பல்லடத்தில் பா.ஜ.க. சார்பில் வாகன பேரணி

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாகன பேரணி நடைபெற்றது. இரு சக்கர வாகன பேரணி கணபதிபாளையம் மற்றும் கரைப்புதூர் வழியாக நடைபெற்றது.
 வாகன பேரணி நடைபெற்ற காட்சி. 
 வாகன பேரணி நடைபெற்ற காட்சி. 
Published on

பல்லடம் :

பல்லடத்தில், பா.ஜ.க. சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாகன பேரணி நடைபெற்றது.

பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணி கணபதிபாளையம் மற்றும் கரைப்புதூர் வழியாக நடைபெற்றது. இதில் ஒன்றியத் தலைவர் பூபாலன், மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், நித்யா ஆனந்தகுமார், யுவராஜ், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியில், மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார், ஒன்றிய தலைவர் ராஜ்குமார், பொதுச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் நிர்வாகிகள் மயில்சாமி, பிரதீப் சக்தி ரமேஷ் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com