என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்திய மக்கள்தொகையில் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
    • உ.பி.யில் சில மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம்.

    மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் இன்று நடைபெற்ற 'திங்க் இந்தியா' மாநாட்டில் கலந்துகொண்டார்.

    இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கிறது என்று கூறுபவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள்.

    கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின்(NEP) கீழ் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் அரசியலைத் தவிர்க்க வேண்டும்.

    மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதியை தர முடியும். நிதியுதவி உள்ளிட்ட மத்திய அரசின் முயற்சிகள் மாணவர் நலன் மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

    மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். இது சரியானது அல்ல. கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் நிலைப்பாட்டை திணிக்கக் கூடாது.

    நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இதைத் தெளிவுபடுத்திவிட்டேன். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம் என பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர இத்தனை மொழிகள் கற்பிக்கப்படும்போது, மூன்றாவது மொழியால் என்ன பிரச்சனை?  

    நாங்கள் எந்த மொழியையும் யாரையும் மீது திணிக்கவில்லை. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு மொழிகளும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஒரு மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். மற்ற இரண்டு மொழிகளை மாணவர்களே தேர்ந்தெடுக்கலாம்.

    பல மாநிலங்கள் மும்மொழி கொள்கையைப் பின்பற்றுகின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில், மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், மராத்தி அல்லது அவர்கள் விரும்பினால் தமிழைக்கூட தேர்வு செய்யலாம்.

    இந்தியாவில் சுமார் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் தாய்மொழிகள் அல்லது பிராந்திய மொழிகளைப் பேசுகிறார்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மொழியை ஆழமாக நேசிக்கிறார்கள். நான் ஒரு ஒடியா, எனக்கும் என் மொழி மீது அன்பு உண்டு, ஆனால் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன். மொழியின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயன்றவர்கள் தோல்வியடைந்துவிட்டனர். சமூகம் அதைத் தாண்டி முன்னேறிவிட்டது" என்று தெரிவித்தார்.

    மேலும் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை நிறுத்தி வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதான், "இது ஒரு அரசியல் பிரச்சினை. நான் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் பலமுறை இதைப்பற்றி பேசியுள்ளேன். நாடு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்றுக்கொண்டது. அதை நாம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை.

    மத்திய அரசு பல திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளது. வயது வந்தோர் கல்வித் திட்டங்களுக்கும், பிரதமர் போஷன் (மதிய உணவு) திட்டத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசஷ் மற்றும் எம்.பி கனிமொழியை நேரில் சந்தித்தபோது RTE நிதி குறித்து மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.

    மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் இதில் அரசியல் நலன்களைக் கொண்டு வர வேண்டாம். நான் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன் " என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.  

    • மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவி ஆவார்.
    • சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா காலமானார். அவருக்கு வயது 86.

    வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று ( 21.09.25 ) மாலை அவர் காலமானார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    நாளை (22.09.25) மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. கீதா ராதா மறைக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

    • பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 171 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்தபோது பகர் சமான் 15 ரன்னில் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு இணைந்த பர்ஹான், சயீம் அயூப் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக பர்ஹான் சிக்சர், பவுண்டரிகளை விளாசி அரை சதம் கடந்தார்.

    இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் சயீம் அயூப் 21 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பர்ஹான் 58 ரன்னில் வெளியேறினார். முகமது நவாஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
    • இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.

    காசா சிட்டி:

    பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

    இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

    இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரித்ததற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு

    வரவேற்பு தெரிவித்துள்ளது.

    • நமது நடத்தை அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவர் நபிகள் நாயகம்.
    • இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் அரசியல் இயக்கம் திமுக.

    நபிகள் நாயகம் 1500வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    அண்ணாவும், கலைஞரும் சந்தித்துக் கொண்டது மிலாது நபி விழாவில் தான். இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் அந்த சந்திப்பின்போது தான் அமைந்தது.

    இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவருக்கும் இடையிலான ஒற்றுமை நீடிக்க வேண்டும்.

    நமது நடத்தை அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவர் நபிகள் நாயகம்.

    நபிகள் கூறிய சமத்துவத்தை தான் தந்தை பெரியாரும் முன்மொழிந்தார்.

    காசாவில் அரங்கேறும் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காசாவில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்.

    மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் அரசியல் இயக்கம் திமுக.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக உள்ள இயக்கம் திமுக. பாஜகவிற்கு துணை போகிற இயக்கங்களை புறகணிக்க வேண்டும். 

    • சாக்ஷி அகர்வால் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • வீடியோவில், சாக்ஷி அகர்வால் ஆர்டர் செய்த உணவு காண்பிக்கப்பட்டுள்ளது.

    மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையிலும் கால் பதித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

    பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

    கடைசியாக அதர்ம கதைகள் திரைப்படத்தில் நடித்து இருந்தார். கெஸ்ட் மற்றும் தி நைட் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

    நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைப்பெற்றது. அவரது சிறு வயது நண்பரான நரனீத் மிஸ்ரா என்பவரை கரம் பிடித்தார்.

    இந்நிலையில், சாக்ஷி அகர்வால் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சாக்ஷி அகர்வால் ஆர்டர் செய்த உணவு காண்பிக்கப்பட்டுள்ளது.

    தான் சைவ உணவை ஆர்டர் செய்ததாகவும், வந்தது சிக்கன் எனவும் ஸ்விக்கி உணவகத்தை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.

    பதிவில், "சுத்த சைவமான எனக்கு சிக்கன் வந்துள்ளது. என் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
    • பீகார் மாநில மக்கள் நாட்டின் மிக ஏழைகள் என்றார்.

    பாட்னா:

    பீகாரின் நாலந்தாவில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடியின் உரைகளை நாங்கள் 15 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.

    நாளை மாற்றம் வரப்போகிறது, நாளை இந்தியா உலகத் தலைவராக மாறும், நாளை நமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை நாங்கள் கேட்டு வருகிறோம். இதுவரை இதைத்தான் நாங்கள் கேட்டு வருகிறோம்.

    ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் பீகார் மக்கள் கணிசமாக பயனடைவார்கள் என்று அர்த்தமல்ல.

    ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். பீகார் மக்கள் நாட்டின் மிக ஏழைகள்.

    நீங்கள் கார்கள் மீதான வரியைக் குறைத்தீர்கள். பீகாரில் ஒவ்வொரு 100 பேரில் 2 பேர் கார்களை வைத்திருக்கிறார்கள்.

    எனவே, வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தால், பீகாரில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அது பயனளிக்காது என தெரிவித்தார்.

    • இவ்விரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
    • 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கையை வங்கதேசம் வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    இதையடுத்து, இந்திய அணி பந்து வீச, பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களம் இறங்க உள்ளது.

    • ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது. 

    நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள்.

    அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும். நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.

    அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும். 

    கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்துவிட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறை போற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனேபோற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    • இந்திய ஐ.டி. ஊழியர்களை பாதிக்கும் வகையில் எச்-1பி நுழைவு இசைவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரை வரி விதித்தது. இந்தியாவின் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஈரானின் சபஹார் துறைமுகம் மீதான தடைகளையும் விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டது.

    மேலும், இந்திய ஐ.டி. ஊழியர்களை பாதிக்கும் வகையில் எச்-1பி நுழைவு இசைவுக்கான கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ்,

    கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    இரு கட்சிகளைச் சேர்ந்த அரசுகளும் கடந்த 30 ஆண்டுகளாகப் பாடுபட்டு வளர்த்த இந்திய-அமெரிக்க நட்புறவை, டிரம்ப் நிர்வாகம் சீர்குலைத்துவிட்டது.

    இது கொள்கை சார்ந்த முடிவு என்பதை விட, தனிப்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்தியா போன்ற பெருமையும் வலிமையும் வாய்ந்த ஒரு நாட்டை புறந்தள்ளினால் அது ரஷியா, சீனா போன்ற நாடுகளுடன் நெருக்கமாகும் அபாயம் உள்ளது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்தக் கருத்துகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    2019-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படத்தை இயக்கி அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தண்டகாரண்யம் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், தண்டகாரண்யம் படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," பழங்குடிகளுக்கு எதிரான அரசப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் அதியன் ஆதிரையின் புரட்சிவனம் தண்டகாரண்யம்.

    படத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு 2, 3 நாட்கள் அந்தக் காட்டிலேயே பயணித்ததைப் போன்ற உணர்வு மேலோங்கியிருந்தது.

    வசனங்கள், இயக்குநரின் Wசிந்தனை முதிர்ச்சிக்குச் சான்றுகளாகவுள்ளன" என்றார்.

    • நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார்.

    அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார்.

    அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    இந்நிலையில், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்," பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார்.

    2026 தேர்தலில் திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது" என்றார்.

    ×