search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle Rally"

    • காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.
    • வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் 26-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் மே மாதம் 7-ந்தேதியும் நடக்கிறது. கர்நாடகத்தில் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, 18-ந்தேதி சிவமொக்காவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.

    இந்த கூட்டத்தில் மைசூரு-குடகு தொகுதி வேட்பாளர் மைசூரு மன்னர் யதுவீர், மண்டியா தொகுதி வேட்பாளர் குமாரசாமி, ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளர் பால்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மைசூரு பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் மாலை 6 மணி அளவில் மங்களூருவுக்கு செல்ல உள்ளார். முதலில் மங்களூரு கோல்டு பிஞ்ச் சிட்டி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டு, தற்போது வாகன பேரணி (ரோடு ஷோ) நடக்கிறது. மைசூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். இந்த வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    லேடிஹில் நாராயணகுரு சர்க்கிளில் இருந்து தொடங்கும் இந்த வாகன பேரணி லால்பாக், மங்களூரு மாநகராட்சி அலுவலகம், பல்லால்பாக், எம்.ஜி.ரோடு, பி.வி.எஸ். சர்க்கிள், கே.எஸ்.ராவ் ரோடு வழியாக ஹம்பன்கட்டா சிக்னல் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் நடக்க உள்ளது. இந்த வாகன பேரணியில் சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகன பேரணியின் போது பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் பிரிஜேஷ் சவுடாவை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.

    இந்த வாகன பேரணியையொட்டி மங்களூரு நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வாகன பேரணி நடக்கும் லேடிஹில் பகுதியில் இருந்து ஹம்பன்கட்டா சிக்னல் வரை பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் மங்களூரு பதற்றமான பகுதி என்பதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கர்நாடக வருகையையொட்டி பா.ஜனதாவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது.
    • இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது. இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தது. ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் வாகன பேரணிக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச்செய லாளர் ராஜாமணி, ஒட்ட ன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் பொன்ராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் ஹரி ஹரசுதன், துணை அமை ப்பாளர் ரவிசங்கர் உள்ளி ட்ட ஏராளமான நிர்வாகிகள் இரு சக்கர வாகன பேரணி க்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    • தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
    • இதில் பரமக்குடிக்கு வருகை தந்த இளைஞர்களுக்கு முருகேசன் எம்.எல்.ஏ. அசைவ விருந்து வழங்கினார்.

    பரமக்குடி

    தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

    இதைெயாட்டி இளை ஞர் அணி மாநில மா நாட்டையொட்டி இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இந்த இருசக்கர வாகன பேரணி செல்லும் நிலையில் நேற்று ராமநாதபுரத்திற்கு வருகை தந்தது.

    பேரணியில் 188 பேர் பங்கேற்றுள்ளனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணிக்கு முருகேசன் எம்.எல்.ஏ. தலைமையில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இருசக்கர வாகன பேரணியில் வந்தவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஏற்பாட்டில் தனியார் கல்யாண மண்டபத்தில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    ஆட்டுக்கறி குழம்பு, நாட்டுக்கோழி கிரேவி, வஞ்சரம் மீன் வறுவல், சிக்கன், மீன் குழம்பு என விருந்து அளிக்கப்பட்டது. இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உணவு பரிமாறினர்.

    • வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது உருவசிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அதனைத்தொடர்ந்து தூத்துக்குடிக்கு வந்த தி.மு.க. மோட்டார் சைக்கிள் பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    தூத்துக்குடி:

    வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது உருவ சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

    இதில் துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாள ரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், பகுதி செய லாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் மாரியப்பன், பொன்னப்பன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், தூத்துக்குடி - எட்டையாபுரம் ரோட்டில் சாலை ஓரத்தில் போக்கு வரத்திற்கும், மழை நீர் வடிகாலுக்குள் செல்வ தற்கும் இடைஞ்சலாக இருந்த மணல் திட்டுக்கள் அகற்றும் பணி, கிருஷ்ண ராஜபுரம் பகுதியில் நடை பெற்று வரும் புதிய வடிகால் மற்றும் தார் சாலை பணி களையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து தூத்துக்குடிக்கு வந்த தி.மு.க. மோட்டார் சைக்கிள் பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது மேயர் கூறுகை யில்,

    தமிழ்நாட்டின் மாநில உரிமை மீட்புக்காக தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் சேர்க்கும் விதமாக பேரணியாக செல்லும் 188 வாகன பேரணியை வரவேற்கிறோம் என்றார்.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞ ரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கர நாராயணன், ரவி, முகமது, வக்கீல் டி.டி.சி.ஆர்.பிரவின்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணியானது கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கியது.
    • தலைகாய முதலுதவி சிகிச்சை முறைகளை பற்றி மருத்துவர் ஷியாவுல்லா விளக்கினார்.

    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக தலைகாய விழிப் புணர்வு வாகன பேரணி இன்று நடைபெற்றது. கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு ஷிபா மருத்துவமனைகள் மருத்துவ இயக்குநர் டாக்டர் முஹம்மது அராபத் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுப்பிரமணியன், முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பாளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியானது வண்ணார்பேட்டை, சமாதானபுரம் வழி யாக மேட்டுத்திடல் முஸ்லீம் அனாதை நிலைய வளாகத்தில் நிறை வடைந்தது. நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், சதக்அப்துல்லா கல்லூரி மாணவ-மாணவிகள், மருந்து விற்பனை பிரதிநிதி சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் தலைகாய முதலுதவி சிகிச்சை முறைகளை பற்றி ஷிபா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஷியாவுல்லா விளக்கினார்.

    உலக தலைகாய தின சிறப்பு செய்தியினை மருத்துவமனையின் மூளை நரம்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ், நரம்பியல் நிபுணர் டாக்டர் அழகேசன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக எம்.கே.எம். செய்யது அஹமது கபீர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மார்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

    • 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாகன பேரணி நடைபெற்றது.
    • இரு சக்கர வாகன பேரணி கணபதிபாளையம் மற்றும் கரைப்புதூர் வழியாக நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில், பா.ஜ.க. சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாகன பேரணி நடைபெற்றது.

    பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணி கணபதிபாளையம் மற்றும் கரைப்புதூர் வழியாக நடைபெற்றது. இதில் ஒன்றியத் தலைவர் பூபாலன், மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், நித்யா ஆனந்தகுமார், யுவராஜ், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியில், மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார், ஒன்றிய தலைவர் ராஜ்குமார், பொதுச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் நிர்வாகிகள் மயில்சாமி, பிரதீப் சக்தி ரமேஷ் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×