என் மலர்
நீங்கள் தேடியது "Booker Prize"
- இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது புக்கர் பரிசு.
- இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய்க்கு அறிவிக்கப்பட்டது.
லண்டன்:
இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் பரிசு இங்கிலாந்து அரசாங்கத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் நாடுகளுக்கு வழங்கப்பட்ட இந்த விருது தற்போது உலக நாடுகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய் எழுதிய பிளெஷ் என்னும் புனைவு நாவலுக்கு அறிவிக்கப்பட்டது.
கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து தற்போது ஹங்கேரி நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இது பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவு குறித்து பேசப்படுவதாக அமைந்துள்ளது.
லண்டனில் அவருக்கு புக்கர் பரிசுக்கான நினைவு சின்ன கோப்பையும், ரூ.55 லட்சத்திற்கான (66 ஆயிரம் டாலர்கள்) காசோலையும் வழங்கப்பட்டது.
- நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன.
- பானு முஷ்டாக் கன்னட மொழியில் எழுதிய நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
லண்டன்:
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன. இதில் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ஹார்ட் லாம்ப் எனும் நூலும் ஒன்றாகும்.
இந்நிலையில், கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.
பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
புக்கர் பரிசு பெறும் புத்தக்கத்துக்கு 50,000 யூரோ பரிசுத்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
- புக்கர் பரிசு போட்டிக்கு பெருமாள் முருகனின் நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ என்ற இந்திய எழுத்தாளர் புக்கர் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ் (ரூ.50 லட்சம்) பரிசுத்தொகை கொண்ட விருது. எழுத்தாளருக்கும், மொழி பெயர்த்தவருக்கும் இத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான போட்டிக்கு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'பைர்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவல், 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அனிருத்தன் வாசுதேவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
வெவ்வேறு சாதியை சேர்ந்த காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிச்செல்வது பற்றியும், ஆணவ கொலை பற்றியும் இதன் கதை அமைந்துள்ளது. வேறு 12 எழுத்தாளர்களின் நாவல்களுடன் 'பைர்' நாவல் போட்டியிடுகிறது. தனது நாவல் தேர்வு செய்யப்பட்டதற்கு பெருமாள் முருகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது, தனது மிக முக்கியமான புத்தகம் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ என்ற இந்திய எழுத்தாளர் புக்கர் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.






