என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் உள்ளார்.
- பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி இருந்து வருகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 சீசன் முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங், பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசி, பந்து வீச்சு ஆலோசகராக எரிக் சைமன்ஸ் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் துணை பந்து வீச்சு பயிற்சியாளரான செயல்படுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஸ்ரீராம் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பயிற்சியாளரான இருந்துள்ளார். சென்னை அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷ்ரேயாஸ் கோபால், நூர் அகமது, தீப் ஹூடா, ரச்சீன் ரவீந்திரா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
சி.எஸ்.கே. அணியில் இருந்து வெளியேறிய வெயின் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆலோசகராக இணைந்துள்ளார். இதனால் பிராவோவிற்குப் பதிலாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் சேர்க்கப்பட்டுள்ளார்.
2016 முதல் 2022 வரை ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக வங்கதேச அணியின் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் லக்னோ அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் 5-வது இடத்தை பிடித்து பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தவறவிட்டது. ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்தது.
- யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான Awsum Kissa பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான கதவை திறந்தாயே பாடலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலை இயக்குனர் பா. ரஞ்சித் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இப்பாடல் ஒர் மெலடி காதல் பாடலாக அமைந்துள்ளது.
இப்பாடலை மதன் கார்கி வரிகளில் யுவன் மற்றும் சிந்துரி விஷால் இணைந்து பாடியுள்ளனர்.
ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு விழா.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு.
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதை முன்னிட்டு கவுகாத்தியில் நடந்த ரோட் ஷோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி பங்கேற்றுள்ள விழாவில், ஒரே நேரத்தில் 9 ஆயிரம் பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி விழா மேடை நோக்கி வந்தபோது 9 ஆயிரம் பெண்களும் நடன அசைவுகளுடன் வரவேற்றனர்.
- நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி."
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இம்மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் மார்ச் 3 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- மத்திய அரசு நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட நிதி ரூ.3,300 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டிற்கான ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தி உள்ளார்.
மேலும், "தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1.10 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர்.
2024-25ல் 20 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்க மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது.
மத்திய அரசு நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது.
நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி பதவி விலகியதால் ஆகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் மோசமாக விளையாடியதால் இவரை விடுவிக்க பிசிபி முடிவு செய்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால், இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது.
அதன்படி கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மற்றும் துபாயில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. "ஏ" பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன.
போட்டியை நடத்தும் பாகிஸ்தான் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 240 ரன் மட்டுமே அடித்தது. பின்னர் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும். பாகிஸ்தானில் தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.
முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை என ஒட்டுமொத்தமாக அனைவரையும் பதவியில் இருந்து விடுவிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் பாகிஸ்தான் ஒயிட் பால் அணிகளுக்கு தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ஆஸ்திரேலியாவின் கில்லெஸ்பி ரெட் பால் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் அகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அணி மார்ச் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. இதனால் முன்னாள் வீரர்களில் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளது.
- ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும்.
ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும். Found footage ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா ஃபூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர்.
இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இப்படத்தை ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் `கபா கபா கபிஸ்து' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம் மேற்கொள்கிறார்.ரோகித் படத்தொகுப்பை செய்கிறார். திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மர்மர் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மர்மம் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. நண்பர்கள் கூட்டம் சேர்ந்து ஒரு கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யா விஷயங்களை பதிவு செவதற்காக செல்கின்றனர் அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களில் இவர்களும் மாட்டிக்கொள்வது போல டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளது. டிரெய்லர் காட்சிகள் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரேஸ்வெல் 10 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
- ஷான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் விளாசினார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷான்டோ உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 14 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஷான்டோ சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதற்கிடையே தவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 2 ரன்னிலும், மெஹ்முதுல்லா 4 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் 118 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான்டோ உடன் ஜாகர் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஷோடி தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் ஷான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேசம் 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ஜாகர் அலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷாத் ஹொசைன் 25 பந்தில் 26 ரன்கள் அடித்தார். ஜாகர அலி இறுதி வரை போராடி 55 பந்தில் 45 ரன்கள் அடிக்க, வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஓ'ரூர்கே 10 ஓவரில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்ய இருக்கிறது.
- ப்ரேம் ஆனந்த் DD Next Level படத்தை இயக்கியுள்ளார்
- இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level என்ற தலைப்பிடப்படமேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் சந்தானம் கோவில் இருந்து வருகிறார் ஆர்யா பாடலின் வரிகளை எழுதுவது போல் நகைச்சுவையான காட்சிகள் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்தனர்.
- பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே முருக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதன்படி, தர்மபுரி அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மேலும், கம்பைநல்லூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆறுதல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
- புஷ்பா 2 திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.
இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்நிலையில், படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தை பார்த்து மாணவர்கள் கெட்டு போயுள்ளதாக ஐதராபாத் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்வி ஆணையத்துடன் நடந்த கலந்துரையாடலின் போது பேசிய ஆசிரியர், " அரசுப் பள்ளி மாணவர்களை கையாள்வது மிகவும் கடினமாகி வருகிறது. நான் பணி செய்யும் பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுள்ளனர். அந்தப் படத்திற்கு எந்தவொரு பொறுப்புமின்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத ஹேர்ஸ்டைலை வைத்துக்கொண்டு, ஆபாசமான முறையில் மாணவர்கள் பேசுகின்றனர். இதெல்லாம் பார்க்கையில் நானே தோற்பதுபோல உள்ளது" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- கூட்டுறவுத் துறை சார்பில் 500 கடைகளும், தொழில் முனைவோர்களுக்கு 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கூட்டுறவுத் துறை சார்பில் 500 கடைகளும், தொழில் முனைவோர்களுக்கு 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதியுடன் அமைக்கபட்டுள்ள இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எல்லோருக்கும் உயர்தர மருத்துவம் என்ற இலக்கில்..
* மக்களைத் தேடி மருத்துவம்,
* இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48,
* இதயம் காப்போம்,
* பாதம் பாதுகாப்போம் போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக,
*குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைத்திடவும்; B.Pharm., D.Pharm., முடித்தவர்களைத் தொழில்முனைவோர்களாக வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு முழுக்க 1000 #முதல்வர்மருந்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






