search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prsident Droupadi Murmu"

    • புதுவைக்கு வரும் ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பெங்களூரில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகிற 6-ந்தேதி வருகை தருகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூலை மாதம் புதுச்சேரி வருவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

    ஆனால் ஜனாதிபதி வருகை திடீரென ரத்தானது. இந்நிலையில் இருநாள் பயணமாக வருகிற 6, 7-ந் தேதிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார்.

    அவர் புதுச்சேரியில் அரசு சார்பில் சமையல் கியாஸ் மானியம் ரூ.300 வழங்கும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

    புதுவைக்கு வரும் ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவரின் பாதுகாப்புக்காக பெங்களூரில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே ஜனாதிபதி இந்த மாதம் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டு கடைசியில் அவர் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அதில், பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும் என்றார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. குடிமக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துகள். பண்டிகைகள் நமது கலாசார, பாரம்பரிய அடையாளங்களைக் காட்டுகின்றன. பயிர்களுடன் தொடர்புடைய விழாக்கள் என்பதால் விவசாயிகளுக்கு நன்றி. பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார்.

    • டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
    • பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி சென்று திரும்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    இதற்கிடையே, டெல்லியில் பா.ஜ.க. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு திரும்பி உள்ளார்.

    இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    ×