என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்று அதிகாலை 5.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்படக்கூடிய நில அதிர்வுகள் ஏற்பட்டது.
இதையடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
இன்று அதிகாலை 5.36 மணி அளவில் டெல்லி மற்றும் என்.சி.ஆர்-இன் சில பகுதிகளில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதமோ அல்லது காயமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில், நிலநடுக்கத்தத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வலியுறுத்துகிறேன். சாத்தியமான நில அதிர்வுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
- மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?
சென்னையில், தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.
தமிழ் நாட்டின் மீது மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், "மும்மொழி பின்பற்ற தமிழ் நாடு அரசை மத்திய அரசு மிரட்டடுகிறது. வீழ்த்த முயன்றால் தமிழ்நாடு ஒன்றிணையும், எதிரி எந்த வடிவத்தில் வந்தாலும் வீழ்த்தும். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என உரக்க குரல் எழுப்புவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- இன்று சுபமுகூர்த்த தினம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-5 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி மறுநாள் விடியற்காலை 4.06 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: சித்திரை (முழுவதும்)
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருஇந்த ளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவதிருப்பதி சந்திர பகவானுக்குரிய நத்தம் ஸ்ரீ வரகுணமங்கை சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-செலவு
கடகம்-வரவு
சிம்மம்-நன்மை
கன்னி-சுகம்
துலாம்- நிறைவு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஆதரவு
மகரம்-அமைதி
கும்பம்-புகழ்
மீனம்-ஊக்கம்
- பூமியில் இருந்து 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
டெல்லி என்.சி.ஆர்-இன் சில பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் பூமியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் இன்று அதிகாலை 5:36 மணிக்கு ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
- 78-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.
- இதில் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு செய்யப்பட்டார்.
லண்டன்:
சர்வதேச அளவில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க விருதாகக் கருதப்படுவது பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) ஆகும்.
இந்நிலையில், 78-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு செய்யபட்டார். தி புரூடலிஸ்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
ஏற்கனவே இம்மாதம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது மற்றும் கிரிட்டிக் சாய்ஸ் விருதிலும் புரூடலிஸ்ட் படம் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி வந்தார்.
- தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.
கடலூர்:
கடலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான விஷ்ணு பிரசாத் வடலூரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றனர். அப்போது லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
விடுதி ஊழியர்கள் அவசர கால சாவியைப் பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். அது பலனளிக்கவில்லை என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கதவை உடைத்து திறந்து லிப்டின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். விஷ்ணு பிரசாத் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில் 3 பேர் மட்டும் செல்லக்கூடிய லிப்டில் 6 பேர் சென்றதே பழுதுக்கு காரணம் என தெரிய வந்தது.
- டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 27 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது.
- யமுனை நதியை சுத்தம் செய்வோம் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுக்குப் பிறகு வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என வாக்குறுதி அளித்த பா.ஜ.க. டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், யமுனை நதியை சுத்தம் செய்யும் பணியை டெல்லி பா.ஜ.க. அரசு தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி கவர்னர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
யமுனை நதியை தூய்மை செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. நீரில் மிதக்கும் குப்பைகள், ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றவும், நீர்நிலைகளின் அடிப்பகுதி மண்ணை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
டெல்லி தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த துணைநிலை கவர்னர் சக்சேனா உடனே யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்க உத்தரவிட்டிருந்தார் என தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தானின் இருவேறு இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்துகளில் மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இரு இடங்களில் நடந்த சாலை விபத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாகவும், 45 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல், கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இரு விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் பிரான்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரான்சின் பெஞ்சமின் பொன்சி-ஹ்யூஜஸ் ஹெர்பர்ட் ஜோடி, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி-போலந்தின் ஜேன் ஜிலன்ஸ்கி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் ஜோடி 6-3, 6-4 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
- பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி சென்று திரும்பியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதற்கிடையே, டெல்லியில் பா.ஜ.க. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 249 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஹராரே:
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்லி மாதேவரே 61 ரன்னும், சிக்கந்தர் ராசா 58 ரன்னும் எடுத்தனர்.
அயர்லாந்து சார்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டும், கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிர்னி 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.
அடுத்து இணைந்த பால் ஸ்டிர்லிங்-கர்டிஸ் கேம்பர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். பால் ஸ்டிர்லிங் 89 ரன்னும், கர்டிஸ் கேம்பர் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், அயர்லாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (18-ம் தேதி) நடைபெற உள்ளது.
- முதல் கட்டமாக 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தியது.
- இரண்டாவது கட்டமாக 116 இந்தியர்கள் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
சண்டிகர்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.
அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை, இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே, 2-வது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக மேலும் 112 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் இன்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 44 பேர் அரியானா மாநிலத்தையும், 33 பேர் குஜராத் மாநிலத்தையம், 2 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.






