என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.
    • கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.

    வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 17) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.

    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22,800 புள்ளிகளுக்குக் கீழ் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

    இந்திய பங்குச்சந்தைகள் 9வது நாளாக வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.

    தங்கம் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63, 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120

    15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-02-2025- ஒரு கிராம் ரூ.108

    15-02-2025- ஒரு கிராம் ரூ.108

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    12-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது.
    • மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?

    பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது. இந்தியில் ரிலீசானது. அப்போ மும்மொழிக்கொள்கை, பல மொழிக்கொள்கை உங்கள் வியாபாரத்திற்கு இருக்கலாம். மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?

    நீங்கள் சொன்னீர்களா? தமிழில் மட்டும் தான் என் படம் ரிலீசாகும் என்று.. நான் தமிழன்.. தமிழை போற்றுபவன்.. தெலுங்கில் ரிலீஸ் செய்யக்கூடாது. ரிலீஸ் செய்தால் நான் எதிர்ப்பேன் என்று சொல்லவில்லையே.

    பலமொழிக்கொள்கை உங்களுக்கு தேவைப்படுவதைப்போல குழந்தைகளின் வருங்காலத்திற்கு பல மொழிக்கொள்கை தேவைப்படும்.

    இதில் எல்லாம் நீங்கள் கருத்து சொல்லாதீங்க. நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்காது என்று கூறினார்.

    • இன்று அதிகாலை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருந்தார்.

    டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவானது. இது பூமியில் இருந்து 5 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமும் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    நிலநடுக்கம் சரியாக 8.02 மணிக்கு ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    முன்னதாக நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

    • கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்.
    • மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில் அரசின் உண்மை.

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்

    அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது

    மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை

    இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா?

    இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?

    பாராளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது பாராளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா?

    தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
    • குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் பல பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை இருக்கும்போது அரசாங்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டும் ஏன் மும்மொழிக்கொள்கை மறுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படுகிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு சொல்லுங்கள்.

    உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பிரபலங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் எல்லாவற்றிலும் மும்மொழிக்கொள்கை இருக்கிறது. இந்தி இருக்கிறது. நான் இந்தி என்று சொல்லவில்லை. 3-வது ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். அதை 8 வயதிற்குள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மொழியை அதிகம் கற்றுக்கொள்ளலாம்.

    மாறி வரும் உலகத்தில், சாவல் நிறைந்த உலகத்தில் இன்னொரு மொழி தெரிந்தால் என்ன? குழந்தைகள் படிக்கிறேன் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?

    படிப்பு என்றாலே உங்களுக்கு பிரச்சனை தான். தி.மு.க.விற்கும், திராவிட மாடலுக்கும் படிப்பு என்றாலே பிரச்சனை தான்.

    படிப்பில் நீங்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள். குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    கேந்திரிய வித்யாலயாவில் இந்தி சொல்லிக்கொடுப்பத்தால் அங்கு சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பெற்றோர் இருக்கிறார்கள்.

    நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.

    இன்னொரு மொழியை அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதை இறுமாப்புடன் இவர்கள் மறுக்கிறார்கள்.

    சாமானிய மக்களை படிங்கள் என்று சொல்வது ஆணவமா? சாமானிய மக்களை நாங்கள் படிக்க விடமாட்டோம் என்று சொல்வது ஆணவமா?

    இந்த அரசாங்கம் தான் ஆணவத்தோடு செயல்படுகிறது. இதை பா.ஜ.க. கட்சி தெளிவாக எடுத்துச்சொல்வோம்.

    முதலமைச்சர் ஸ்டாலின் ஆக்டிங்கில் இருக்கிறாரா, ஷூட்டிங்கில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

    ஆக்டிங், ஷூட்டிங் செய்தால் தான் மக்களை அணுக முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்து இருக்கிறார்கள்.

    பா.ஜ.க. 2026-ஐ நோக்கி பலமாக வெற்றி நடைபோடுகிறோம்.

    வாய்ப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுங்கள். வேலைவாய்ப்பை மற்ற குழந்தைகளுக்கு, சாமானிய மக்களுக்கு ஏற்படுத்த ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. கற்றுக்கொடுக்க கல்வித்துறை இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை.

    மாணவர்களின் கல்வியை பாதிப்பது மத்திய அரசு கிடையாது, தர்மேந்திர பிரதான் கிடையாது.

    மாணவர்களின் கல்வியை பாதிப்பது அன்பில் மகேஷ், மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.

    • இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
    • சீமானுக்கு சம்மன் அளிக்கப்பட்டு வருகிறது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

    எனினும், சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவரை கண்டித்து திராவிட அமைப்புகள், பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. மேலும், அரசியல் தலைவர்களும் இவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிராக சீமான் மீது தமிழ் நாடு முழுக்க பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த வகையில், இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல காவல் நிலையங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சீமானுக்கு சம்மன் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராக ராணிப்பேட்டை காவல் துறையினர் சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ளனர்.

    சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் சீமான் விசாரணைக்கு ஆஜராக கோரி நேரில் சம்மன் வழங்கினர். பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கள் தொடர்பான சீமான் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

    • பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    • குற்றத்தின் தன்மை, ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை 12 லட்சத்து 14 ஆயிரத்து 379 பள்ளி மாணவர்கள், 12 லட்சத்து 93 ஆயிரத்து 434 பள்ளி மாணவிகள், 48 ஆயிரத்து 987 தனித்தேர்வர்கள், 554 சிறைவாசிகள் என மொத்தம் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 பேர் எழுத இருக்கிறார்கள்.

    இவர்களில் முதலாவதாக பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது. பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசுத் தேர்வுத் துறை தயாராக உள்ளது.

    அந்த வகையில் பொதுத் தேர்வுகளின் போது ஆள்மாறாட்டம், 'பிட்' அடிப்பது போன்ற 15 வகையான ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்? என்ற விவரங்களை அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி, துண்டுத்தாள் (பிட்), அச்சடித்த குறிப்புகள் வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, அடுத்த ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். துண்டுத்தாள், சீட்டு, புத்தகம் வைத்து பார்த்து தேர்வு எழுதி பிடிபட்டால், அந்த தேர்வரின் அனைத்து பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும். குற்றத்தின் தன்மை, ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது.

    மற்ற தேர்வரின் விடைத்தாள்களை பார்த்து எழுதியது, பரிமாற்றம் செய்தது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால், தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓராண்டு அல்லது குறிப்பிடத்தக்க பருவங்கள் தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்படும்.

    ஆள்மாறாட்டம் செய்து தேர்வை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, பொதுத் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். தேர்வறை கண்காணிப்பாளரிடம் தேர்வறையிலோ அல்லது தேர்வறைக்கு வெளியிலோ தேர்வர்கள் தவறாக நடந்து கொண்டாலோ, தகாத வார்த்தைகளால் திட்டினாலோ, தாக்கினாலோ அந்த தேர்வரின் பிற பாடத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட பருவங்கள் தேர்வு எழுத தடை, நிரந்தர தடை விதிக்கப்படும். வினாத்தாளில் விடை எழுதி பிற தேர்வருக்கு தூக்கி எறிந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த தேர்வரின் அப்பாடத் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

    • நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
    • இப்போது உள்ள இளைஞர்கள் தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடியவர்கள் அல்ல.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.

    பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    புதிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வி. தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வியை எதற்காக எதிர்க்க வேண்டும்.

    தி.மு.வி.னர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்களா? அரசியலுக்காக போலி வேஷம் போட்டுவிட்டு, புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது. தி.மு.க.வின் அரசியலுக்காக மாணவர்களை பலியாக்கக்கூடாது.

    இது 1965 அல்ல. அவர்கள் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த காலம் அல்ல.

    இப்போது உள்ள இளைஞர்கள் உலகத்தை பார்த்த இளைஞர்கள். தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடிய இளைஞர்கள் அல்ல.

    நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் என்று கூறினார்.

    • இன்று அதிகாலை 5.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

    டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்படக்கூடிய நில அதிர்வுகள் ஏற்பட்டது.

    இதையடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

    இன்று அதிகாலை 5.36 மணி அளவில் டெல்லி மற்றும் என்.சி.ஆர்-இன் சில பகுதிகளில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதமோ அல்லது காயமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    இந்த நிலையில், நிலநடுக்கத்தத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வலியுறுத்துகிறேன். சாத்தியமான நில அதிர்வுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
    • மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?

    சென்னையில், தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.

    தமிழ் நாட்டின் மீது மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், "மும்மொழி பின்பற்ற தமிழ் நாடு அரசை மத்திய அரசு மிரட்டடுகிறது. வீழ்த்த முயன்றால் தமிழ்நாடு ஒன்றிணையும், எதிரி எந்த வடிவத்தில் வந்தாலும் வீழ்த்தும். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என உரக்க குரல் எழுப்புவோம்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    ×