என் மலர்
தலைப்புச்செய்திகள்
- குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.
விரதமிருந்த பக்தர்கள் பலரும் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். 2-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கூடும் என்பது ஐதீகம். 3-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 7.30 இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிகின்றனர். அவர்கள் 6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, மக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
எனவே வேடம் அணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேடம் அணிபவர்களின் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.
அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.
காளிவேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவோ அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் வேண்டும்.
வருகிற 2-ந் தேதி நள்ளிரவில் மகிஷா சுரசம்ஹாரம் முடிந்தபிறகு அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியது இல்லை.
காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
- பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள்.
பரபரப்பான தற்போதைய காலகட்டத்தில் வயதான பெற்றோரை பெரும்பாலான பிள்ளைகள் கவனிப்பதில்லை. அவர்களது சொத்துகளை மட்டும் எழுதி வாங்கிவிட்டு அவர்களை வீதிக்கு அடித்து விரட்டும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நூதன முறையில் தண்டனை வழங்க வந்திருக்கிறது தாத்தாக்கள் சங்கம்.
தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் மோதே கிராமத்தில்தான் இந்த தாத்தாக்கள் சங்கம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிள்ளைகள் யாராவது வயதான பெற்றோரை கவனிக்காமலோ துன்புறுத்துவதாகவோ தகவல் தெரிந்தால் இவர்கள் தண்டிக்கும் விதம் புதுமையாக இருக்கும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தை சேர்ந்த பல பெற்றோரின் சொத்துகளை பறித்துக்கொண்டு பல பிள்ளைகள் அவர்களை விரட்டி விட்டனர். இதனை தடுப்பதற்காகவே தாத்தாக்கள் சங்கம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2010-ம் அப்போதைய அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கட்டம் ராஜி ரெட்டி ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து இந்த சங்கத்தை ஏற்பாடு செய்தார். அது மட்டுமின்றி இந்த சங்கத்தை பதிவு செய்தும் வைத்திருக்கிறார். இதில் ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இந்த ஊரில் பெற்றோரை அவரது மகன் அல்லது மகள் சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் தாத்தாக்கள் சங்கம் வெளியே சென்று புகார் செய்ய வாய்ப்பு அளிக்காது. அதே சமயம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்காது. உடனடியாக அந்த மகன் அல்லது மகளை தாத்தாக்கள் சங்க உறுப்பினர்கள் அழைத்து எடுத்து சொல்கிறார்கள். அப்போதும் கேட்காவிட்டால் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
அதற்கு மேலும் முரண்டுபிடித்தால் 40 உறுப்பினர்களும், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டின் முன்பு வைத்து சமைத்து, பாதிக்கப்பட்ட வயதான பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள்.
பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள். வீட்டு முன்னேயே சென்று 40 பேரும் சமைத்து அவர்களும் சாப்பிட்டு பராமரிக்காத பெற்றோருக்கும் சாப்பாடு வழங்குகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் மனம் மாறும்வரை அவர்கள் வீட்டின்முன் சமைத்து பெற்றோருக்கு கொடுத்து தங்கள் எதிர்ப்பை இந்த விதமாக தெரிவிக்கிறார்கள்.
இத்துடன் பிள்ளைகள் தாத்தாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனி தங்கள் பெற்றோரை நல்லபடியாக பார்த்துக்கொள்வதாக உறுதி பத்திரம் எழுதி தருகிறார்கள்.
- காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
- தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
காதல்... இரு மனங்கள் ஒன்றிணைவது காதல்.
புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலக்கட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லைமீறும் செயல்களில் களமிறங்குகிறார்கள், இன்றைய பல காதல் ஜோடிகள்.
இதற்காக கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பலனில்லை.
அந்தவகையில் ஓசூரில் பூங்கா முன்பு விளம்பர பதாகை (பேனர்) ஒன்று வைக்கப்பட்டதில் பெரும் சர்ச்சையை கிளம்பியது. அதன் விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி உட்காருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓசூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து, பூங்காவில் பொழுது போக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் பூங்காவில் பகல் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், இங்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடந்து வந்தன. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மாலையில் மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து பூங்காவை பகலில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பூங்காவின் நுழைவு வாயிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை என நேற்று பேனர் வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞர்களும், இளம்பெண்களும் பேனரை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த பேனர் அகற்றப்பட்டது. இந்த பேனரை காவல்துறை சார்பில் வைக்கவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், பேனரை கட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது யார்? என விசாரணை நடந்து வருகிறது.
- "ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர்.
- சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 5-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்கந்தமாதா. ஸ்கந்தமாதா என்பவர் நவதுர்கைகளில் ஐந்தாவது வடிவம். இவர் முருகனின் தாயார், சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவர். இவர் நான்கு கரங்களைக் கொண்டவர்.
"ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர். தேவர்களின் சேனாபதியே முருகன்! முருகனின் ஒரு பெயர் 'ஸ்கந்தன்' ஆகும். 'ஸ்கந்த மாதா என்றால் 'முருகனின் அன்னை' என்று பொருள்.
நவராத்திரியின் பஞ்சமி திதியில் ஆதிசக்தியின் 'ஸ்கந்தமாதா' ரூபத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரூபத்தில் அம்பாளின் மடியில் குழந்தை முருகன் அமர்ந்துள்ளான். நான்கு கரங்களுடைய ஸ்கந்தமாதா சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.
ஸ்கந்தமாதா
ஒருகாலத்தில் தாரகாசுரன் என்னும் அசுரன், கடுமையான தவம் செய்து "சிவபெருமான் மகன் தவிர வேறு யாராலும் என்னை வதம் செய்ய முடியாது" என்ற வரத்தைப் பெற்றான். இந்த வரத்தால் அவன் தேவர்களையே துன்புறுத்த ஆரம்பித்தான்.
ஆனால் அப்போது சிவபெருமான் யாருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் தவம் செய்து கொண்டிருந்தார். இதனால் தேவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
சிவனைத் திருமணம் செய்ய பார்வதி (சதீயின் மறுபிறப்பு) கடுமையான தவம் செய்தார். அவருடைய தவத்தால் சிவபெருமான் சம்மதித்து திருமணம் நடந்தது.
சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன் (கார்த்திகேயன், முருகன், சுப்பிரமணியன்). இவர் பிறந்ததும், தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் இவர் தான் தாரகாசுரனை அழிக்கக் கூடியவன்.
தன் தாயின் அருளும், சக்தியையும் பெற்று ஸ்கந்தன் (முருகன்) தாரகாசுரனை வதம் செய்து தேவர்களை காத்தார்.
பார்வதி, தன் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தார். அந்த நிலையிலேயே இவர் ஸ்கந்தமாதா எனப் போற்றப்பட்டார்.
பின்னர் ஸ்கந்தன் (முருகன்) தனது வீரத்தால் தாரகாசுரனை வதம் செய்து, தேவர்களுக்கு அமைதி கொண்டுவந்தார். இதன் மூலம் தாய் ஸ்கந்தமாதா மகிமை உலகம் முழுவதும் பரவியது.
ஸ்கந்தமாதாவை 5-வது நாளில் வழிபடுவதால் தனது அருள் மற்றும் நலத்தை வேண்டுபவர்களுக்கு வழங்குகிறார்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி ஸ்கந்தமாதாயை நமஹ" என்று ஜபித்தால் ஸ்கந்தமாதாவின் அருள் கிடைக்கும்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-10 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி காலை 8.15 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : விசாகம் இரவு 9.37 வரை பிறகு அனுஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சிம்ம வாகனத்தில் பவனி
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் வைஷ்ணவ கருட வாகனத்தில் பவனி குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்துடன் காட்சி. திருப்பதி ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனத்தில் பவனி. இரவு முத்துப்பந்தல் அருளிய லீலை. திருமலை நம்பி திருநட்சத்திர வைபவம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு, திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு, திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-நிறைவு
கடகம்-ஆதரவு
சிம்மம்-போட்டி
கன்னி-புகழ்
துலாம்- ஓய்வு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- நட்பு
மகரம்-சுகம்
கும்பம்-சுபம்
மீனம்-வெற்றி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு கூடும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறுகள் ஏற்படும்.
ரிஷபம்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
மிதுனம்
திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.
கடகம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமண பேச்சுகள் முடிவாகலாம்.
சிம்மம்
வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு.
கன்னி
அமைதி கிடைக்க ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
திறமை பளிச்சிடும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சிநேகிதர்கள் செல்வநிலை உயர வழிகாட்டுவர்.
விருச்சிகம்
யோகமான நாள். வருமானம் உயரும். புகழ் பெற்றவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவோடு நல்ல காரியம் நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்துகளால் லாபம் உண்டு.
மகரம்
மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு கைகூடிவரும். வியாபார விருத்தி உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமையும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.
மீனம்
நட்பு பகையாகும் நாள். கடமையில் தொய்வு ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை.
- என்னுடைய அப்பா கிடைத்த படிப்பை படித்து ஒரு டிகிரி வாங்கினார்.
- அவரது மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என 2 டிகிரி படிக்க வைத்தார்.
சென்னை:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழக அரசின் கல்வி விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திரைப்பட விழா என்றால் எதையாவது பேசிவிட்டுப் போய்விடலாம். இங்கே அப்படி பேச முடியாது.
உலகத்தில் எதுவெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்விதான்.
என்னுடைய அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளிக்குச் சென்று படித்ததால், நான் 3 வேளையும் சாப்பிட்டு பள்ளிக்கு சென்றேன். என்னுடைய அப்பா நடந்து பள்ளிக்கூடத்துக்குச் சென்றதால், நான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ரெயில் மூலம் பள்ளிக்கூடத்துக்கு சென்றேன். ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும். இதை என்னுடைய குடும்பத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய அப்பாவுடைய வீட்டில் இருந்த வசதியால் அவர் நினைத்த படிப்பை படிக்க முடிக்கவில்லை, கிடைத்த படிப்பைதான் படித்தார். அவர் ஒரு டிகிரி வாங்கினார். அவருடைய மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என்று இரண்டு டிகிரி படிக்க வைத்தார். என்னுடைய அக்கா எம்.பி.பி.எஸ்., எம்.டி., எப்.ஆர்.சி.பி. என 3 டிகிரி முடித்துவிட்டார்.
சினிமா துறை மிகவும் சவாலானது. அங்கு சவால்கள் வரும் போதெல்லாம் எனக்கு வரும் ஒரு தைரியம் என்னவென்றால் என்னிடம் 2 டிகிரி இருக்கிறது. இங்கிருந்து என்னை அனுப்பினால் ஏதாவது வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ள முடியும். நான் நன்றாக படித்தேன். ஆனால் சினிமா மீதான ஆர்வத்தால் இங்கே வந்துவிட்டேன்.
தற்போது அரசின் திட்டங்களால் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளையும், இத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற, கை நிறைய சம்பாதிக்க, வீடு, கார் வாங்க, எல்லாருடைய முன்பு கவுரவமாக வாழ ஒரே தீர்வு நன்றாக படிப்பதுதான். மதிப்பெண்ணுக்காக கொஞ்சம் படியுங்கள். வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்.
தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்கள் நிறைய சாதனையாளர்களை உருவாக்கும் என தெரிவித்தார்.
- இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது.
- இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.
புதுடெல்லி:
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் கொடூர தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி அழைப்பு விடுத்து உள்ளார். இதுதொடர்பாக, நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
பாலஸ்தீன பிரச்சினையில் மோடி அரசின் பதிலும், ஆழ்ந்த அமைதியும் மனிதாபிமானம் மற்றும் தார்மீகத்தைக் கைவிடுவதாக உள்ளது.
இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பீடுகள் அல்லது அதன் மூலோபாய நலன்களை விட, பிரதமர் மோடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் இடையேயான தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் முதன்மையாக இயக்கப்படுவதாகத் தெரிகிறது.
இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது. மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.
உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில் இதைச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் சமீபத்திய மாதங்களில் மிகவும் வேதனையான மற்றும் அவமானகரமான வழிகளில் தோல்வி அடைந்துள்ளன.
உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தனி நபரின் புகழ் பாடும் வகையிலோ, வரலாற்று பெருமைகளில் ஓய்வெடுக்கவோ முடியாது.
அது தொடர்ச்சியான தைரியத்தையும் வரலாற்று தொடர்ச்சியின் உணர்வையும் கோருகிறது. இந்தியாவின் மவுனமான குரல், பாலஸ்தீனத்துடனான அதன் பற்றின்மையைக் காட்டுகிறது.
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இணைந்து விட்டது. நீண்ட காலமாகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முதல் படியாக இது உள்ளது.
193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 150-க்கு மேற்பட்ட நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு பல ஆண்டாக ஆதரவளித்து வந்த இந்தியா, 1988 நவம்பர் 18-ம் தேதி பாலஸ்தீனத்தை நாடாக முறையாக அங்கீகரித்து, இந்த விஷயத்தில் ஒரு தலைவராக இருந்தது.
இந்தியா நீண்ட காலமாக ஒரு நுட்பமான அதேநேரம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அமைதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
நீதி, அடையாளம், கண்ணியம், மனித உரிமைகளுக்காக பாலஸ்தீன மக்கள் போராடி வரும் நிலையில் பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- நவராத்திரி விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி.
- விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது.
நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள்.
நவராத்திரி விழாவை தமிழகத்தில் பொம்மைக் கொலு என்றும்; வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும்; வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி.
ஏனெனில் அவர்களை தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள். நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும். நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும்; மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.
நவராத்திரியின் ஐந்தாவது நாளில் தாய்மை, கருணையின் வடிவமான ஸ்கந்தமாதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பச்சை நிற ஆடையை அணிய வேண்டும். இதனால் அவள் தனது பக்தர்களுக்கு அனைத்து விதமான செழிப்பை வழங்குவாள். பூஜை அறையை மா இலைகள் மற்றும் சாமந்தி தோரணங்களை கொண்டு அலங்கரியுங்கள்.
- ரகசா புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது.
- அந்த மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பீஜிங்:
தென் சீனக்கடலில் உருவான புயலுக்கு ரகசா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தைவானைப் பந்தாடிய இந்தப் புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
மணிக்கு 200-லிருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 லட்சம் வீடுகள் இருளில் சிக்கித் தவித்தன.
இதனை தொடர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்காக பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து அந்தப் புயல் வியட்நாம் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
- இதனால் இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது.
ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆசிய கோப்பை இறுதிப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிரான்சில் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர் சர்கோசி.
- சர்கோசி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோசி. இவர் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர்.
லிபியாவின் முன்னாள் அதிபர் மம்மர் கடாபிக்கு ஆதரவாக பேச நிகோலஸ் சர்கோசி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக , சர்கோசியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபி நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கு இடையே மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு பாரீஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி சர்கோசிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று பாரீஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சர்கோசி மேல்முறையீடு செய்தாலும், அவர் சிறைக்குச் செல்வது உறுதி என கூறப்படுகிறது.
தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் சர்கோசி, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சர்கோசி கூறுகையில், நான் சிறையில் தூங்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் சிறையில் தூங்குவேன். ஆனால், தலைகுனிய மாட்டேன். தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றார்.






