என் மலர்
நீங்கள் தேடியது "பதவியேற்பு விழா"
- அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.
புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிய போப் பதவியேற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்வு, வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் நாகாலாந்து துணை முதல்னர் யாதுங்கோ பட்டொன் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 14ம் போப் ஆக பதவியேற்றுள்ளார்.
- மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சர்மா தேர்வு செய்யப்பட்டடு இன்று பதவி ஏற்றார்.
- திரிபுராவில் பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துள்ளன. 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றும், நாளையும் பதவியேற்பு விழா நடக்கிறது.
அதன்படி, மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சர்மா தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்பு விழா இன்று காலையில் நடந்தது. கவர்னர் சத்யதேவ் நாராயன் பதவி பிரமாணம் செய்து வைக்க, மீண்டும் முதல்வராக கான்ராட் சர்மா பதவியேற்றுக் கொண்டார்.
2 துணை முதல்வராக மற்றும் அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமாவில் புதிய அமைச்சரவையில் பதவியேற்பு விழா நடந்தது.
பா.ஜ.க. கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக வளர்ச்சி கட்சி (என்.டி.பி.பி.) தலைவர் நெய்பியு ரியோ முதல்வராக பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவிலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
திரிபுரா மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடக்கிறது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார்.
முன்னதாக நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை நடைபெறும் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார்.
- மம்தாவிற்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
இதையடுத்து, பெங்களூருவில் இன்று 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார்.
இந்நிலையில், இந்த விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ககோலி கோஷ் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட திட்டக்குழு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா வருகிற 28-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திட்டக்குழு தலைவராக மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவர் சத்தியாபாமா, துணை தலைவராக கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர் 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.
மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய தலைவர்கள், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர்.
- காலம் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ வேண்டும்.
- முன்னாள் ஐ.ஜி., பாரி பேச்சு
திருப்பூர், ஜூன்.26-
திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 2023-24-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நிதியுதவி வழங்கும் விழா திருப்பூர்- மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக எஸ். இளங்கோவன், செயலாளராக ஆர். மோகன்ராஜ், பொருளாளராக ஆர். பினுமோன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். கவுரவ விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் நாராயண சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, உதவி ஆளுனர் மீனாட்சி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி., பாரி பங்கேற்று பேசியதாவது:- புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பது அவர்கள் பேசிய பேச்சிலிருந்து உணர முடிகிறது. நாம் தாய் மொழியின் பெருமையை உணர வேண்டும். மனிதராக பிறந்த நாம் பிறருக்கு கொடுப்பதால் உயர்ந்து நிற்கிறோம். தமிழ் வாழ வேண்டும் என்று ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் தனது உயர்ந்த உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விட எளியவர்களுக்கு கொடுப்பது தான் உயர்வு என்கிறார் வள்ளுவர். இந்த நவீன உலகில் நமது வரலாற்றையும்-பண்பாட்டையும் நமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.
இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் நான்கு பேருக்கு உதவி செய்யும் நிலைக்கு வர முடியும். காலமும் நேரமும் முக்கியமானது. அதனை உணர்ந்து நாம் வாழ வேண்டும். நமது பெற்றோர்களை அனாதை இல்லத்துக்கு அனுப்பாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில் தனியார் பள்ளி ஆசிரியரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம், தெற்கு ரோட்டரி பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் எந்திரம் வாங்குவதற்கு ரூ. 20 ஆயிரம், ரோட்டரி சார்பில் கட்டப்பட உள்ள முதியோர் இல்லத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டன. முதியோர் இல்லம் கட்ட 3 ஏக்கர் நிலம் வழங்கிய கனகராஜ் என்பவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட முன்னாள் தலைவர் மணி, முன்னாள் செயலாளர் விவேகானந்தன், முன்னாள் பொருளாளர் செல்வன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பதவி பிரமா ணம் செய்து வைத்தார்.
- பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் 2023-2024-ம் ஆண்டிற்கான மாணவ தலைமை பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பதவி பிரமா ணம் செய்து வைத்தார்.
பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு முழுவதும் பதவியில் இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்து பிரிவு களிலும் தத்தம் குழு மாண வர்களை வழி நடத்துவர்.
வருட இறுதியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் குழுவிற்கு சுழற்கோப்பை வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தோஷ், அருண் மற்றும் பவித்ரா செய்திருந்தனர்.
- பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
- நேபாளம், பூடான், இலங்கை பங்களாதேஷ் மற்றும் மொரீஷியஸ் தலைவர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது.
ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்திருந்ததால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவானது.
இதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜனதா தொடங்கியது.
அதன்படி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நாட்டின் அடுத்த பிரதமராக 8-ந் தேதி மாலையில் மோடி மீண்டும் பதவி ஏற்பார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. அவருடன் புதிய மந்திரி சபையும் பதவி ஏற்கும் என தெரிகிறது.
பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.

இவற்றை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி முர்மு, புதிய அரசு பதவி ஏற்கும் வரை பிரதமரும், மந்திரிகளும் தங்கள் பதவிகளிலேயே தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், இலங்கை பங்களாதேஷ் மற்றும் மொரீஷியஸ் தலைவர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் வெற்றிக்கு ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரை பதவியேற்பு விழாவிற்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, முறையான அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று கூறி அழைப்பு விடுத்தார்.
மேலும் பூடான் பிரதமர், மொரீஷியஸ் பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பதன் மூலம், கடந்த 1962-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆளும் அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு வருகிறது. நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கு பிறகு, அந்த பெருமையை மோடி பெறுகிறார்.
Leaders from neighbouring countries to be invited to Prime Minister Narendra Modi's swearing-in ceremony. Heads of Nepal, Bhutan, Sri Lanka and Bangladesh have been invited for the ceremony: Sources
— ANI (@ANI) June 6, 2024
- 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்.
- மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு கட்சிகள் அறிவித்தன.
மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரதமர் மோடி.
- பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிலைமை மேம்படும்.
3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திருநங்கைகளைச் சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி விழாவுக்கு முன், பாஜக எம்பியும், முன்னாள் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சருமான வீரேந்திர குமார் சமூகத்தினரை தனது இல்லத்தில் வரவேற்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் 'அனைவரின் ஆதரவும், அனைவரின் நம்பிக்கையும், கூட்டு முயற்சியும்' என்ற அழைப்பின் ஒரு பகுதி.
விழாவில் திருநங்கைகளை பிரதமரின் உள்ளடக்கிய செய்தியை மேம்படுத்துவதாகும். திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரதமர் மோடி.
பதவியேற்பு விழாவிற்கு திருநங்கைகள் முறைப்படி அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.
உபி பாஜக பிரிவைச் சேர்ந்த சோனம் கின்னார், புதிய அரசாங்கத்திற்கு ஆசி வழங்குவதற்காக 50 சமூக உறுப்பினர்களுடன் இங்கு வந்துள்ளனர்.
ஜாதி அடிப்படையிலான அரசியலால் பிரதமர் மோடி எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிலைமை மேம்படும்" என்றார்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
- பிரதமர் மோடி வாகன பேரணி நடத்துகிறார்.
புவனேஸ்வர்:
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியமைத்து இருந்த பிஜூ ஜனதாதளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
அதேநேரம் பா.ஜனதா கட்சி, சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 147 சட்டசபை இடங்களில் 78 தொகுதிகளிலும், 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களையும் கைப்பற்றியது.
தற்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து, ஒடிசாவிலும் புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளை அந்த கட்சி முடுக்கி விட்டு உள்ளது.
அதன்படி மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்வதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் சட்டசபை கட்சித்தலைவரை (முதல்-மந்திரி) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்கிறார்கள். சுரேஷ் பூஜாரி எம்.எல்.ஏ, மாநில பா.ஜனதா தலைவர் மன்மோகன் சமல், கே.வி.சிங், மோகன் மஜி ஆகியோரின் பெயர்கள் புதிய முதல்-மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன.
ஒடிசாவின் புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுவதை தொடர்ந்து, புதிய அரசின் பதவியேற்பு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
முன்னதாக ஜெயதேவ் விகாரில் இருந்து பதவியேற்பு விழா நடைபெறும் மைதானம் வரை பிரதமர் மோடி வாகன பேரணி நடத்துகிறார். அப்போது அவர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- அதிஷியுடன் 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிறகு டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதிஷியுடன் சௌரம் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழாவில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
- உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.
- உதயநிதி கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கவனிக்க உள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதலமைச்சரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
அதன்படி, முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கூடுதலாக கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த 6 அமைச்சர்களும் சற்று நேரத்தில் பதவியேற்க உள்ளனர்.






