என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
- டெல்லி மக்களின் உரிமை, மாசு, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
டெல்லி மாநில தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் டக்அவுட் ஆகியுள்ளது.
ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கூறுகையில் "டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி.
டெல்லியின் வளர்ச்சி, டெல்லி மக்களின் உரிமை, மாசு, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.
காங்கிரஸ் கட்சி, "டெல்லி மாநில தேர்தல் முடிவு மோடியின் கொள்கைகளை நிரூபித்ததற்கான முடிவு அல்ல. கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி மீதான வாக்கெடுப்பு.
2015 மற்றும் 2020 தேர்தலில் பிரதமர் மோடியின் புகழ் உச்சியில் இருந்தபோது கெஜ்ரிவால் தீர்க்கமான வெற்றியை பெற்றார். இதனால், பிரதமர் கொள்கைளை நிரூபிப்பதைவிட, அரவிந்த் கெஜ்ரிவாலின் வஞ்சகம், ஏமாற்றுதல் மற்றும் சாதனை பற்றிய மிகைப்படுத்துதல் அரசியலை நிராகரிப்பதற்கான வாக்கெடுப்பு" எனத் தெரிவித்துள்ளது.
- தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
- தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
தமிழகத்திற்கு பல நிறுவனங்கள் மற்ற மாநிலம் செல்வதாக ஆளுநர் எவ்வாறு கூறுகிறார் ? நம்மிடம் உளள நிறுவனங்கள் மற்ற மாநிலங்களு்கு செல்ல வேண்டும் என்பது தான் ஆளுநரின் ஆசை.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாராட்டு தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை. நகர்ப்புற வளர்ச்சியில் இந்தியாவிற்கே சென்னை தான் முன்னுதாரணம் என பாஜக மூத்த தலைவரே கூறியுள்ளார்.
ஆளுநர் ரவியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும். ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் பதவியில் இருந்தால் தான் நமக்கு அவர்களே பிரச்சாரம் செய்வார்கள்.
ஆன்மிகம் வேறு அரசியல் வேறு என்று பகுத்தறிந்து பார்ப்பதே தமிழ்நாடு. மாநிலத்தின் அமைதியை கெடுக்க விரும்பினால் ஏமாந்து போவீர்கள், திருந்துங்கள், அல்லது திருத்தப்படுவீர்கள்.
மத்திய அரசின் உரையை ஜனாதிபதி வாசிப்பதை போல் மாநில அரசின் உரையை ஆளுநர் வாசிப்பதே மரபு. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது மாநில அரசின் உரையை பேரவையில் வாசித்தார் காங்கிரஸ் அரசு நியமித்த ஆளுநர்.
உ.பி கும்பமேளாவில் 40 ரேப் பலியான நிலையில் 30 பேர் பலி என கணக்கு காட்டுகிறது பாஜக அரசு. கும்பமேளாவில் நடந்ததை நியாயப்படுத்தி பேசுகிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்தார். இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
- தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டை நாட்டின் முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். ரூ.10 லட்சம் கோடிக்கு அதிகமாக தனியார் முதலீடுகள் வருவதை உறுதி செய்துள்ளோம்.
பொருளாதார குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
வறுமை இல்லாத பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு அமைதியான பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால் தமிழகத்தில் பெண்கள் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மதவாத அரசியல் நடத்தி மக்களை ஒரே மயக்கத்தில் வைத்து அரசியல் ரீதியாக லாபம் அடையலாம் என பாஜக நினைக்கிறது.
வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நினைப்பே மத்திய அரசுக்கு வராது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் ஒன்றுமே இல்லை. பேரு தான் இந்தியாவுக்கான பட்ஜெட், ஆனால் உள்ளே எந்த திட்டங்களும் இல்லை.
பட்ஜெட்டில் திருக்குறளை கூறினால் போதும் தமிழகத்தை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே வரிச்சலுகை.
பீகாருக்கோ, ஆந்திராவுக்கோ நிதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை. தமிழகத்தை புறக்கணிப்பது ஏன் என்பது தான் கேள்வி.
கடந்த பட்ஜெட்டில் ஆந்திரா ஆந்திரா என கூறிய நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் பீகார் பீகார் என கூறினார்.
பட்ஜெட்டில் நாடு என்றால் வெறும் மண் அல்ல, மக்கள் என்ற தெலுங்கு மொழி கவிதையை நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டினார்.
சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பீகார் பெயர் 6 முறை வந்தது. மதுரை எய்ம்ஸ், புதிய ரெயில் திட்டம், குடிநீர், வீடு என மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோடியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லி மக்களுக்கு நான் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.
- 21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் இப்போது முதல் முறையாக டெல்லியில் பாஜக-வின் நல்லாட்சியைக் காண்பார்கள்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலைப் பெற்றது. 48 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 27 வருடத்திற்குப் பிறகு டெல்லி மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இந்த வெற்றியை பாஜக மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் பாஜக தொண்டர்களுடன் வெற்றியை பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி பாஜக தலைமை அலுவலகம் சென்றார்.
அங்கு தொண்டர்களுக்கு மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
இன்று டெல்லி மக்களின் மனதில் உற்சாகமும் நிம்மதியும் நிலவுகிறது. வெற்றிக்கான உற்சாகமும் நிம்மதியும் டெல்லியை ஆப்டா (பேரழிவு- ஆம் ஆத்மியை இவ்வாறு பிரதமர் மோடி அழைத்தார்) இல்லாத மாநிலமாக ஆக்குவதற்கானது. மோடியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லி மக்களுக்கு நான் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.
டெல்லி எங்களுக்கு முழு மனதுடன் அன்பை அளித்துள்ளது, மேலும் வளர்ச்சியின் வடிவத்தில் இரட்டிப்பு அன்பை நாங்கள் உங்களுக்கு திருப்பித்தருவோம் என்று மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன்.

நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களின் இதயங்களிலும் ஒரு வலி இருப்பதைக் கண்டேன். அந்த வலி டெல்லிக்கு முழுமையாக சேவை செய்ய முடியாதது பற்றியது. ஆனால் இன்று டெல்லி எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் இப்போது முதல் முறையாக டெல்லியில் பாஜக-வின் நல்லாட்சியைக் காண்பார்கள். இன்றைய முடிவுகள் பாஜக-வின் இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் மீது நாடு எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மக்களவைத் தேர்தலில் அந்த வெற்றிக்குப் பிறகு, முதலில் ஹரியானாவில் முன்னெப்போதும் இல்லாத சாதனையை நாங்கள் செய்தோம். பின்னர் மகாராஷ்டிராவில் ஒரு புதிய சாதனையை செய்தோம். இப்போது டெல்லியில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இன்று டெல்லி மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். டெல்லியின் உண்மையான உரிமையாளர்கள் டெல்லி மக்கள் மட்டுமே. டெல்லியின் உரிமையாளர்கள் என்று நினைத்தவர்களை உண்மை தண்டித்துள்ளது. அரசியலில் குறுக்குவழிகள், பொய்களுக்கு இடமில்லை என்பது டெல்லி மக்கள் தீர்ப்பின் மூலம் தெளிவாகிறது. குறுக்குவழி அரசியலின் சகாப்தத்தை மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- மம்மூட்டி அடுத்ததாக பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார்.
அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களி மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே கவுதம் மேனன் இயக்கும் முதல் மலையாள திரைப்படமாகு. இப்படம் ஒரு டிடெக்டிவ் திரில்லர் கதை அம்சத்துடன் அமைந்தது. திரைப்பட இறுதியில் இடம் பெற்றிருக்கும் டுவிஸ்ட் காட்சி மக்கள் அனைவராலும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தநிலையில் தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார்.
- பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. லாகூரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் வில் யங் 4 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினர்.
அதன்பின் வந்த கேன் வில்லிம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேன் வில்லியம்சன் 89 பந்தில் 58 ரன்களும், டேரில் மிட்செல் 84 பந்தில் 81 ரன்களும் சேர்த்தனர்.
6-வது வீரரான களம் இறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாச நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார் அகமது 10 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
- இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதால் சவுக்கடி கொடுத்துள்ளனர்.
- ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பியதால் டெல்லியில் பாஜக வென்றுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் 3 ஆசிரியர்கள் இணைந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது தொடர் கதையாகி வருகிறது.
வேலூரில் ஓடும் ரெயிலில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் தள்ளிவிடப்பட்டதில் 4 மாத கரு சிதைவு செய்தியால் வேதனை அடைந்தேன்.
காவல்துறையில் உயர்பதவியில் உள்ள ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து என கூறுவது மிகுந்த அச்சத்தை தருகிறது.
சிவகங்கையில் காவல் நிலையத்திலேயே பெண் எஸ்.ஐ தாக்கப்படுகிறார்.
தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எந்த நிலை இருக்கும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடந்துள்ளது என்பதே திமுகவின் மோசமான ஆட்சிக்கு சான்று.
ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பியதால் டெல்லியில் பாஜக வென்றுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால் போலி வெற்றியடைந்துள்ளது. நெல்லையில் சென்று அல்வா சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது அல்வா கொடுத்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல், திமுக அரசு கடன் வாங்குவதற்கான அவசியம் என்ன ?
2020- 21ல் அதிமுக ஆட்சியில் வந்த வருவாயைவிட தற்போது ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் வருகிறது.
இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதால் சவுக்கடி கொடுத்துள்ளனர். டெல்லி தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி இருக்கிறதா இல்லையா என்கிற சந்தேகம் எழும்புகிறது.
இந்தியா கூட்டணி எப்படி ஒற்றுமையாக இருந்து செயலாற்ற முடியும்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமாக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு என செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் அனிகா, மாதியு தாமஸ் , மற்ற சக நடிகர்கள் பாரில் உட்கார்ந்து இருக்கும் காட்சி அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வீட்டில் போலீஸ் சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்கு சென்றார்
- அதிபர் புதினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் தங்களின் அண்டை நாடான உக்ரைன் சேருவதை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது.
3 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில் இரண்டு பக்கங்களிலும் உயிர்சேதங்களும், மக்கள் இடப்பெயர்வும் நிகழ்ந்துள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் மீது தொடுத்த போரை கண்டிக்கும் விதமாக அதிபர் புதினை விமர்சித்த ரஷிய பாடகர் தனது வீட்டின் ஜன்னல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
ரஷிய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை போலீஸ் சோதனையின் போது ஜன்னலில் இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடை அளித்ததாகவும், அதிபர் விளாடிமிர் புதினை "முட்டாள்" என்று அழைத்ததாகவும் அதிகாரிகள் அவரை விசாரித்து வந்தனர்.
மேலும் உக்ரைன் ராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, அவரது வீட்டில் போலீஸ் சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்குச் சென்றதாகவும், பின்னர் ஜன்னலை திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது.
புதின் மற்றும் உக்ரைன் போரை ஸ்ட்ரோய்கின் சமூக ஊடகங்களில் பலமுறை விமர்சித்துள்ளார்.
கடந்த 2022 இல் தனது சமூக வலைதள பதிவில், இந்த முட்டாள் [புதின்] தனது சொந்த மக்கள் மீதும் சகோதர தேசத்தின் மீதும் போரை அறிவித்தார்" என்று பதிவிட்டிருந்தார். அதிபர் புதினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.
உக்ரைன் போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷிய பாலே நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ், கடந்த நவம்பரில் ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் குதித்து இறந்தார்.
- சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் ரெட்ரோ படம் மே 1 வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டீசர் இன்று படக்குழு வெளியிட்டது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் காமிக் ஸ்டைலில் படப்பிடிப்பு கட்சிகளை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- தவெக தலைவர் விஜயை பற்றி தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை.
- தவெகவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
அதிமுக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு இன்னும் தனது பலத்தை நிரூபிக்கவில்லை. தவெக தலைவர் விஜயை பற்றி தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை.
வாய்ப்பு கிடைத்தால் அவர் எப்படி இருப்பார் என்பது சொல்ல முடியாது.
தவெகவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இ்வவாறு அவர் கூறினார்.






