என் மலர்
தலைப்புச்செய்திகள்
- புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே.
- ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை.
நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்," திராவிட முன்னேற்ற கழகத்தை போல் பொய் வாக்குறுதிகளை என்றும் சொல்ல மாட்டோம்.. நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடித்து விடுவது போல் அடித்துவிடுவோமா?" என்று கூறினார்.
மேலும் கூறியதாவது:-
ஏன் எந்த விஜய் எந்த இடத்திற்கு சென்றாலும் கேள்வியாக கேட்கிறார் இதற்கான விளக்கத்தை ஏற்கனவே இரண்டு இடத்தில் கூறியிருந்தோம் கல்வி ரேஷன் மருத்துவம் அடிப்படை சாலை வசதி மின்சாரம் போக்குவரத்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு இது போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசம் இல்லாமல் சரியாக செய்யப்படும் என கூறியிருந்தோம் இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள் அதைத்தான் இவரும் சொல்றாரு இவர் புதிதாக ஏதும் சொல்லவில்லை.
ஐயா அரசியல் மேதைகளே பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சாப்பாடு படிப்பதற்கு நல்ல கல்வி குடிப்பதற்கு நல்ல குடிநீர் மருத்துவ வசதி வேணுன்ற இடத்திற்கு போயிட்டு வர ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை.
அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. இது திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்பொழுதும் கொடுக்க மாட்டோம்.
புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே.
புதுசா என்னப்பா சொல்றது செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும் ,காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும் ,வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும், இது போன்ற அடித்து விடுவோமா நம்முடைய முதலமைச்சர் அடித்து விடுவாரே அது போன்ற அடித்து விடுவோமா.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிட்னி திருட்டில் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
- குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது.
விஜய் இன்று நாமக்கலில் பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு., அதுதான் நாடறிந்த விஷயம் ஆயிற்றே. அதை ஏற்கனவே திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த கிட்னி திருட்டு எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது. அதாவது விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் எந்த ஏற்றமும் இல்லாமல் செய்துள்ள இந்த மாடல் அரசு, மேம்படுத்தாத காரணத்தினால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை.
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தேர்வுகளை யோசித்து உறுதியாக தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
- 2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
- அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
திமுக- பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு, பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் நலனுக்காகக் கூட்டணி வைத்ததாகக் கூறுவது.
பாஜகவுடன் கூட்டணி தேவையா என நான் கேட்கவில்லை, எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கின்றனர்.
அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
தவெக, பாசிச பாஜக அரசுடனும், திமுக அரசுடனும் ஒத்துப் போகாது.
திமுகவிற்கு போடப்படும் ஓட்டு பாஜகவிற்கு போடப்படும் ஓட்டு. உஷாராக இருங்கள் மக்களே.
வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயலலிதா சொன்ன விசயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, ஒரு பொருந்தா கூட்டணியை அமைச்சிக்கிட்டு,
- தமிழக நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என சொல்கிறார்களே, அவர்கள் போன்று ஒருபோதும் இருக்க மாட்டோம்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாமக்கலில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் ஏற்கனவே சொன்னதைத்தான் சொல்கிறேன். ஒன்று, பாசிச பாஜக உடன் எப்போதும் ஒத்துப்போக மாட்டோம். 2ஆவது திமுக போன்று பாஜக உடன் மறைமுக கூட்டணியாக இருக்கமாட்டோம்.
3ஆவது மூச்சுக்கு முன்னூறு முறை அம்மா அம்மா எனச் சொல்லிக்கிட்டு, ஜெயலலிதா சொன்ன விசயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, ஒரு பொருந்தா கூட்டணியை அமைச்சிக்கிட்டு, தமிழக நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என சொல்கிறார்களே, அவர்கள் போன்று ஒருபோதும் இருக்க மாட்டோம்.
தெரியாமல்தான் கேட்கிறேன். இந்த பாஜக அரசு தமிழ்நாட்டு அரசுக்கு என்ன செஞ்சிட்டாங்க. நீட் தேர்வை ஒழிச்சிட்டாங்களா? கல்வி நிதியை முழுமையாக கொடுத்திட்டாங்களா? தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து விசயங்களையும் செஞ்சிட்டாங்களா?. அப்புறம் எதற்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் கேட்கல., புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கூட்டு, பொரியல், அப்பளம் என எதாவது கிண்டிகிடட்டும். நமக்கு எதுக்கு.
இவ்வாறு விஜய் பேசினார்.
- வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள் இந்திராணி.
- இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும்.
நவராத்திரியின் ஆறாம் நாளன்று அன்னை பராசக்தி, இந்திராணியாக வழிபாடு செய்யப்படுகிறாள். இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள். மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள். வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள். சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள். உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்.
இந்திராணியை வழிபட பருப்பு மாவால் தேவி நாமத்தை கோலம் போட வேண்டும். 16 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். வாழை நார் திரி போட்டு கிராம்பு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். தேங்காய் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். செம்பருத்தி மற்றும் சிவப்பு நிற பூக்கள் மற்றும் சந்தன இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"பொன்னான அன்னை இந்திராணியே புகழ்பாடி வந்தேன் இந்திராணியே கல்லார்கள் என்ன கற்றோர் என்ன நல்லோர்கள் என்ன தீயோர் என்ன உள்ளாரைக் மேன்மையெல்லாம் உண்டாகுமே"
என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
இந்திராணி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் குரு. எனவே இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும். கட்டுமஸ்தான உடல்வாகு, நிரந்தரமான வெற்றி, மற்றும் மரியாதை பெறும் நிலையை அருள்வாள். நல்ல உறவுகள் விசுவாசமான மனைவியையும் குழந்தைகளையும், உயிருக்கும் மேலான நண்பர்களையும் பெற்று வாழலாம். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு மேன்மையைத் தருவாள்.
- கொப்பரை தேங்காய்கள், வெல்லம், ரேஷன் கடை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எங்கே?
- போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் செய்தார்களா?
தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.
அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.
அப்போது அவர், நமாக்கலுக்கு அது செய்வோம் இது செய்வோம் என சொன்னார்களே ? செய்தார்களா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்கு அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தார்களே செய்தார்களா ?
தானிய சேமிப்பு கிடங்குகள், கொள்முதல் நிலையங்கள் இணைக்கப்படும் என் சொன்னாளர்கள், செய்தார்களா ?
கொப்பரை தேங்காய்கள், வெல்லம், ரேஷன் கடை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை என சொன்னார்கள் செய்தார்களா ?
நாட்டுச்சர்க்கரை ரேஷன் கடைகளில் விநியோகம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம் செய்தார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
- பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு ஆகும்.
- உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் வெற்றிகரமாக இன்று முதல் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கி உள்ளது.
இது பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு (25 வருடங்கள் நிறைவு) ஆகும்.
ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்தன.
டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து 5வதாக உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இன்று (செப்டம்பர் 27) பிரதமர் மோடி, ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுடன் சுதேசி '4G' சேவையையும் காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு '4G' சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
பிஎஸ்என்எல் வாயிலாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மக்களை கவரும் விதமாக ரூ.225க்கு 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.25 ஜிபி '4G' டேட்டா திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது.
- விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லுக்கு புறப்பட்ட விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்லாயிரக்கணக்காக குவிந்திருந்த தொண்டர்களின் மத்தியில் பிரசாரம் நடைபெறும் கே.எஸ்.திரையரங்கத்திற்கு விஜய் வர தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, பிரசார வாகனத்தில் வந்த விஜய்க்கு மக்கள் புடைசூழ ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.
அப்போது, விஜய்க்கு தொண்டர்கள் பரிசுகளை வழங்கினர். அதில் ஒரு தொண்டர் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வழங்கினார். அப்போது விஜய் புகைப்பட பிரேமில் கையெழுத்திட்டு வங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு சுபராயனுக்கு உண்டு.
- அவருக்கு மணி மண்டபம் கட்டுவோம் என வாக்குறுதி கொடுத்தார்கள், செய்தார்களா?.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று நாமக்கல் சேலம் சாலையில் உளள் கே.எஸ். தியேட்டர் அருகே, மக்களை சந்தித்து பிராசரம் செய்கிறார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையாக வழங்கியதும், இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர்தான். அவர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சுப்பராயன்தான் அவர். அவர்தான் மாபெரும் மனிதர். மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு அவருக்கு உண்டு.
பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கினார். இதனால்தான் முதல்வராக பதவி ஏற்ற முதல் தமிழர் என்ற பெருமையாக சொன்னதும் மட்டுமல்ல, அவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தது யார்?. சொன்னார்களே செய்தார்களா?.
வடிவேல் ஒரு படத்தில் Empty பாக்கெட்டை காட்டுவதுபோல், ஒவ்வொரு வாக்குறுதியையும் படித்துவிட்டு, பாக்கெட்டை காட்ட வேண்டியதுதான்.
இவ்வாறு விஜய் பேசினார்.
- தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
- நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.
தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.
அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:-
லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து அதிக தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல். முட்டையின் உலகமே நாமக்கல் தான்.
சத்தான உணவு முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
தமிழக என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.
பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் பிறந்த மண் நாமக்கல்.
நாமக்கல்லுக்கு அது செய்வோம் இது செய்வோம் என சொன்னார்களே? செய்தார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனர்.
- இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்காக உறவினர்கள்- நண்பர்கள் என ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். இவர்களால் கடைசி நேரத்தில் ரெயில் ஏற செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் நடைமேடை டிக்கெட்டுடன் நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் காத்து இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதுசூதன ரெட்டி கூறியதாவது:-
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரெயில்களும், விரைவு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன.
சமீபகாலமாக வட மாநிலங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கும் மேற்பட்டோரும் ரெயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்கள் வீடுகளுக்கு தெரியாமல் வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் 162 வடமாநில குழந்தைகளும், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 85 குழந்தைகளும் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் பலர் ரெயில் நிலைய நடைமேடை அனுமதி டிக்கெட் எடுத்துக்கொண்டு விரைவு ரெயில் பகுதியில் தூங்குகின்றனர். இப்படி நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
ரெயில் நிலையத்தில் ரெயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு.
எனவே நடைமேடை டிக்கெட் எடுத்து நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் தங்குவது விதிகளை மீறுவதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவெக தலைவர் இன்று இரண்டு இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாவ நாமக்கல் செல்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதலில் நாமக்கலில் சேலம் சாலையில் உளள் கே.எஸ். தியேட்டர் அருகே, மக்களை சந்தித்து பிராசரம் செய்கிறார். இதற்காக அவர் திருச்சியில் இருந்து நாமக்கலுக்கு சாலை வழியாக வந்து கொண்டிருக்கிறார். நாமக்கலில் அவர் பேசும் இடத்தில் அதிக அளவிலான தொண்டர்கள் கூடியுள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு நடுவே, திடீரென ஆம்புலன்ஸ் வேன் ஒன்று வந்தது. உடனே தொண்டர்களை, ஆம்புலன்ஸ் தடையின்றி விரைவாக செல்ல வழிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் ஆம்புலன்ஸ் தொண்டர்களை கூட்டத்தை அழகாக கடந்து சென்றது.
விஜய்க்கு வரும் வழியில் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஒரு தொணடர் திரிசூலம் வழங்கினார். அதை விஜய் ற்றக் கொண்டார்.






