search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liquor policy"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
    • கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.'

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.

    • புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
    • ங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகளாக உள்ளது. ஆட்சி அமைந்தது முதல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான கொள்கையால் தள்ளாட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    கூடுதலாக 10 மதுபான, சாராய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்துள்ளது. கவர்ச்சி நடனங்களுடன் கூடிய சுற்றுலா மதுபார் (ரெஸ்டோ பார்) அமைக்கவும் நூற்றுக்கணக்கில் அனுமதி வழங்குகிறது. என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான உரிமையாளர்களுக்கு, சாராய முதலாளிகளுக்கும் சாதகமாக, அரசின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி செயல்பட்டு, அனுமதி வழங்கி வருகிறது. இதனால் புதுவையில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடும். புதுவையின் கலாச்சாரம், பண்பாடு முற்றிலுமாக சீர்குலையும்.

    இந்த கலாச்சார சீரழிவுக்கு, புதுவை மாநில பா.ஜனதா நிலைப்பாடு என்ன? நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே பா.ஜனதா வின் தேசிய கொள்கை. ஆனால் பா.ஜனதா கூட்டணியில் உள்ள புதுவையில் என்.ஆர்.அரசு நாள்தோறும் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள், மதுபார்களை திறக்க அனுமதி வழங்கி வருகிறது.

    ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்றாலும், மக்களின் உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் நலனுக்காகவும் தவறுகளை தட்டிக்கேட்பது அரசியல்கட்சிகளின் தலையாய கடமை. எனவே மதுபான, சாராய கொள்கையில் புதுவை மாநில பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக, அறிக்கையாக வெளியிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×