என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சுத்திகரிப்பு நிலையங்களில் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • 75 ஆயிரம் டன் சமையல் கியாஸ் சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது.

    2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கக் கோரி தென் மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக 75 ஆயிரம் டன் சமையல் கியாஸ் சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது.

    • தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது.

    தங்கம் விலை கடந்த 7-ந் தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னரும் விலை ஏற்றம் கண்டது. இதனால் கடந்த 11-ந் தேதி ஒரு சவரன் ரூ.92 ஆயிரம் என்ற உச்சத்தையும் தொட்டது. இந்தநிலையில், நேற்றும் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. அந்தவகையில் நேற்றும் 2 முறை தங்கம் உயர்ந்து இருந்தது.

    அதன்படி, காலையில் கிராமுக்கு ரூ.25-ம் சவரனுக்கு ரூ.200-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் அதிகரித்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 245 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,825 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 206 ரூபாய்க்கும் கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,640

    12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720

    09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-10-2025- ஒரு கிராம் ரூ.197

    12-10-2025- ஒரு கிராம் ரூ.190

    11-10-2025- ஒரு கிராம் ரூ.190

    10-10-2025- ஒரு கிராம் ரூ.184

    09-10-2025- ஒரு கிராம் ரூ.177

    • கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது.
    • கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    மெரினா சென்னையின் முக்கிய அடையாளம். உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த ஒற்றை பெயர் சென்னையின் வரலாற்றை சொல்லும். பல கனவுகளுடன் சென்னைக்கு வருபவர்களுக்கு அலைகளும், கடற்கரை மணற்பரப்பும் வாழ்க்கையை மகிழ்விக்கும் வழிகாட்டியாக காலம் காலமாக திகழ்ந்து வருகிறது.

    வரலாறு படைத்த தலைவர்களை சிலைகளாக தாங்கிக்கொண்டு, உழைப்பை வலியுறுத்தும் உழைப்பாளர் சிலையை தன்னகத்தே கொண்டுள்ள மெரினாவில் பல சரித்தர சாதனை கூட்டங்கள், பேரணிகள் அரங்கேறியுள்ளது. மண்ணின் மக்களின் உணர்வுகளுடன் கலந்து விட்ட மெரினா இன்றைக்கு ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது.

    தினமும் வந்து செல்லும் மக்களை மகிழ்விக்காமல் ஒருபோதும் மெரினா விட்டதில்லை, அதன் அலைகளும் ஓய்ந்ததில்லை. அந்த அளவுக்கு சென்னையுடன் ஒன்றி பிணைந்த மெரினா தற்போது, காலத்திற்கேற்ப தன்னை மாற்றி வருகிறது. நீலக்கொடி சான்றை பெறும் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறது.

     

    மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் அலங்கார வளைவு.

    பாதம் நனைக்கும் அலைகளை ரசித்த மக்களுக்கு தற்போது பெரியவர்கள் அமரும் மூங்கில் இருக்கைகள், கோவாவை போன்று படுத்துக்கொண்டு கடலை ரசிக்கும் இருக்கைகள், நிழலுக்காக ஒதுங்கும் கோபுர குடைகள், மூங்கிலால் ஆன வரவேற்பு அலங்கார வளைவுகள் என மெரினா ரொம்பவே மாறி போச்சு.

    கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது. இது குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. காலி பாட்டில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.

    உடற்பயிற்சி உபகரணங்கள், மணற்பரப்பில் நடந்து செல்ல நவீன பாதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி, அவர்கள் பொழுதை போக்குவதற்கு சிறப்பு உபகரணங்கள், போதுமான அளவு கடற்கரை உள்ளே மூங்கிலால் அமைக்கப்பட்ட கழிவறைகள் என மெரினா கடற்கரை அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பல மாற்றங்களை கடந்து, நவீன மயமாகி வரும் மெரினாவில், பட்டினப்பாக்கம் வரை நீண்ட தூரத்திற்கு கடல் உணவக கடைகளின் விற்பனையும் களை கட்டி வருகிறது. இருளில் ஒளிரும் வண்ண விளக்குகளால் மெரினாவின் மொத்த அழகும் மனதை அள்ளிச் செல்லும். மெரினாவின் அழகையும், நவீனத்தையும் சேதப்படுத்தாமல் ரசிப்பதே உயிர்ப்பாக இருக்கும். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
    • பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாதுகாப்புப் படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான சில நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கூடுதல் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    • ‘காந்தாரா சாப்டர்1’ படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • வருகிற 30-ந்தேதி ‘காந்தாரா சாப்டர்1’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம்.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.655 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா சாப்டர்1' படம் வருகிற 30-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
    • இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.

    கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

    இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

    இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், "டாக்ஸிக்" திரைப்படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    வீடியோவில், மேல் சட்டை இல்லாமல் பால்கனியில் நின்று யாஷ் புகைப்பிடிப்பது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இப்படம் தொடர்பான எந்தவித காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ காட்சி படக்குழுவினரை கவலையடையச் செய்துள்ளது. 

    • திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
    • சனிப்பிரதோஷம்.

    இந்த வார விசேஷங்கள்

    14-ந் தேதி (செவ்வாய்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * பத்ராசலம் ராமபிரான் பவனி வரும் காட்சி.

    * குரங்கணி முத்து மாலையம்மன் பவனி.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (புதன்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * குற்றாலம் திருக்குற்றாலநாதர் திருவீதி உலா.

    * திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    16-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * திருவெம்பல் சிவபெருமான் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (வெள்ளி)

    * சர்வ ஏகாதசி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (சனி)

    * சனிப்பிரதோஷம்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.

    * குற்றாலம், பாபநாசம், திருவெம்பல் தலங்களில் சிவபெருமான் விசு உற்சவ தீர்த்தவாரி.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * தீபாவளி பண்டிகை.

    * அங்கமங்கலம் அன்னபூரணி அம்பாள் லட்டு அலங்காரம்.

    * மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல்.

    * சமநோக்கு நாள்.

    • மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.
    • நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    பகலில் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், பகலில் குட்டி தூக்கம் என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதாக உருகுவே நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    இந்த ஆய்வுக்காக 40 முதல் 69 வயதுடைய 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களிடம் பகல் நேர தூக்கம் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டறிய `மெண்டலியன் ரேண்டமைசேஷன்' எனப்படும் ஒரு நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பகல் நேர குட்டி தூக்கம், வயதாகும்போது மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.

    இதே போல வேறொரு ஆய்வில், `டெர்சிமோனியன் லைர்ட்' என்ற நுட்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 291 விளையாட்டு வீரர்களிடம் நடைபெற்றது. ஒரு சாதாரண இரவு தூக்கத்திற்கு பிறகு, பகலில் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுவது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தி, உடல், மனதில் ஏற்படும் சோர்வு உணர்வை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டது.

    இந்த 2 ஆய்வு முடிவுகளின்படி, ஒரு இரவு வழக்கமான சாதாரண தூக்கம் மட்டுமின்றி பகலில் 30 நிமிடங்கள் குட்டித்தூக்கம் தூங்குவது என்பது வயதாகும் காலத்தில் மூளை சுருக்கத்தை தடுத்து, நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். ஏற்ற இறக்கநிலை மாறும். எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த வரவு உண்டு.

    ரிஷபம்

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.

    மிதுனம்

    தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

    கடகம்

    யோகமான நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    சிம்மம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    கன்னி

    பாக்கிகள் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தேக நலன் கருதி சிறு தொகையைச் செலவிடுவீர்கள். உத்தியோக ரீதியாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.

    துலாம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். வியாபாரப் போட்டிகள் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    விருச்சிகம்

    விட்டுக் கொடுத்துச்செல்ல வேண்டிய நாள். வரவும், செலவும் சமமாகும். தொழிலில் பணியாளர்களின் தொல்லை உண்டு. மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    தனுசு

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பழைய பிரச்சனை மீண்டும் தலைதூக்கும். பயணத்தால் தொல்லையுண்டு.

    மகரம்

    வரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.

    கும்பம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரிடும்.

    மீனம்

    சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 13 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.
    • ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-28 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி மாலை 4.40 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : புனர்பூசம் மாலை 5.43 மணி வரை பிறகு பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் பவனி. குரங்கனி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.

    ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-ஆசை

    சிம்மம்-உயர்வு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-உதவி

    தனுசு- பண்பு

    மகரம்-பக்தி

    கும்பம்-லாபம்

    மீனம்-வெற்றி

    ×