என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    லோகா படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.

    லோகா படத்தின் வசூல் மோகன்லால் நடித்த துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியது.

    இந்நிலையில், லோகா சாப்டர்-1 திரைப்படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனை படைத்து அசத்தி உள்ளது.

    உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
    • நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக மேலிடம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான், தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிராஜ் சிங் கூறியதாவது:-

    நிதிஷ் குமார்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) முதல்வர் வேட்பாளர். என்.டி.ஏ. கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இறுதி வடிவம் விரைவில் முடிவாகும்.

    மகாபத்பந்தன் என அழைக்கப்படும் இந்தியா கூட்டணி பிளவுப்பட்ட வீடு. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருப்பார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸ் அறிவிப்பால் ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் கவலையும், பயமும் அடைந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கை, தலைமை மற்றும் நோக்கம் அனைத்தும் உறுதியாக உள்ளன என்றும், எந்த வெறுப்பும் இல்லை என்றும் என்றால் உறுதியா சொல்ல முடியும்.

    இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

    பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் நிதி்ஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளுடன் சிராக் பஸ்வான் கட்சியும் முக்கியமான 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. சிராக் பஸ்வான் கட்சிக்கு என்டிஏ 25 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், சிராக் 40 இடங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
    • செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமி மேனன் தலைமறைவானார்

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்தநிலையில் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உள்பட 3 பேருடன் கடந்த 24-ந்தேதி இரவு லட்சுமி மேனன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு மது அருந்த வந்திருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், நடிகை உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட 4 பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்று நடுரோட்டில் வழி மறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஐ.டி. ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கி, தங்களின் காரில் ஏற்றி தாக்கியுள்ளனர். அதன்பிறகு ஒரு இடத்தில் ஐ.டி.ஊழியரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில், ஐ.டி.ஊழியர் அலியார் ஷா சலீம் புகார் செய்தார். அவர் நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேரும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் அனீஸ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே, பாரில் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோருக்கும், ஐ.டி.ஊழியருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

    இதனையடுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமிமேனன் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த வழக்கு சமரசம் செய்துவிட்டதால், லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என எதிர் மனுதாரர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 17 வரை அவரை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி 2007-ல் டி20 உலகக்கோப்பை வென்றது.
    • அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை.

    இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த விழாவில் சஞ்சு சாம்சனுக்கு சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது.

    அப்போது "டி20 உலகக்கோப்பையை வெல்லும் வெற்றி பார்முலாவை கண்டறிய இந்திய அணிக்கு 16 ஆண்டுகள் ஆனது. அதற்கு ரோகித் பையாவிற்கு நன்றி" என தெரிவித்தார்.

    அவர் கூறுவது போல, மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி, அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை. அதுமட்டுமில்லாமல் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.

    இந்தசூழலில் 11 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்த இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இரண்டையும் கேப்டனாக ரோகித் சர்மா வென்றுகொடுத்தார். இந்த 2 கோப்பைகளையும் வெறும் 8 மாத இடைவெளியில் இந்திய அணி தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

    பைசன் படம் தீபாவளியை முன்னிட்டு 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில், 'பைசன்' திரைப்படம் வெளியாக 9 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    • நவி மும்பை விமான நிலைய திறப்பு விழாவில் தொழிலதிபர் கௌதம் அதானி கலந்து கொண்டார்.
    • ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் முதல்கட்ட பணி நிறைவு பெற்றது.

    நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    நவி மும்பை விமான நிலைய திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் இந்த சர்வதேச விமான நிலையத்தில் 4 கட்டங்களாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் முதல்கட்ட பணி நிறைவு பெற்றது.

    நவி மும்பை விமான நிலையம், மும்பையின் தற்போதைய சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

    • சிஏட் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்-ரவுண்டர் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    சிஏட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இது கிரிக்கெட் உலகில் வீரர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் முதல் விருது திட்டங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்-ரவுண்டர் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விருது வழங்கும் விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.

    அதில் விருந்தினர்களை மகிழ்விக்க, வைரல் மிமிக்ரி கலைஞர் ஷாரங் ஷ்ரிங்கர்பூர் கலந்து கொண்டார். அவர் ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி, ரிக்கி பாண்டிங் மற்றும் டேனி மோரிசன் ஆகியோரை அவர் போல சிறப்பாக நடித்தார்.

    குறிப்பாக எம்.எஸ். தோனி போல மிமிங்கிரி செய்தார். அதனை கண்ட ரோகித் சர்மா விழுந்து விழுந்து சிரிப்பார். மேலும் அவர் பின்னாடி அமர்ந்திருந்த அவரது மனைவியிடம் அருகில் இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கனே வில்லியம்சனிடமும் அவரே மாதிரியே பேசுறாங்க என்பது போல சைகை காட்டுவார். சிரித்து சிரித்து கண்ணில் நீர் சிந்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது.
    • நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என இவருக்கு பல முகங்கள் உண்டு.

    இவர் ஆந்திராவில் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு எம்பி ஆனார். இவர் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார்.

    நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், திருப்பதியில் உள்ள நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமத்தை ரத்து செய்யவும் அரசுக்கு மாநில உயர்கல்வி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களிடமிருந்து ரூ.26 கோடி கூடுதலாக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.
    • தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவோ, உடலில் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலமாகவோ பலருக்கு உடல் சூடு ஏற்படுவதுண்டு. ஆனால் உடல் சூட்டை கட்டுப்படுத்த முடியாமல் சிலர் சிரமப்படுவதுண்டு. உடல் சூட்டை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம். 

    * மருந்து உட்கொள்வதால் ஏற்படும் உடல் சூட்டை சரியான உணவுமுறையின் மூலமாகத்தான் சரி செய்ய முடியும்.

    * பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் உடல் சூட்டை சில பழக்க வழக்கங்களால் மாற்ற முடியும்.

    * இரவில் தூங்கும்போது விளக்கெண்ணெயை உள்ளங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.



    * இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.

    * தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.

    * விளக்கெண்ணெய் மசாஜ் உடலின் மையப்பகுதியில் நிலவும் வெப்பத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.

    * விளக்கெண்ணெய் இயற்கையான மலமிளக்கியாக செயல்படக்கூடியது.

    * உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்கி உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

    * எண்ணெய் மசாஜ் எவ்வளவு சிறந்ததோ அதே அளவு முக்கியமானது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது.

    * இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளரில் சிறிதளவு சோம்பை ஊறவைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் அந்த நீரைப் பருக உடல் சூடு குறையும்.

    உங்கள் உடலின் தன்மையை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடல் சூடான தன்மை கொண்டதா அல்லது குளிர்ச்சியான தன்மை கொண்டதா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

    ஒருவேளை உங்கள் உடல் சூடான தன்மை கொண்டது என்றால் நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் சாப்பிடலாம். அல்லது வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இதை தொடர்ந்து செய்துவர உடல் சூடு ஏற்படுவது முற்றிலும் நின்றுவிடும்.

    ஆனால் குளிச்சியான உடல் வாகு கொண்டவர்கள் தொடர்ந்து வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பால் மற்றும் தேன், புதினா டீ முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    முக்கியமாக காரமான, பொரித்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இவற்றை தவிர்த்தால் மட்டும் தான் உடல் சூட்டை தவிர்க்க துணைபுரியும்.

    • முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.
    • இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட நீதிபதி நியமனம்.

    காவலர்கள் பணிக்கு தேர்வானவர்கள் குறித்த இறுதிப்பட்டியலை 30 நாளில் வெளியிட தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    121 எஸ்ஐ பணியிடம், 129 தீயணைப்புத்துறை அதிகாரிகள் காலி பணியிடங்களுக்கு தேர்வானர்கள் பட்டியலை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    2023-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்பட்டு 2024 ஜனவரியில் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

    காவலர்கள் பணித்தேர்வில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவிலலை என புகார் எழுந்தால் திருத்தி முறையாக வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட பட்டியல் 2024 அக்டோபரில் வெளியிடப்பட்ட நிலையில் முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.

    இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஜம்மு ஐகோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார்.

    ஓய்வுபெற்ற நீதிபதி தயாரித்த பட்டியல் முறையாக இல்லை; மீண்டும் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஆணையம் முறையிட்டது.

    இந்நிலையில், தமிழில் தேர்வெழுதியோருக்கு முன்னுரிமை, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றியுள்ளதால் நீதிபதி தயாரித்த பட்டியலை வெளியட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த இந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்டுகிறது.
    • உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..

    இந்நிலையில், இன்று 2025ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த இந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்டுகிறது.

    உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    • பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கேஎல் ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அந்த வகையில் பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாத்னை படைத்துள்ளார். அதேபோல கேஎல் ராகுல் 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட் தொடர்கிறார். இதை தவிர பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை.

    அடுத்ததாக பந்து வீச்சில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பும்ரா தொடர்கிறார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.

    ஆல்ரவுண்டரில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் ஜடேஜா உள்ளார். இந்த பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிடித்துள்ளார்.

    ×