என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது.
    • இதையடுத்து, தந்தை - மகள் இருவரும் நேரில் சந்தித்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரைச் சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். இவர் தனது பள்ளி பருவத்தில் ஜாக்கி என்பவரை காதலித்து வந்தார்.

    அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பள்ளி பருவம் என்பதால் அவர்களது பெற்றோர் இதனை அவமானமாகக் கருதினர்.

    எனவே அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையை தத்து கொடுத்தனர். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தன.

    இதற்கிடையே, கடந்த 2013-ம் ஆண்டு ஜாக்கி இறந்தார். அதன்பிறகு சிறு வயதில் தத்து கொடுத்த தனது மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்தார். இதற்காக தனியார் தொலைக்காட்சி உதவியை நாடினார்.

    இந்நிலையில், அவரது மகள் ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர்.

    50 ஆண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு இங்கிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார்.
    • டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல அம்பயர் ஹரோல்ட் டிக்கி பேர்ட், வயது முதிர்வால் இன்று காலமானார் (92).

    இங்கிலாந்தின் யார்க்ஷைரின் பர்ன்ஸ்லே பகுதியைச் சேர்ந்தவர் ஹரோல்ட் டிக்கி பேர்ட். இவர் 1956 முதல் 1965 வரை யார்க்ஷையர் மற்றும் லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக 93 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2 சதமடித்துள்ளார்.

    1970-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்ற துவங்கினார். அதன்பின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக அறிமுகமானார். அது முதல் 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார். அதில் 3 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களும் அடங்கும். டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் அவரது ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

    கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பணிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். டிக்கி பேர்ட் மரணத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது.

    இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில் லண்டனில் பிரமாண்ட பேரணி நடந்தது.

    சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது. இதில் 26 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகிய வற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. ஆனால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

    மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ , அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.
    • 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கம் வென்றார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, கஜகஸ்தான் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    ஏற்கனவே பெண்கள் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
    • ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    நாட்டிங்காம்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுவதாக இருந்தது. அங்கு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருது பில் சால்டுக்கு அளிக்கப்பட்டது.

    ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
    • மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.

    வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

    தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், "வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள். இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.

    • பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

    தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதலில் ஆடிய ஹாம்ப்ஷையர் அணி 194 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சாமர்செட் அணி 19 ஓவரில் வெற்றி பெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று.

    இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் ஹாம்ப்ஷையர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சாமர்செட் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஹாம்ப்ஷையர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் டோபி ஆல்பர்ட் அரை சதமடித்து 85 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜே.வின்ஸ் 52 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சாமர்செட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வில் ஸ்மீட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன் குவித்தார்.

    இறுதியில், 19 ஓவரில் சாமர்செட் அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது வில் ஸ்மீடுக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 304 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் பிலிப் சால்ட் 39 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை பிலிப் சால்ட் படைத்தார். இவர் 39 பந்தில் சதமடித்தார்.

    ஏற்கனவே, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதமடித்திருந்தார். அந்த சாதனையை பிலிப் சால்ட் முறியடித்துள்ளார்.

    • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார். பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் மார்கிரம் மட்டும் அதிரடியாக ஆடி 41 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.

    மான்செஸ்டர்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பிலிப் சால்ட் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் இங்கிலாந்து 100 ரன்களைத் தொட்டது.

    முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிலிப் சால்ட் சதமடித்து அசத்தினார். 2வது விக்கெட்டுக்கு பிலிப் சால்ட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி 95 ரன்கள் சேர்த்த நிலையில் பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்துள்ளது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார்.

    • திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களை இங்கு பார்க்கிறேன்.
    • சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விடமாட்டோம்.

    லண்டன் நகரில் நடைபெற்ற தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * உலகில் எங்கு சென்றாலும் தமிழர்களாகிய நாம் நமது மொழியையும் பண்பாட்டையும் விடமாட்டோம்.

    * சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விடமாட்டோம்.

    * திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களை இங்கு பார்க்கிறேன்.

    * தமிழுக்குத் தீங்கு நினைக்கும் யாருடைய எண்ணமும் ஒருபோதும் நிறைவேறாது.

    * தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்கிற தூதுவர்களாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திகழ்கின்றனர்.

    * சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன.

    * தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×