என் மலர்tooltip icon

    உலகம்

    • கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
    • நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல

    ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதுமுதல் உலக சுகாதர அமைப்பில் இருந்து வெளியேறுவது, உலக நாடுகளுக்கான யுஎன்- எய்ட் நிதியுதவியை நிறுத்துவது உள்ளிட்ட முடிவுகளை அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. ஆனால் கொலம்பியா அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை நிராகரித்தது. இதனால் கோபம் தலைக்கேறிய டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

    முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களைத் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்த டிரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும், கொலம்பிய நாட்டு அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசா ரத்து, கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் அவசரகதியில் டிரம்ப் பிறப்பித்தார்.

    இதற்க்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார். நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் கொலம்பிய அதிகாரிகளின் விசா ரத்து, பயணிக்க தடை உள்ளிட்டவை குறித்து பேசிய குஸ்டாவோ பெட்ரோ, நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

     

    இந்நிலையில் கொலம்பியா தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென யு டர்ன் அடித்து, அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

    கொலம்பியா அரசு, ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு கடத்தும் விமானங்களில் நாட்டிற்கு வரவிருக்கும் சக நாட்டவர்கள் பாதுகாப்பாக திரும்புவதையும், கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.   

    எந்த சூழ்நிலையிலும் திரும்ப வந்தவர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடான கொலம்பியா தன்னிடம் அடிபணிந்ததை அடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி உயர்வு, விசா ரத்து, பயண தடை ஆகியவற்றை அமெரிக்கா திரும்பப்பெற்றுள்ளது.

    பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 

     

    • உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • மனித உரிமைகளை மீறும் செயல்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் அதிபர் டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.

    இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் தெரிவித்து இருக்கிறது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கி வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். மேலும், விமானத்தில் குளிரூட்டி இயக்கப்படவில்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்டவர்களில் சிலர் குற்றம்சாட்டினர்.

    மேலும், சிலர் விமானத்தினுள் அதிக வெப்பம் காரணமாக சிலருக்கு மயங்கினர் என்றும், பயணிகள் கழிவறையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்ட பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பயணிகளை மிக மோசமாக நடத்தியது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • வெள்ளை மாளிகை சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையில் சண்டையை ஏற்படுத்தியது.

    லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    "அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்" என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் டொனால்டு டிரம்பின் வெள்ளை மாளிகை கூறியது. இது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையில் சிறிய அளவில் சண்டையை ஏற்படுத்தியது.

    தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேற்றும் இஸ்ரேல் படைகள் 22 பேரை கொன்ற நிலையில் போர் நிறுத்தம் என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது என லெபனான் சுகாதார துறை தெரிவித்தது.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.
    • சர்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை தொடரும் என்றார்.

    மாஸ்கோ:

    இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிபர் புதின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    75 ஆண்டுக்கு முன் நடைமுறைக்கு வந்த அரசமைப்பு சட்டம், திறன்வாய்ந்த அரசு அமைப்புகளை கட்டமைக்கவும், இந்தியாவின் சுதந்திர, ஜனநாயக வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டது.

    அப்போது முதல் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சர்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளது.

    சர்வதேச ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்குகிறது.

    இந்தியா உடனான எங்கள் உறவுகளை மிகவும் மதிக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் ஆக்கப்பூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து கட்டமைக்கவும், சர்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை தொடரவும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் நீடிக்கும் என தெரிவித்தார்.

    • நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்தில் சிக்கியது.
    • இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைஜீரியாவின் நிஜர் மாகாணத்தில் இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறி 98 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் 3 வெவ்வெறு சம்பவங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள லக்கி மார்வத் பகுதியில் 18 பயங்கரவாதிகள் பலியாகினர்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் 3 வெவ்வெறு சம்பவங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3,000 கிராம் வெடிபொருட்கள், 11 டெட்டனேட்டர்கள், 22 அடி பாதுகாப்பு ஃப்யூஸ் கம்பி, தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பகுதியில் அமைந்துள்ள லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 பயங்கரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், லக்கி மார்வத் மாவட்டத்தில் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், பயங்கரவாத தடுப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 பயங்கரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் சேர்த்து மொத்தம் 26 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

    • ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது.
    • மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை இவ்விரு நாடுகளும் உறுதி செய்வதால் அவரின் நிதியில் டிரம்ப் கைவைக்கவில்லை

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வரும் டிரம்ப் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த யுஎஸ்-எய்ட் நிதி உதவியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

    சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு போக்குதல், நோய் பாதிப்பைத்த் தடுக்க உதவுதல் உள்ளிட்டவற்றில் வளர்ச்சியில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உலக வல்லரசான அமெரிக்காவின் நிதி உதவி கிடைத்து வந்தது.

    யுஎஸ்-எய்ட் [USAID] என்ற சுயாதீன அமைப்பு இதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர்ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் 2003-ல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது.

     

    இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய உதவிகளுக்கான நிதியை 90 நாட்களுக்கு முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் புதிதாக இனிமேல் ஏதும் நிதி வழங்கப்படாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    சூடான் உள்ளிட்ட கடும் பஞ்சத்தால் வாடும் நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் ஆண்டுதோறும் அமெரிக்காவிடமிருந்து ராணுவ உதவியாக 3.3 பில்லியின் டாலர் பெறுகிறது, எகிப்து 1.3 பில்லியின் டாலர் பெறுகிறது.

    மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை இவ்விரு நாடுகளும் உறுதி செய்வதால் அவரின் நிதியில் டிரம்ப் கைவைக்கவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நிதியுதவி அளிக்கத் தடை அமலில் உள்ள 90 நாட்களுக்குப் பின் உத்தரவை நீடிப்பதா அல்லது விலக்கிக்கொள்வதா என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

     

     

    இதற்கிடையே பிராந்திய சிக்கல்களுக்கு அமெரிக்காவைப் பெரிதும் நம்பியுள்ள உக்ரைன், தைவான் மற்றும் எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியாவை உள்ளடக்கிய பால்டிக் நாடுகளை இந்த தடை மிகவும் பாதிக்கும்.

    ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஜோ பைடன் அதிக உதவிகளை அளித்து வந்த நிலையில் டிரம்ப்பின் நிதி நிறுத்தம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போதைக்கு போர்க்கால உதவிகள் ஏதும் நிறுத்தப்படவில்லை, கடவுளுக்கு நன்றி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் ஆறுதல் அடைந்துள்ளார்.  

    அமெரிக்காவின் இரக்கமற்ற இந்த முடிவின் விளைவு கொடூரமானதாக இருக்கும் என யுஎஸ் எய்ட் அமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எய்ட்ஸ் நிவாரணத்திற்கான அமெரிக்க அதிபரின் அவசர நிதியுதவி திட்டமும் யுஎஸ் - எய்ட் நிதி முடக்கத்தால் பாதிக்கப்படும்.

    அமெரிக்க உதவியை நிறுத்துவது, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்களிடம் இருந்து நிதியுதவி பெறும் நிர்பந்தத்துக்கு சர்வதேச நாடுகளை உட்படுத்தும் யுஎஸ் காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதர அமைப்பில் இருந்தும் அமெரிக்கா விளங்கியுள்ளதும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதர அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகியில், ஒரு நாடு எவ்வளவு வளமானதாக இருக்கிறதோ அதற்கேற்ப அந்த நாடு பிறநாடுகளின் மேம்பாட்டுக்காக நிதியுதவி செலுத்தும்.

    ஒரு நாட்டின் ஜிடிபியில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அந்நாடு ஒதுக்கும். மிக முக்கியத்துவம் வாய்ந்த, மிகப்பெரிய நாடான அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய முடிவு நல்லது அல்ல என்று தெரிவித்துள்ளார். 

     

    • ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டத்தில் 5 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
    • ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

    அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.

    பிணைக்கைதிகளான ஆகிய 3 இளம்பெண்களை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் நேற்று விடுவித்தது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 

    பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வந்தடைந்த அவர்கள், உடல்நிலை பரிசோதனைக்கு பின் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. 

     

    ஆனால் ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டத்தில் 5 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் 4 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி நேற்று, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

    இந்நிலையில், ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் இடம்பெயர்ந்த ஆறரை லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாசின் அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது Kibbutz Nir Oz பகுதியில் இருந்து அர்பெல் யாஹுட் கடத்தப்பட்டார். அதே தாக்குதலில் அவரது சகோதரர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் பலர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    • இந்தியா-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது.
    • இந்தியர்களுக்கு அமெரிக்கா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    நாட்டின் 76-வது குடியரசு தின விழா நாடு முழுக்க கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில் அமெரிக்கா குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது.

    குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியர்களுக்கு அமெரிக்கா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் இந்த நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக நீடித்திருக்கும் இந்தியாவின் முக்கியத்துவத்தை நாங்களும் அங்கீகரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீன்வர்களை கைது செய்தது.
    • மீனவர்களின் விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டன.

    தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது.

    மேலும், மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

    • மருத்துவமனை மீது டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 67 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.

    போர்ட் சூடான்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் ஆளில்லா விமானம் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 67 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
    • கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் விடுவிக்கப்பட்டனர்.

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

    அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.

    பிணைக்கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுத்துள்ளது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.

    ×