என் மலர்tooltip icon

    உலகம்

    தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கனமழை- வெள்ளம்: 100 பேர் பலி
    X

    தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கனமழை- வெள்ளம்: 100 பேர் பலி

    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.
    • 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய 3 நாடுகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. வீட்டு கூரைகளில் தவித்தவர்களை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். மழை-வெள்ளத்தில் மொசாம்பிக் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜிம்பாப்வேயில் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன என்றும், பள்ளிகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் இடிந்து விழுந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தென் ஆப்பிரிக்காவில் மழை-வெள்ளத்துக்கு 30 பேர் பலியாகி உள்ளனர். அங்கு வடக்கு லிம்போபோ மாகாணத்தில் வீடுகளின் கூரைகள், மரங்களில் தஞ்சமடைந்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

    Next Story
    ×