என் மலர்tooltip icon

    உலகம்

    • கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு.
    • டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லை என்றால், ரஷியா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும் என்று டிரம்ப் கூறினார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    அதன்படி 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத புதிய வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    நாம் பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும், அவர்களிடம் எந்தவிதமான வரிகளையும் அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்காமல் மானியம் வழங்கி வருகிறோம்.

    இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது உலக அமைதி ஆபத்தில் உள்ளது. சீனா மற்றும் ரஷியா கிரீன்லாந்தை விரும்புகின்றன. அதை தடுக்க டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது.

    அமெரிக்காவின் வசம் இருந்தால் மட்டுமே இந்த புனிதமான நிலப்பகுதியை யாரும் தொடமாட்டார்கள். உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க, இந்த அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

    எனவே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,நார்வே, சுவீடன்,நெதர்லாந்து பின்லாந்து ஆகிய 8 நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் படும்.

    அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் வாங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஜூன் 1-ந்தேதி இந்த வரி விகிதம் 25 சதவீதமாக உயரும். கிரீன்லாந்தை முழுமை யாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.

    இந்த நாடுகள் "அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அவை மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றன.

    கிரீன்லாந்தை சொந்தமாக்க அமெரிக்கா 150 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறது. டென்மார்க் மற்றும் இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கிரீனலாந்தில் மக்கள் பேரணி நடத்தினர். இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேசிய கொடியை அசைத்தப்படி கிரீன்லாந்து விற்பனைக்கல்ல" என்று முழக்கமிட்டனர்.

    • ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு.
    • அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

    போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

    போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், போராட்டம் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாது.

    இதற்கிடையே, ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஈரானில் புதிய அரசை அமைப்பதற்கான காலம் நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    கமேனி போன்ற பலவீனமான தலைவரின் ஆட்சியின் கீழ் வாழத் தகுதியற்ற நாடாக ஈரான் மாறிவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

    • மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
    • மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு நேற்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 11 பேர் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கி இருக்கலாம் எனவும், அதில் பயணித்த அனைவரும் உயி இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம் என டிரம்ப் தூண்டிவிட்டார்.

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத்தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் ஏற்பட்ட வன்முறை மற்றும் அதன்மூலம் ஏற்பட்ட உயிரிழப்புக்கு காரணமாக போராட்டத்தை ஆதரித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என ஈரான் உச்சதலைவர் அபயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

    ஈரான் டெலிவிசனில் பேசிய கமேனி "போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியின்போது, அமெரிக்க அதிபர் நேரடியாகப் பேசி, கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டு, "நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம்" என்று கூறினார்.

    அமெரிக்கா ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாகவும், ஈரானிய தேசத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாகவும், நாங்கள் அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாகவே கருதுகிறோம்.

    போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் காலாட்படை வீரர்கள். அவர்கள் மசூதிகளையும் கல்வி மையங்களையும் அழித்துவிட்டனர். மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் அவர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.

    இவ்வாறு கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

    • பனி மூட்டத்தால் முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தன.
    • கிராம சாலை வழியாக சென்றபோது லாரி விபத்துக்குள்ளானது.

    பாகிஸ்தானில் மோசமான பனி மூட்டம் காரணமாக டிரைவருக்கு சாலை தெரியாமல் போனதால், பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் உள்ளது சர்கோதா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள கோட் மொமின் என்ற பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் டிரைவர் கிராமம் வழியாக உள்ளூர் சாலை வழியாக லாரியை ஓட்டிச் சென்றார். லாரியில் 23 பேர் இருந்தனர். இவர்கள் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார்.

    பனி மூட்டத்தை சமாளித்து டிரைவர் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென பாலம் ஒன்று வந்தது. பனி மூட்டத்தால் டிரைவரால் அதை சரியான பார்க்க முடியவில்லை. திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் லாரியில் இருந்து 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 8 பேர் குழந்தைகள் ஆவார்கள். காயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவார்கள்.

    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.
    • 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய 3 நாடுகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. வீட்டு கூரைகளில் தவித்தவர்களை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். மழை-வெள்ளத்தில் மொசாம்பிக் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜிம்பாப்வேயில் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன என்றும், பள்ளிகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் இடிந்து விழுந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தென் ஆப்பிரிக்காவில் மழை-வெள்ளத்துக்கு 30 பேர் பலியாகி உள்ளனர். அங்கு வடக்கு லிம்போபோ மாகாணத்தில் வீடுகளின் கூரைகள், மரங்களில் தஞ்சமடைந்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

    • அமெரிக்கா-வெனிசுலா இடையேயான உறவுகள் மேம்பட்டு வருகிறது.
    • நாட்டை நடத்தி வரும் பலருடன் பேசி வருகிறோம்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்துவதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவம் வெனிசுலாவுக்குள் நுழைந்து கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா நிர்வகித்து விற்பனை செய்யும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    வெனிசுலாவின் எண்ணெய் துறையை அமெரிக்காவுக்கு திறக்க இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் வெனிசுலா இடைக்கால அரசாங்கத்துடன் அமெரிக்காவுக்கு சுமூக உறவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

    அமெரிக்காவிற்கு 5.2 பில்லியன் டாலர் மதிப்பு உள்ள (ரூ.47ஆயிரத்து 186 கோடி) 5 கோடி பேரல்கள் எண்ணெய்யை வழங்க வெனிசுலா முன்வந்து உள்ளது. அந்த ஒப்பந்தத்திற்கு நான் ஒப்பு கொண்டு உள்ளேன். இதன்மூலம் அமெரிக்கா-வெனிசுலா இடையேயான உறவுகள் மேம்பட்டு வருகிறது. நாங்கள் வெனிசுலாவின் புதிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாட்டை நடத்தி வரும் பலருடன் பேசி வருகிறோம். அவர்கள் எங்களிடம் 5 கோடி பேரல் எண்ணெய் உள்ளது. அதை உடனடியாகச் சுத்திகரிக்க வேண்டும். ஏனென்றால் எங்களிடம் சேமித்து வைக்க இடமில்லை. நீங்கள் அதை எடுத்துக்கொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் அதை எடுத்துக்கொள்வோம் என்று கூறினேன். அதற்கு நான் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை. தற்போது வெனிசுலா இடைக்கால அதிபருடனும் மற்ற அனைவருடனும் எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது.

    இதனால் இரு நாடுகள் இடையே பெரும் அழுத்தம் தணிந்துள்ளது.

    இப்போது எனக்கு வெனிசுலாவை மிகவும் பிடிக்கும். அது ஒரு அற்புதமான நாடு என்று நினைக்கிறேன். அந்த நாடு ஒரே வாரத்தில் வியக்கத்தக்க வகையில் மாறிவிட்டது என்றார். 

    • அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம்.
    • டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, தன்னாட்சி பெற்ற பகுதியாக செயல்பட்டு வரும் கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வாஷிங்டனில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம் என கூறினார். மேலும், கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்காத எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
    • நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    டெஹ்ரான்:

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.

    இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3,090 ஆக உயர்ந்துள்ளது. இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்கா- ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மத்திய கிழக்கு, மேற்கு ஆசிய பிராந்தியங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தை ஈரான் அரசு கடுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் போராட்டக்காரர்களுக்கும், ஈரான் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதி மற்றும் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ஈரான் அதிபர் பெசாஸ்கியான் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஸ்திரதன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த பிராந்தியங்களில் டிப்ளமேட்டிக் மூலமாக உறுதிப்படுத்துவது, இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்

    ஈரானைச் சுற்றியும் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலவும் பதற்றங்களை கூடிய விரைவில் தணிப்பதற்கு ஆதரவாக ரஷியாவும் ஈரானும் தொடர்ந்து ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும், மேலும், எழும் பிரச்சினைகளை அரசியல் மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமாக மட்டுமே தீர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் புதின் மற்றும் பெசாஸ்கியான் தங்கள் உறுதிபாட்டை வெளிப்படுத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    • டிசம்பர் கடைசியில் இருந்து கனமழை பெய்துள்ளது.
    • தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே போன்ற நாடுகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வடக்கு மாகாணங்களில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தென்ஆப்பிரிக்காவில் ஒரு வாரத்திற்குள் 400 மி.மீ. மழை பெய்துள்ளது.

    மொசாம்பிக் நாட்டில் மழை சீசனுக்கு மாறாக திடீரென கனமழை பெய்ததில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி, வெள்ளத்தில் மூழ்கி, கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை மற்றும் காலரா மூலமாகவும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    மொசாம்பிக் நாட்டின் மத்திய தெற்கு பிராந்தியங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 2 லட்சம் மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 ஆயிரம் மக்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ஜிம்பாப்வேயில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளனர்.

    மடாகஸ்கரில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாலவி மற்றும் சாம்பியா நாடுகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    • ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி சட்டத்தை கொண்டு வந்தார்.
    • பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார்.

    தென்கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக் யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இவ்விவகாரத்தால் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராணுவ சட்டம் அமல்படுத்தியது தொடர்பாக யூன் சுக் யோலுக்கு எதிரான சில குற்றச்சாட்டுகளில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கோர்ட்டு விதித்து உள்ளது. அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறியது போன்ற பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான 8 குற்றவியல் வழக்குகளில் இது முதல் தீர்ப்பு ஆகும்.

    ×