search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்ட் கட்சி"

    • காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி.
    • வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்.
    • காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்.

    ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் எண்ணை (PAN Number) பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிபப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் வக்கீல் இசக்கி துரை உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவகிரி பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வக்கீல் இசக்கி துரை, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கிட்டப்பா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் வேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கோவிந்தன், கண்ணன், நகர துணைச் செயலாளர் குரு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    • இளைஞர் எழுச்சி தொடர் பிரசார பயணம் என்ற அமைப்பு பொதுக்கூட்டம் காந்திஜி கலையரங்கம் முன்பு நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக வேலை கொடு அல்லது வேலை கொடுக்கிற வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் கொடு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதோடு வேலை வாய்ப்புகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடு என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி "எங்கே எனது வேலை" இளைஞர் எழுச்சி தொடர் பிரசார பயணம் என்ற அமைப்பு பொது க்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் தினேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினரும், தென்காசி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யுமான லிங்கம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.ஒய்.எப். நகர செயலாளர் பால்சாமி, தென்காசி மாவட்ட துணை செயலாளர் முனியாண்டி, சிவகிரி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை செயலாளர்கள் ராஜேந்திரன், வேலுச்சாமி, குருவு, சங்கரவடிவு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

    • நிழற்கூடை சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
    • பயணிகள் பஸ் நிறுத்தத்தில் மழையிலும், வெயிலிலும், நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர்.

    மடத்துக்குளம்:

    உடுமலைப்பேட்டை - கொழுமம் சாலையில் உள்ளது எஸ்.பி.புரம்.இங்கு இருந்த பயணிகள் நிழற்கூடை சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அங்கு மீண்டும் பயணிகள் நிழற்கூடை அமைக்கும்படி தொடர்ந்து பலமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் புதியதாக பயணிகள் கூடை அமைக்கப்படவில்லை. அங்கு நிழற்குடை இல்லாததால் பயணிகள் பஸ் நிறுத்தத்தில் மழையிலும், வெயிலிலும், நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர்.

    அதனால் எஸ்.வி.புரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடை அமைக்க வேண்டும். அங்கிருந்து பழனிசாலைக்குச் சென்று இணையும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம்.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 பேரிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×