என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை காவல் துறையினர் சம்மன்
    X

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை காவல் துறையினர் சம்மன்

    • இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
    • சீமானுக்கு சம்மன் அளிக்கப்பட்டு வருகிறது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

    எனினும், சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவரை கண்டித்து திராவிட அமைப்புகள், பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. மேலும், அரசியல் தலைவர்களும் இவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிராக சீமான் மீது தமிழ் நாடு முழுக்க பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த வகையில், இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல காவல் நிலையங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சீமானுக்கு சம்மன் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராக ராணிப்பேட்டை காவல் துறையினர் சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ளனர்.

    சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் சீமான் விசாரணைக்கு ஆஜராக கோரி நேரில் சம்மன் வழங்கினர். பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கள் தொடர்பான சீமான் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×