என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். டோனியை தக்கவைத்தது.
    • டோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். சீசன் இதுதான்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி. கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த எம்.எஸ். டோனி அப்போது முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக எம்.எஸ். டோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். சீசன் இதுதான் என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியாகும்.

    கடந்த ஆண்டு இறுதியில் ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெறும் வரை எம்.எஸ். டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். டோனியை தக்கவைப்பதாக அறிவித்த பிறகே, எம்.எஸ். டோனி ஓய்வு குறித்த பேச்சுகள் ஓரளவுக்கு ஓய்ந்தது.

    இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ். டோனி தனது ஓய்வு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

    அப்போது, "நான் 2019-ல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். அதன் பிறகு தற்போது வரை நான் செய்து கொண்டிருப்பது எல்லாமே, கடைசிவரை கிரிக்கெட்டை கொண்டாட வேண்டும் என்பது தான். கடந்த சில ஆண்டுகளில், உங்களுக்கே தெரியும், என்னால் விளையாட முடியும் என்று. நான் பள்ளி சமயத்தில் இருந்ததை போல், அவற்றை கொண்டாடி மகிழ வேண்டும்."

    "பள்ளி காலங்களில் தினமும் மாலை 4 மணி எனக்கு விளையாட்டு நேரம், நான் மகிழ்ச்சியாக வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடுவேன். சமயங்களில் வானிலை காரணமாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை எனில், நாங்கள் கால்பந்து விளையாடுவோம். அதே போன்ற அப்பாவித்தனமாக இப்போதும் விளையாட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர்.
    • இந்நிலையில் ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில் ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் ஐஷ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடைய ஜிகுபா படத்தின் கதையோடு பொருந்திப் போனதால் ஆருர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அமலாக்கதுறை விசாரணையில் எந்திரன் திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் ஜிகுபா படத்தின் கதையை ஒன்றியிருந்தது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் எந்திரன் திரைப்படத்தின் சம்பள தொகையை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

    எந்திரன் திரைப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் சம்பளமாக 11.5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்பொழுது அவருடைய 10.11 கோடி ரூபாய் அசையா சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை.
    • இந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்.

    நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் கூறியிருப்பதாவது:-

    இந்தி படிக்க வேண்டிய தேவை என்ன ? இந்தியை படிப்பதால் என்ன பயன் ?

    இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை. இந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்.

    நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது.

    அந்தப் பள்ளி இன்னுமும் செயல்பட கூட தொடங்கவில்லை. எங்களது இடத்தில் பள்ளியை தொடங்க உள்ளார்கள் என்பதால் எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர்.

    அண்ணாமலை நாகரிக அணுகுமுறையை தவிர்த்துவிட்டு எது வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகிறார். மாணவர்கள் மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தரட்டும்.

    போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு சில நாட்களாக வெளியிட்டது. படத்தின் ரங்கம்மா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
    • வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அதன்பிறகு, களமிறங்கிய அந்த அணியின் தவ்ஹித் ரிடோய் மற்றும் ஜேகர் அலி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. ஜேகர் அலி எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆக இருந்த நிலையில், ரோகித் சர்மா கேட்ச்-ஐ தவற விட்டதால் 114 பந்துகளை ஆடி 68 ரன்களை சேர்த்தார்.

     


    மறுப்பக்கம் ரிடோய் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். இவர் 100 ரன்களை கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 228 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்-க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக் வருகிறது.

    படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் திரைப்படமாகும்.

     

    திரைப்படம் சென்னை, புதுச்சேரி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. மொத்த படப்பிடிப்பும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கடந்த 17 ஆம் தேதி சிவகார்த்திகேயன் அவரது 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். இன்று பராசக்தி படக்குழுவுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். பராசக்தி படக்குழுவிற்கு பிரியாணி விருந்து அளித்தார். மேலும் அதர்வா மற்றும் சுதா கொங்கரா -க்கு அவரே பரிமாறிய வீடியோ இணையத்தில் படக்குழு பதிவிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குடியரசு துணைத் தலைவருடன் அவரது மனைவி சுதீஷ் தன்கரும் உடன் இருந்தார்.
    • நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்மூட்டி. மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மம்மூட்டி நடித்து வெளியான "டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்" திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

    தற்போது இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி, டெல்லியில் இந்திய துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர்-ஐ சந்தித்தார். நடிகர் மம்மூட்டியுடன் அவரது மனைவி சுல்ஃபத் மற்றும் சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். மேலும், துணை குடியரசு தலைவருடன் அவரது மனைவி சுதீஷ் தன்கரும் உடன் இருந்தார்.

     


    மோகன் லால் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மம்மூட்டி விரைவில் இணைய இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுகிறது. இந்தப் படம் மூலம் நடிகர் மம்மூட்டி மற்றும் மோகன் லால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது.
    • கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    19.2.2025 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை ஒன்றிய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

    இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனுஷ் தற்பொழுது `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    தனுஷ் தற்பொழுது `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில் படத்தை பார்த்த லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து படத்தை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    திரைப்படத்தின் சிறப்பு 9 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது த்ரிஷ்யம் திரைப்படம்.
    • 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது.

    கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது த்ரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகம் முழுதும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. திரைப்படம் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, சீன ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷ்யம் 3 படத்தை குறித்து மோகன்லால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுக் குறித்த அவர் பகிர்ந்த புகைப்படத்தில் அவர் ஜீத்து ஜோசப் இடம் பெற்றுள்ளனர். புகைப்படத்திற்கு கடந்தகாலம் எப்பொழுதும் அமைதியாக இருக்காது என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.
    • இவர் 2029-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து சந்தித்தார்.

    இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை குடியரசு தலைவர் அலுவலகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவில், இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஞானேஷ் குமார் நேற்று (புதன் கிழமை) இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த ராஜீவ் குமார் ஓய்வு பெற்ற நிலையில், ஞானேஷ் குமார் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ளார். இவர் வருகிற 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.

    இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா பயணம் மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வீட்டிற்குள் 2 நாட்களாக பசியில் வாடிய மூதாட்டி (68) பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முற்பட்ட போது அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×