இயலாமைதான்.

    நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. அதை பாராட்ட மனம் வரவில்லை. அதிலும் மொழி பிரச்சனையை சொல்லி தங்கள் குறுகிய மனதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    எதிர்க் கட்சிகள் என்ன சொன்னாலும் சரி. அதை கண்டு கொள்ளாமல் மக்களுக்கு என்ன தேவையோ அதை பா.ஜனதா அரசு தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கும்.

    மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. நடக்கும் விஷயங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் புரிய வைப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார்.
    • தமிழகத்தின் எல்லையை தாண்டி தமிழும் பேச மாட்டார்கள். தமிழின் பெருமை பற்றியும் சொல்ல மாட்டார்கள்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார். அப்படி கல்வி புரட்சி ஏற்பட்டு இருந்தால் முதலில் தி.மு.க.வினர் அனைவரும் நன்றாக படித்து இருப்பார்களே? ஊழல் செய்து இருக்க மாட்டார்களே! ஜெயிலுக்கு போக மாட்டார்களே.ஆனால் தி.மு.க. ஆட்சி காலங்கள் ஊழல் நிறைந்த காலங்களாகத்தானே இருக்கிறது.

    நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததை குறிப்பிட்டுள்ளார். உண்மையாகவே கல்வி புரட்சி செய்து இருந்தால், மக்கள் நல அரசியலை செய்து இருந்தால் தி.மு.க.வும் தேசிய அளவில் வளர்ந்து இருக்கும். ஏன், மு.க.ஸ்டாலின் பிரதமராக கூட வந்திருப்பாரே. தமிழ்நாடு எங்கோ போயிருக்குமே.

    திராவிட மாடல் என்பது ஊழல் மாடலாகத்தானே எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு கட்சி, ஆட்சியை மக்கள்தான் பாராட்ட வேண்டும். ஆனால் எங்கள் ஆட்சி சூப்பர் என்று தனக்கு தானே பாராட்டி கொள்வதை நிச்சயம் மக்கள் ரசிக்க மாட்டார்கள். கிண்டல்தான் செய்வார்கள்.

    2 வருட தி.மு.க. ஆட்சியில் மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள். ஒரு மணி நேரம் மழை பெய்தால் மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது அவர்களுக்குத்தானே தெரியும்.

    தமிழ் தமிழ் என்று இத்தனை காலமும் மக்களை ஏமாற்றினார்கள். இப்போது அதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள். தமிழகத்தின் எல்லையை தாண்டி தமிழும் பேச மாட்டார்கள். தமிழின் பெருமை பற்றியும் சொல்ல மாட்டார்கள்.

    ஆனால் பிரதமர் மோடி நாட்டில் பல மொழிகள் இருந்தும் தமிழின் தொன்மையை அறிந்து உலகம் முழுவதும் அதன் பெருமையை சுட்டிக் காட்டுகிறது. ஐ.நா.சபை வரை உலகில் எங்கு பேசினாலும் திருக்குறள், தமிழின் பெருமை, கலாச்சாரம் பற்றி பேச தவறவில்லை. இப்போது பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி தமிழின் பெருைமயை அங்கு நிலைநாட்டி இருக்கிறார்.

    தமிழுக்கு தி.மு.க.வால் செய்ய முடியாததை, செய்யாததை பிரதமர் மோடி செய்து வருகிறார். அதை பாராட்டக்கூட மனம் வரவில்லை. நல்லது செய்வதை அவர்கள் ஒப்புக் கொள்வதே கிடையாது. அப்படியிருக்கும்போது எப்படி பாராட்டுவார்கள்?

    மனதார எதையும் செய்வதில்லை. மக்களை ஏமாற்றி குறுகிய வட்டத்துக்குள் வைத்திருந்த அவர்களின் சித்து வேலைகள் தோலுரிந்து வருகிறது. உண்மையாகவே நாட்டுக்கு யார் உழைக்கிறார்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து விட்டார்கள். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
    • அண்ணாமலை பா.ஜனதாவின் மாநில தலைவர். அவர் ஒரு விஷயத்தை பற்றி பேசுகிறார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, எத்தனை நாள் தான் சீட்டுக்காக கூட்டணி கட்சிகளிடம் கைகட்டி நிற்பது? வருகிற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். கூட்டணி என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

    இது பற்றி குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அண்ணாமலை பா.ஜனதாவின் மாநில தலைவர். அவர் ஒரு விஷயத்தை பற்றி பேசுகிறார் என்றால் யோசிக்காமல் பேச மாட்டார். டெல்லி தலைமைக்கும் தெரியாமல் இருக்காது. எனவே இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் குழம்பவும் வேண்டாம். மற்றவர்களை குழப்பவும் வேண்டாம். எல்லாவற்றையும் கட்சி பார்த்துக் கொள்ளும் என்பதே என் கருத்து.

    • நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு கட்டு போட்டுள்ளார்.
    • ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    சென்னை

    நடிகை குஷ்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியூர் செல்லும் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வலைத்தளத்தில் தெரிவித்து முழங்காலில் கட்டுப்போட்டு இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

    அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    இந்த நிலையில் வெளியூர் செல்ல காலை சென்னை விமான நிலையத்துக்கு சென்ற குஷ்பு அங்கு கால் வலியோடு இருந்த தனக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் உடனடியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரவில்லை என்று சாடி உள்ளார்.

    டுவிட்டரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "முழங்காலில் காயத்துடன் இருக்கும் பயணியை அழைத்து செல்ல சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. சக்கர நாற்காலிக்காக சென்னை விமான நிலையத்தில் அரைமணிநேரம் காத்து இருந்தேன்.

    அதன்பிறகு வேறு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்துச் சென்றனர். நீங்கள் சிறந்த சேவை செய்ய முடியும் என்று என்னால் உறுதி சொல்ல முடியும்'' என்று பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பானது.

    இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலையை குழுவுக்கு கொண்டு செல்லப்படும்'' என்று தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.
    • திமுக பேச்சாளரின் தரக்குறைவான பேச்சிற்கு கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார்.

    பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகார் எழுந்தது. சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவரான நடிகை குஷ்பு குறித்து அவர் தரகுறைவாக பேசியது சமுக வளைதளங்களில் வெளியானது.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார். இதையடுத்து தமது பேச்சிற்கு சைதை சாதிக்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அவரை மன்னிக்க முடியாது என்று குஷ்பு கூறியிருந்தார். இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    • நானும், மீனாவும் அவரிடம் பேச தயங்கி சற்று தூரத்தில் ஒதுங்கி அமர்ந்து இருந்தோம்.

    எவ்வளவு உச்சத்தை தொட்டாலும் இளமைக்காலமும் அந்த காலத்து மலரும் நினைவுகளும் எப்போதுமே இனிமையானவை. சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாகத்தான் இருக்கும்.

    நான் தமிழ் சினிமாவில் கால்பதித்த காலம்... அதாவது 1988-களில் ரஜினி சார் சூப்பர் ஸ்டாராக திரை உலகில் வலம் வந்து கொண்டிருந்தார். எனது முதல் படமே அவரோடு இணைந்து நடிப்பதாக அமையும் என்பது நான் எதிர்பாராதது.

    'தர்மத்தின் தலைவன்' படத்தில் அவருடன் நடித்த காலம் மறக்க முடியாதது. தொடர்ந்து 'மன்னன்', நாட்டுக்கு ஒரு நல்லவன், பாண்டியன், அண்ணாமலை என்று அவரோடு ஜோடியாக நடித்த படங்களும் 'ஹிட்'. அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களும் 'ஹிட்'. இன்றளவும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து கொண்டிருக்கிறது.

    பாண்டியன் படத்தில் வரும் 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் ஒய்யலாலா...' என்று படகில் இடம்பெற்ற டூயட் பாடல் காட்சியை சொல்வதா...? என்னையே கற்பனையில் கவிஞர் வடித்த 'கொண்டையில் தாழம்பூ... கூடையில் என்ன பூ... குஷ்பூ...' என்ற பாடலை நினைத்து மகிழ்வதா?

    அந்த காலகட்டத்தில் ரஜினி சாருடன் நான் நடித்த அத்தனை படங்களும் வெற்றிப்படங்கள். எந்த காலத்திலும் ரசிக்கும் படங்கள் என்பதில் சந்தேகமில்லை. மறக்க முடியாத அந்த காலங்களை மீண்டும் அசைபோட்டு பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

    அப்படி ஒரு வாய்ப்பும் தேடி வந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு 'அண்ணாத்த' படத்தில் ரஜினி சாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு தான் அது. அதை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்த நிலைவேறு. அவர் இருந்த நிலை வேறு.

    இப்போது அவருடன் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கும்? முன்பு போல் இருப்பாரா? ஜாலியாக பேசுவாரா? என்ற பல கேள்விகள் என் மனதில் எழுந்தது. ஆனால் எந்த கேள்விக்கும் விடை மட்டும் தெரியவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பின் முதல் நாள்... படப்பிடிப்பு தளத்தில் நான், மீனா எல்லோரும் ஆஜர் ஆனோம்.

    அந்தகாலத்தில் படப்பிடிப்புக்கு 5 நிமிடம் தாமதமாக வந்ததற்கே 'சாரி' கேட்டவர் ரஜினி. இப்போது எப்படி இருப்பார்...? நினைத்துக் கொண்டிருந்தபோதே ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் வந்தார். மணியை பார்த்தேன் ஒரு நிமிடம் கூட காலதாமதம் இல்லை. அதே காலந்தவறாமை... அதே சுறுசுறுப்பு... கொஞ்சம் கூட மாறவில்லை. அவரால் மட்டும் எப்படி முடிகிறது.

    நானும், மீனாவும் அவரிடம் பேச தயங்கி சற்று தூரத்தில் ஒதுங்கி அமர்ந்து இருந்தோம். எங்களை பார்த்ததும் எழுந்து அருகில் வந்தார். என்ன இப்படி என்னை மட்டும் தனியாக விட்டு விட்டு நீங்க இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே எங்கள் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கினார். அப்புறம் எங்கள் தயக்கம் விலகி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு நாங்கள் ஜோடி சேர்ந்த படம். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். ரசிகர்கள் மட்டுமா? நானும் தான்...!

    படம் ரிலீஸ் ஆனது. முதல் நாள்... முதல் காட்சி... படத்தை பார்க்கவும், ரசிகர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை பார்க்கவும் ஆசைப்பட்டேன். அதற்காக சென்னை காசி தியேட்டருக்கு சென்றேன்.

    நான் வருவதை அறிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் மேடம், மேடம் என்று பேசத்தொடங்கினார்கள். ஆனால் நானோ படம் பார்க்கும் எண்ணத்தில் குறியாக இருந்ததால் அவர்களை சிரமப்பட்டு தாண்டி சென்று தியேட்டரில் படம் பார்த்தேன். படம் நன்றாக அமைந்திருந்தது. மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது.

    ரஜினியோடு நடித்தபோது இளமைக்கால நினைவுகள் எப்படி வந்ததோ அதேபோல் உண்மையாகவே மீண்டும் இளமை பருவத்துக்கு சென்ற அனுபவமும் ஒருமுறை ஏற்பட்டது. அது தான் எடை குறைப்பு விவகாரம்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வது, உடல் பயிற்சிகள் செய்வது கலைஞர்களுக்கு முக்கியம். நானும் உடல் எடை குறைவதற்காக சில மாதங்களாக கடினமான உடல் பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டேன். அதற்கு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

    மருத்துவர்கள் ஆலோசனையில் தான் எடையை குறைத்தேன். எனது புதிய தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினேன். பெரும்பாலும் சேலைகளில் பார்த்த ரசிகர்கள் 'மாடர்ன்' உடையில் பார்த்ததும் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்கள்.

    கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் பிரதிபலனின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்ற எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்தேன். மற்றவர்களுக்கும் பலன் அளிக்கட்டுமே என்பதற்காக தான் சமூல வலைதளத்தில் வெளியிட்டேன்.

    லண்டனில் உள்ள பாரம்பரியமிக்க நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்த எனது மகளின் படிப்பு காலம் நிறைவடைந்ததையொட்டி சென்றிருந்தேன். என் மகளாலும் என்னைப்போல் சுயகாலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அது கூடுதல் மகிழ்ச்சியை தந்தது.

    அப்போது தான் லண்டன் நகரில் நான் சென்ற படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்.

    அந்த படத்தை பார்த்துதான் ரசிகர்கள் விதவிதமாக விமர்சித்தார்கள்.

    'குஷ்புவா இது... நம்ப முடியவில்லையே', 'சின்னதம்பியில் பார்த்த அதே குஷ்புவை பார்க்கும் போது எவ்வளவு சந்தோசம்' என்றெல்லாம் தங்கள் கருத்துக்களை பதிவிட்டார்கள். கிண்டல் செய்தவர்களும் உண்டு.

    ஆனால் ஒரே ஒரு விஷயம்தான் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்த தோற்றத்தை இன்றும் மறக்காமல் ஒப்பிட்டு பேசியது. அதாவது ரசிகர்கள் மனதில் என்றும் எனக்கு தனி இடம் இருக்கிறது என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. என்றும் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    சின்னத்திரையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். அந்த வரிசையில் 'மீரா' என்ற தொடரில் நடித்து வருகிறேன்.

    மீரா தொடரில் நடிப்பது மட்டுமின்றி , தொடருக்கான கதையையும் எழுதியுள்ளேன். முதன்மை கதாபாத்திரங்களான மீரா கதாபாத்திரத்தில் நானும், கிருஷ்ணன் கதாபாத்தி ரத்தில் சுரேஷ் சந்திர மேனனும் நடிக்கிறோம். இத்தொடர் மூலம் ஒரு எழுத்தாளராகவும் மற்றும் கருத்துருவாக்கம் செய்வதிலும் நான் பெருமை கொள்கிறேன். எனது கனவு செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று. உறுதியான, சுதந்திரமான மற்றும் சுயசார்புள்ள ஒரு பெண்ணைச் சுற்றிய ஒரு கதையை தமிழ் தொலைக்காட்சி தளத்தில் சொல்ல வேண்டுமென்பது எனது நீண்ட கால விருப்பம். மீரா நெடுந்தொடரில் இதை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்தோடு பார்வையாளர்கள் தங்களை தொடர்புபடுத்திப் பார்த்து உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

    ஒரு பெண்ணாக, பெண்கள் உறுதியானவர்களாக, சுதந்திரமானவர்களாக, சுய சார்புடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை.

    பல சமயங்களில் பெண்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, வழிகாட்ட வேண்டும் என்பதே என் எண்ணம். அதுபோல் மீராவும் இருப்பாள்...

    (மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...)

    அடுத்த வாரம்.....

    ttk200@gmail.com

    ×