search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "35 பவுன் நகை கொள்ளை"

    மதுரையில் கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை கே.கே.நகர் லோகாஸ் காலனியைச் சேர்ந்தவர் முரளிக்கண்ணன் (வயது 39). இவர் அங்குள்ள கற்பக விநாயகர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

    கடந்த 9-ந் தேதி முரளிக்கண்ணன் குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டார். இதனால் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. இதனைக் கண்டு முரளிக்கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வரவே, அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டின் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் முரளிக்கண்ணன் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு பழைபாளையத்தில் இன்று அதிகாலை தனியார் கம்பெனி மேலாளரை அரிவாளால் மிரட்டி 35 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 52). தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிகிறார்.

    இவரது மனைவி பெயர் வள்ளியம்மை. இவர்களுக்கு கவுதம் (22), ஸ்ரீராம் (16) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் கவுதம் ஓசூரில் வேலை பார்க்கிறார். இளையமகன் ஸ்ரீராம் திண்டலில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறாள்.

    நேற்று இரவு வழக்கம் போல் இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். கீழ்வீடு வாடைக்கு விடப்பட்டுள்ளது. மேல் வீட்டில் ராமநாதன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. இவர்கள் 4 பேருக்கும் 25 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்கும்.

    2பேர் கீழே நின்று கொண்டனர். மற்ற 2 பேர் மாடிக்கு சென்றனர். ஒருவன் கதவை உடைத்தான். 2 பேர் கைகளிலும் அரிவாள் இருந்தது.

    கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டதும் வீட்டில் தூங்கிகொண்டிருந்த ராமநாதன் மணியம்மை, ஸ்ரீராம் 3 பேரும் முழித்தனர். ஒருவன் மணியம்மை கழுத்தில் அரிவாளை வைத்தான். இன்னொருவன் மாணவன் ஸ்ரீராம் கழுத்தின் அரிவாளை வைத்தான்.

    பிறகு கொள்ளையர்கள் “நகை பணம் இருக்கும் இடத்தை சொல்லி விடுங்கள். இல்லையென்றால் அரிவாளால் வெட்டி கொன்று விடுவோம்” என்று மிரட்டினர்.

    இதில் பயந்துபோன அவர்கள் நகை இருக்கும் இடத்தை கூறினர். பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து 35 பவுன் நகை ஒரு வைரநகை, வெள்ளி பொருட்கள், 6 செல்போன்கள் ஒரு டி.வி. ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

    வீட்டில் இருந்த 2 கண்காணிப்பு கேமிராவையும் உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறாரகள். 
    பொள்ளாச்சி அருகே நிதி நிறுவனத்தில் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் பெநசீர் (வயது 27). இவர் கிணாச்சேரியில் உள்ள ஒரு கிளை நிதி நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக மேனேஜராக உள்ளார்.

    மார்ச் மாதம் இந்த அலுவலகத்தில் தணிக்கை நடைபெற்றது. இதில் பலருக்கு நகை அடமான கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக ரசீதுகள் இருந்தன. ரசீதுகளின்படி நகை வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை பார்த்தபோது அங்கு நகைகள் இல்லை.

    இதேபோன்று பலருக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்துள்ளதாக ஆவணங்கள் இருந்தன. ஆவணங்களில் உள்ளபடி அவர்களது முகவரியை தேடியபோது அப்படி எவரும் இல்லை.

    வாங்காத நகைக்கும், இல்லாத நபர்களுக்கும் ரூ.35 லட்சம் கடன் கொடுத்தது போல் இளம்பெண் மோசடி செய்துள்ளது தணிக்கையில் தெரியவந்தது. தணிக்கை நடந்தபோது மேனேஜர் பெநாசீர் தலைமறைவானார்.

    மோசடி குறித்து அறிந்த நிதி நிறுவன அதிபர்கள் பாலக்காடு டி.எஸ்.பி. சகிக்குமாரிடம் புகார் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பெநாசீர் அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கு சென்றனர். வீட்டில் வைத்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    செய்யாறில் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்த மர்ம நபர் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் அபேஸ் செய்து விட்டு தப்பினார்.
    செய்யாறு:

    செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜின்னா (வயது 62). இவர், நேற்று முன்தினம் செய்யாறு டவுன் காசிக்காரத் தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இரவு 7½ மணி அளவில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டு சரியாக பொருந்தாததால் மீண்டும், மீண்டும் எந்திரத்தில் கார்டினை செலுத்தியுள்ளார்.

    அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த 4 பேரில் ஒருவர் ஜின்னாவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் செலுத்தியபோது வேலை செய்து உள்ளது. இதனையடுத்து அவர், ஜின்னாவிடம் ரகசிய எண்ணை கேட்டார். ஆனால் அவர் அந்த எண்ணை அவரிடம் தெரிவிக்காமல் தானாகவே ரகசிய எண்களை பதிவு செய்தார். இதனை மர்மநபர் கவனித்துள்ளார்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் எடுத்து கொடுக்கும் போது ஜின்னாவிடம் அவரது ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வேறு ஒருவரின் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை கவனிக்காமல் அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் இரவு நேரத்தில் ஜின்னாவின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் வங்கியின் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுத்துள்ளதாக வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து வங்கியின் ஏ.டி.எம். கார்டினை பார்த்தபோது தன்னுடைய கார்டு இல்லை என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வங்கிக்கு தகவல் கொடுத்து ஏ.டி.எம். கார்டினை செயலிழக்கம் செய்தார். மேலும் இதுகுறித்து ஜின்னா செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருப்பதியில் தேங்கி கிடக்கும் பயன்பாட்டில் இல்லாத 35 டன் நாணயங்களை சேலம் ஆலையில் உருக்கி உலோகங்களாக மாற்றி விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் முடிப்பு கட்டி நாணயங்களை சேகரித்து வைத்து அதை திருமலைக்கு வந்து உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளில் நாணயங்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து தேவஸ்தானம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் வரவு வைத்து வருகிறது. நாணயங்களை தேவஸ்தானம் விரும்பும் போது கணக்கிட்டு வருகிறது.

    தற்போது தேவஸ்தானத்திடம் பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள் 35 டன் நிலுவையில் உள்ளது. இவற்றை உருக்கி உலோகங்களாக மாற்றி விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி முதல் 25 பைசா மற்றும் அதற்கு கீழ் மதிப்புள்ள நாணயங்களின் பயன்பாட்டை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. ஆனால் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அனுமதி அளித்தது.

    ஆனால் தேவஸ்தானம் தன்னிடம் உள்ள நாணயங்களை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் அவை தேக்கமடைந்தன. நாணயங்களை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்று ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் கடிதம் எழுதியது.

    அதற்கு ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் கேட்காமல் தனிப்பட்ட முறையில் எவ்வித விளக்கமும் அளிக்க முடியாது என்று பதிலளித்தது.

    மேலும் நிலுவையில் உள்ள நாணயங்களை சேலத்தில் உள்ள உருக்காலையில் உருக்கி உலோகங்களாக மாற்றி விற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியது. உடனே தேவஸ்தானம் சேலம் உருக்காலையை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தது.

    அதற்கு ஆலை நிர்வாகம் நாணயங்களை உலோகத்தின்படி (அலுமினியம், கப்ரோனிகல், ஸ்டீல், தாமிரம், பித்தளை) பிரித்து அளித்தால் மட்டுமே உருக்கி அளிக்க முடியும் என்றும், அதற்கான மதிப்பு பணமாக மாற்றி அளிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

    தேவஸ்தானம் ஏதாவது எந்திரம் செய்ய உருக்காலைக்கு ஆர்டர் அளித்திருந்தால் அதிலிருந்து கழித்துக் கொள்வதாகவும் தெரிவித்தது. இதற்கு தேவஸ்தானமும் ஒப்புதல் அளித்துள்ளது.

    நாணயங்களை மாற்றிக் கொள்ள தேவையான காலக்கெடு இருந்தபோதும் தேவஸ்தான அதிகாரிகள் அவற்றை மாற்றிக் கொள்ளவில்லை.

    நாணயங்களை உருக்கினால் கிடைக்கும் மதிப்பை விட அவற்றை மாற்றியிருந்தால் அதிக தொகை கிடைத்திருக்கும். அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தேவஸ்தானத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இனியாவது பயன்பாட்டில் உள்ள நாணயங்களை தேக்காமல் உடனுக்குடன் கணக்கிட்டு வங்கியில் வரவு வைக்க வேண்டும் என்று தேவஸ்தானத்திடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
    தலைநகர் டெல்லியில் வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் 35 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ளது மாடல் டவுன் என்ற பகுதி. இப்பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் தாமிரம் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், அந்த வியாபாரி நேற்று 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு காரில் சென்றார். அவருடன் டிரைவரும், மேனேஜரும் சென்றனர்.

    அப்போது அவர்களது காரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், காரை வழிமறித்தது. தங்களது கைகளில் இருந்த துப்பாக்கியால் மிரட்டி, அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொள்ளையில் வியாபாரிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். #Tamilnews
    சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, சிறந்த சேவை புரிந்த நர்சுகளுக்கு மத்திய அரசின் சார்பில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கப்பட்டன. #InternationalNursesDay #nurses
    புதுடெல்லி:

    சிறப்பாக மருத்துவ சேவை புரியும் செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் மதிப்புமிக்க ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெறும்.

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 35 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர்.



    இந்நிலையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோர் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.

    நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் துறையில் அளித்து வரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். மேலும், நர்சிங் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.  #InternationalNursesDay #nurses

    ×