என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்
    X

    லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

    • உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.
    • உதயநிதி கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கவனிக்க உள்ளார்.

    தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதலமைச்சரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

    அதன்படி, முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

    துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கூடுதலாக கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, இந்த 6 அமைச்சர்களும் சற்று நேரத்தில் பதவியேற்க உள்ளனர்.

    Live Updates

    • 29 Sept 2024 3:45 PM IST

      முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

    • 29 Sept 2024 3:42 PM IST

      சா.மு. நாசர் மீண்டும் தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 

    • 29 Sept 2024 3:40 PM IST

      கோவி செழியன் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 

    • 29 Sept 2024 3:38 PM IST

      பதவியேற்பு நிகழ்ச்சியில், இரா. இராஜேந்திரனுக்கு முதலில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றுக் கொண்டார்.

    • 29 Sept 2024 3:34 PM IST

      இரா. இராஜேந்திரனுக்கு முதலில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

    • 29 Sept 2024 3:31 PM IST

      புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநர் ஆர்.என். ரவி வருகை. தமிழ் தாய் வாழ்த்துடன் பதவியேற்பு நிகழ்ச்சி தொடக்கம்.

    • 29 Sept 2024 3:27 PM IST

      துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    • 29 Sept 2024 3:21 PM IST

      அமைச்சரவையில் மாற்றம், பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் மாளிகை வந்தடைந்தார்.

    • 29 Sept 2024 3:18 PM IST

      துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி, மகளுடன் ஆளுநர் மாளிகை வந்தடைந்தார்.

    • 29 Sept 2024 3:14 PM IST

      பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள் வருகை.

    Next Story
    ×