என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.
    • ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது.

    ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

    அப்போது, போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.

    ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
    • திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி ரூபாயை வசூலில் தாண்டியுள்ளது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி ரூபாயை வசூலில் தாண்டியது. இன்னும் வரும் நாட்களில் 100 கோடி ரூபாயை திரைப்படம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று மட்டும் புக் மை ஷோ தளத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் படத்தில் இடம் பெற்ற மாட்டிகினாரு ஒருத்தரு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கானா எபிலோ எழுதி பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தி நமது தேசிய மொழி. ஏனென்றால் இந்திய அதிக அளவு பேசும் மக்களை கொண்டுள்ளோம்.
    • தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் போதுமான மக்கள் இந்தி பேசவில்லை.

    மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழக கல்வித்துறைக்கு நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகம் எப்போதும் இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றும். ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்கள்.

    அதேவேளையில் இந்தியை திணிக்கவில்லை. இந்தி அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியை 3-வது மொழியாக கற்றுக்கொள்ளதான் சொல்கிறோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-

    இந்தி நமது தேசிய மொழி. ஏனென்றால் இந்திய அதிக அளவு பேசும் மக்களை கொண்டுள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் போதுமான மக்கள் இந்தி பேசவில்லை. போதுமான மக்கள் ஆங்கிலம் பேசாததுதான் தமிழ்நாட்டின் பிரச்சனை.

    நீங்கள் இந்திய பேச விரும்பவில்லை என்றால், இந்திய பேச வேண்டாம். ஆனால் இந்தி மொழியை கடுமையாக எதிர்க்க வேண்டாம் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

    இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    • ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கும் துரோகம் என அன்புமணி கூறியிருந்த நிலையில் விளக்கம்.
    • ஜப்பான் நிறுவன உதவியுடன் டிப்போ மேலாண்மை அமைப்பு மூலம் குறிப்பீடு ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகிறது.

    சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் மாநகரப் பஸ்களின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு இதுவரை தமிழில் வழங்கப்பட்டு வந்ததாகவும், ஆனால், அதை இப்போது ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    இதற்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

    அப்போது, மாநகர் போக்குவரத்து கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டதாக கூறப்படும் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

    ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கும் துரோகம் என அன்புமணி கூறியிருந்த நிலையில் மாநகர போக்குவரத்துக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், ஜப்பான் நிறுவன உதவியுடன் டிப்போ மேலாண்மை அமைப்பு மூலம் குறிப்பீடு ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகிறது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    மென்பொருள் உருவாக்கப்பட்டபோது குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் தான் இருந்தது என்றும் தற்போது தமிழில் மாற்றப்பட்டுள்ளது என்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

    • நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • 'குபேரா' திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாக உருவாகி வருகிறது.

    நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'குபேரா' திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாக உருவாகி வருகிறது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

     

    இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அண்மையில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முடிந்தவரை இரைச்சல் இல்லாத ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும்.
    • சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காது கேளாமை பிரச்சனை ஏற்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    இதுபற்றி மாநில அரசுகளும், மருத்துவ கல்லூரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இதுகுறித்து சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அதுல் கோயல் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் காது கேளாமை என்பது ஒரு முக்கியமான உடல்நலம் சார்ந்த பிரச்சனையாகும். ஆனால் பெரும்பாலும் இந்த பிரச்சனை கவனிக்கப்படுவதில்லை. இது குறிப்பாக இளம் வயதினரை பாதிக்கிறது. ஆடியோ சாதனங்கள் மூலம் சத்தமான இசை மற்றும் பிற ஒலிகளை நீண்ட நேரம் மற்றும் அதிகமாக கேட்பது மீளமுடியாத காது கேளாமைக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதுபற்றி மாநில அரசுகளும், மருத்துவ கல்லூரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் செல்போன் பார்க்கும் திரை நேரத்தை குறைக்க வேண்டும். குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்ப்பதால் அவர்களின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் அறிவாற்றல் பாதிக்கப்படும். பொதுமக்கள் 50 டெசிபல்களுக்கு மிகாமல், ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் ஒலி அளவு கொண்ட ஆடியோ சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆடியோ கேட்கும் போது அவ்வப்போது இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த ஒலி அளவில் ஆடியோவை இயக்க வேண்டும். முடிந்தவரை இரைச்சல் இல்லாத ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும்.

    குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளாகும்போது அதிகமான ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

    பொது இடங்களில் அதிகபட்ச சராசரி ஒலி அளவு 100 டெசிபல்களுக்கு மிகாமல் இருப்பதையும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதையும் மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நான் பாஜக-வில் இணைய இருப்பதாக சில செய்திகள் பரவி வருகின்றன.
    • என்னுடைய கழுத்தை அறுத்தாலும் கூட, எனது மூச்சு நிற்கும் வரை மம்தா பானர்ஜி ஜிந்தாபாத் முழக்கம்தான் வாயில் இருந்து வரும்.

    மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், எம்.பி.யாகவும் உள்ளார். இவர் பா.ஜ.க.-வில் இணையப் போவதாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பாஜக-வில் இணைய இருப்பதாக சில செய்திகள் பரவி வருகின்றன. நான் ஒருபோதும் பாஜக முன் தலைவணங்க மாட்டேன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய கழுத்தை அறுத்தாலும் கூட, எனது மூச்சு நிற்கும் வரை மம்தா பானர்ஜி ஜிந்தாபாத் முழக்கம்தான் வாயில் இருந்து வரும்.

    இந்த நேரம் வரை நீங்கள் எங்களுடன் (திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்) இருக்கும் வரை பாஜக-வின் சக்ரவியூகத்தை தொடர்ந்து உடைத்தெறிவோம். கட்சிக்கு எதிராக யார் பேசுகிறார்கள் என்பதை கண்டறிந்துள்ளோம்.

    கட்சிக்கு எதிராக முகுல் ராய் மற்றும் சுவேந்து அதிகாரி செயல்பட்டதை நான்தான் அடையாளம் கண்டேன்.

    இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
    • நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் MRK பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

    தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்? என வினவியுள்ளார். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர்.
    • காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி தாக்கினார்.

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

    விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி தாக்கினார். இதனை அடுத்து அந்த காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

    அப்போது, காவலாளியிடம் இருந்த கைத்துப்பாக்கியை தருமாறு போலீசார் கூறியும் காவலாளி அமல்ராஜ் கொடுக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் வீட்டு உதவியாளரான சுதாகரனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து, போலீசாரை காவலாளி தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டார்.

    அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

    • மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
    • அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் 2026-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டிய மத்திய அரசு, மக்களிடம் மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை வெளியிடக்கூடாது.

    மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை ஒரு போதும் குறையாது என்று தமிழக மக்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    அதேநேரத்தில் மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறையை எந்த அடிப்படையில் செய்வது என்பது குறித்து எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை. அது தெரியாமல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை எடுக்க முடியாது. மத்திய அரசின் முடிவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உத்திகளை வகுப்பது தான் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

    அதேநேரத்தில் மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கும். தமிழக அரசின் சார்பில் மார்ச் 5-ம் தேதி நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன.
    • இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆறுதல் வெற்றியாக அமையும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.

    இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. வங்கதேச அணிக்கும் இதுதான் கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியின் வெற்றித்தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இரண்டு அணிகளுக்கும் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமையும்.

    இந்த போட்டிக்கான டாஸ் 2 மணிக்கு சுண்டப்பட வேண்டும். ஆனால் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்தின் அவுட்-பீல்டு மோசமான நிலையில் உள்ளதாலும், லேசான மழை பெய்து வருவதாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இதே மைதானத்தில் விளையாட இருந்தன. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
    • மார்ச் 10-ந்தேதி வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    வக்பு வாரியங்களுக்கு சொந்தமாக நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்குப்படி, வக்பு வாரியங்களுக்கு 9.4 லட்சம் ஏக்கர் அளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.

    குறிப்பாக, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்கள் பெயரில் இருப்பது தெரிய வந்தது.

    வக்பு வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில் வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத 2 நபா்களை உறுப்பினா்களாக இடம்பெற செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டாய பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

    எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும், பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    அந்த குழு பல்வேறு கட்டங்களாக கூடி ஆய்வு செய்தது. அப்போது 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இதில், எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

    ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்பு மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஆராயப்பட்டு, 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், மார்ச் 10-ந்தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×