என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதற்கட்ட போர் நிறுத்தம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது.
    • அடுத்தக்கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.

    பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பணயக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மட்டுமே இஸ்ரேலுக்கு ஒரேவழி எனத் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தது. அதோடு 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து, காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. 2023 நவம்பர் மாதம் பணயக் கைதிகளை விடுவிக்க இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பயணக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.

    இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைவதற்குள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி வரை தொடர்ந்தது. இதில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் (ஜனவரி) 20-ஆம் தேதி பதவி ஏற்க இருந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட்டு இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை கொண்டு வந்தனர்.

    இந்த போர் நிறுத்தம் 6 வாரம் ஆகும். இந்த 6 வாரத்தில் 33 பணயக் கைதிகள் (இதில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் அடங்கும்) விடுவிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டமாக இன்று நான்கு பணயக் கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. இதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்.

    இந்த வாரம் இறுதியுடன் முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அடுத்த கட்டத்திற்கான போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.

    இதனால் போர் நிறுத்தம் தொடருமா? அல்லது இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் கூறுகையில் "பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மட்டுமே இஸ்ரேல் பணயக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பதற்கான ஒரே வழி. மாறாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற முயற்சி மேற்கொண்டால், அது பணயக் கைதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் துன்பத்திற்கு மட்டுமே வழி வகுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.

    • 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர்.
    • காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி அமல்ராஜ் தாக்கினார்.

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

    விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி அமல்ராஜ் தாக்கினார். இதனை அடுத்து அந்த காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

    அப்போது, காவலாளியிடம் இருந்த கைத்துப்பாக்கியை தருமாறு போலீசார் கூறியும் காவலாளி அமல்ராஜ் கொடுக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் வீட்டு உதவியாளரான சுதாகரனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே, போலீசாரை காவலாளி தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டார்.

    இதனை தொடர்ந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்ததன்பேரில், சீமான் வீட்டின் காவலாளி அமல்ராஜ் மீது போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தொண்டர் சம்மனை கிழிக்கும் முன்பு சீமானின் மனைவி கயல்விழியிடம் அனுமதி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வழக்கறிஞரான கயல்விழி சம்மனை கிழித்தால் என்ன சட்ட விளைவுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரிந்தும் சம்மனை கிழிக்க அனுமதித்துள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த விவகாரத்தில், அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்
    • இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் வின்னைத்தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

    காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் வின்னைத்தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் 1000 நாட்களை கடந்து இன்றும் ஓடிக்கொண்டி இருக்கிறது. இன்றும் வார இறுதியில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் குறித்து சிம்பு மற்றும் திரிஷா படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து, இப்பட வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிரிப்டோகரன்சி நிறுவன திறப்பு விழாவில் நடிகை தமன்னா, காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளனர்.
    • அதற்காக தமன்னாவுக்கு ரூ.25 லட்சமும், காஜலுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    ரூ.50 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை அழைக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

    அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற தொடக்க விழாவுடன், கோவையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளார்.

    முதலீடு செய்தவர்களின் தொகைக்கு ஏற்ப, நடிகை காஜல் அகர்வாலை வைத்து 100 நபர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளனர். அதேபோல, மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை நடத்தி, அதன்மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ஜெயின்,36, அரவிந்த் குமார்,40, ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில், கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    கிரிப்டோகரன்சி நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்றதற்காக தமன்னாவுக்கு ரூ.25 லட்சமும், காஜலுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.

    படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் மிகவும் அதிரடியாக பக்கா மாஸாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.
    • நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி மறுப்பு.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் நாகேந்திரனை அனுமதிக்கக்கோரி மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.

    நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
    • திரிஷாவின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கும் திரிஷாவின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    படத்தின் டீசர் நாளை மாலை 7.03 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். 1 நிமிடம் 34 வினாடிகள் இந்த டீசரின் நீளம் அமைந்துள்ளது. இந்த டீசருக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆகிய அணிகள் இன்று மோத இருந்தனர்.
    • இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டது.

    ராவல்பிண்டி:

    சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.

    இதில் ராவல்பிண்டியில் 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆகிய அணிகள் இன்று மோத இருந்தனர். ஆனால் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டதால் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
    • தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.

    'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியான டிரெய்லர் மக்களிடையே படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியுடன் நிறைவு பெற்றது.
    • 66 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    மகா கும்பமேளா விழா கடந்த மாதம் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட குவிந்தனர்.

    45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியான நேற்று இரவுடன் முடிவடைந்தது. இந்த 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இந்த 45 நாட்களும் பிரயாக்ராஜ் நகர் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. பக்தர்களின் அலைமோதிய கூட்டத்தால் பிரயாக்ராஜ் மக்கள் மிகவும் அவதிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்த நிலையில் மகா கும்பமேளா விழா முடிவடைந்ததையொட்டி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுடன் சேர்ந்து பிரயாக்ராஜ் சென்றார். அங்கு கங்கை நிதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

    பின்னர் அவர் பேசும்போது பிரயாக்ராஜ் மக்களை பெரிதும் பாராட்டினார். மகா கும்பமேளா குறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

    எந்தவொரு தயக்கம், சிரமமின்றி கும்பமேளா விழாவை தங்கள் வீட்டி விழாவாக கருதிய பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களுடைய உபசரிப்பு பாராட்டுக்குரியது.

    மகா கும்பமேளா விழா சுமூகமாக நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் சிறப்பான முறையில் மகா குமப்மேளா நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. சாதுக்கள் உள்பட 66 கோடி பக்தர்கள் புனித சங்கமத்தில் நீராடினர்.

    பிரயாக்ராஜ் மேளா ஆணையம், நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சரியான ஆதரவும் இருந்தால், எந்த முடிவையும் அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அதன் விளைவு இன்று இந்த வடிவத்தில் நம் முன் வந்துள்ளது.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    • நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்.
    • என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? நான் ஆஜராவதாக ஏற்கனேவ கூறிவிட்டேன்.

    என் மீது தீவிரம் காட்டும் போலீசார் பொள்ளாச்சி போன்ற சம்பவங்களில் தீவிரம் காட்டாதது ஏன் ? என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    சீமான் வீட்டில் ஒட்டப்பட்டசம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் காவலாளி, உதவியாளரை போலீசார் அழைத்து சென்றதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

    சம்மன் ஒட்டி விசாரணைக்கு அழைப்பதால் எனக்கு அசிங்கமில்லை.

    என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசு தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறது.

    நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்.

    என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? நான் ஆஜராவதாக ஏற்கனேவ கூறிவிட்டேன்.

    சம்பந்தப்பட்ட பெண்ணையும், என்னையும் ஒரே இடத்தில் அமர வைத்து விசாரிக்க வேண்டும்.

    என் மீது புகாரளித்த பெண்ணிடம் குற்றத்திற்கான சான்றை கேட்க வேண்டும், அந்த நாடகத்தை காண காத்திருக்கிறேன்.

    பெரியார் விவகாரத்தில் என்னை சமாளிக்க முடியாமல் இந்த பெண்ணை வைத்து முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.
    • ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது.

    ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

    அப்போது, போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.

    ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    ×