என் மலர்
நீங்கள் தேடியது "Kulasekarapattinam Temple"
- 2-ந்தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கடந்த 23-ந்தேதி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது.
இதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள், மதியம் அன்னதானம், மாலை 3 மணிக்கு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி வலது கையில் காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக மற்றும் பஜார் வீதிகளில் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இதனால் திரும்பிய திசைகளில் எல்லாம் தசரா பக்தர்களாக தெரிகிறது.
கடந்த 28-ந்தேதி முதல் தசரா குழுவினர் மேளம், தாரை தப்பட்டை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் டிஸ்கோவுடன் வந்து காப்பு கட்ட தொடங்கினர். மறுநாள் ஊர் பெயரோடு அமைந்த தசரா குழுவினர் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடந்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் அம்மன் பெயரில் வசூல் செய்த பணத்தை 10-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காணிக்கையை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். இதற்கு பக்தர்களுக்கு வசதியாக கோவிலை சுற்றி தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
விழாவின் முக்கிய நாளான வருகிற 2 மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 500-க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மருத்துவ துறை, மின்சார துறை, வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் 2 நாள் இங்கு முகாமிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.
2-ந் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு பூஜையூடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை பின்தொடந்து செல்வார்கள். சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் கடற்கரையில் அம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு கடற்கரை மேடையிலும் தொடர்ந்து 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
3-ந் தேதிஅதிகாலை பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
2-ந் தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் டிரோன் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்ப வசதிகளுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.
விரதமிருந்த பக்தர்கள் பலரும் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். 2-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கூடும் என்பது ஐதீகம். 3-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 7.30 இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிகின்றனர். அவர்கள் 6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, மக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
எனவே வேடம் அணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேடம் அணிபவர்களின் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.
அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.
காளிவேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவோ அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் வேண்டும்.
வருகிற 2-ந் தேதி நள்ளிரவில் மகிஷா சுரசம்ஹாரம் முடிந்தபிறகு அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியது இல்லை.
காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.
இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.
இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் தொழில் அமைதல், முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், மனநலம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேண்டி அம்மனுக்கு நேர்ச்சையாக ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உட்பட 100-க்கு மேற்பட்ட வேடம் அணிவார்கள்.
இதில் விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடங்கள் அணிபவர்கள் குறைந்தது 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி, எடுப்பவர்கள், வேல் குத்தி வருபவர்கள் 61,41, 31,21 நாட்கள் என தங்கள் வசதிக்கேற்ப விரதம் தொடங்குவார்கள்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதாலும் 41-வது நாள் விரதம் தொடங்குவதாலும் இன்று அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர்.
கோவில் நடை காலை 6 மணிக்கு தான் திறக்கும் என்பதல் அதற்கு முன்னரே கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் விற்கும் துளசி மாலை மற்றும் பாசிமாலை வாங்கி கடல்நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்து கோவில் பட்டர் அய்யப்பனிடம் கொடுத்துமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

ஏராளமான பக்தர்கள் சிகப்பு ஆடை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் காலை, இரவு இளநீரு, மதியம் மண்பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிட்டு வருவார்கள். காளி வேடத்தில் 100 சடை, 200 சடை முடி என அணியும் பக்தர்கள் தனியாக தென்னம் ஓலையில் ஊரில்குடில் அமைத்து அதில் முத்தாரம்மன் படம் வைத்து தாங்கள் வேடம் அணிய பயன்படுத்தும் பொருட்களை வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்து வழிபடுவார்கள். உடன்குடி, குலசை பகுதியில் காளி வேடம் அணியும் பக்தர்கள் சிலர் இரவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு இரவில் தங்கி விட்டு காலை யில் வழக்கம் போல் தங்கள் பணிக்கு செல்வார்கள்.
தற்போது காளி வேடத்திற்கான சடை முடி, கிரிடம், சூலாயுதம், நெற்றி பட்டை,வீரப்பல் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பணியில் கடந்த 2 மாதமாக ஏராளமான தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்குவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தற்போதிலிருந்தே உடன்குடிக்கு வர தொடங்கி உள்ளதால் உடன்குடி பகுதி கட்ட தொடங்கி உள்ளது. தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவவர் வள்ளி நாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
- பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நிரந்தர உண்டியல் 13 உடன் கூடுதலாக 56 சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். 12 நாட்கள் கோலாகலமாக நடந்தது.
லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நிரந்தர உண்டியல் 13 உடன் கூடுதலாக 56 சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது. 11-ம் திருநாள் அன்று ஏராளமான உண்டியல்கள் நிறைந்துவிட்டது. அதனால் அந்த உண்டியல்களை மூடி சீல் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணி 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. மொத்தம் 69 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்த பணியில் தூத்துக்குடி அறநிலையத்துறை துணை ஆணையர்கள் வெங்கடேஷ், ரத்தினவேல்பாண்டியன், உதவி ஆணையர்கள் கோமதி, கண்ணதாசன், சாத்தான்குளம் கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல்கள் அனைத்தும் திறந்து எண்ணப்பட்டது.
ரொக்கமாக ரூ. 3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114, பொன் இனங்கள் 134 புள்ளியின் புதுக்காமு, வெள்ளி இனங்கள் 2416 கிராம் இருந்தது. 5 நாள் நடந்த உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் மற்றும் கோவில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






