என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
    • ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.

    பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். .

    ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு ' திரைப்படம் 2025 கோடை விடுமுறை கொண்டாட்டமாக வருகிற மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி திரைப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயனுக்க வயது ஆகிவிட்டது.
    • ஸ்மித், டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை மட்டுமே அதிக அளவில் நம்பியுள்ளது ஆஸ்திரேலியா

    கிரிக்கெட்டில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆஷஸ் தொடர் மிகக்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடம் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிட அதிக அளவிற்கு இந்த தொடருக்கு உண்டு.

    இந்த வருடம் இறுதியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வென்றதில்லை.

    இந்த நிலையில் வயதான பந்து வீச்சாளர்கள், அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்ட ஆஸ்திரேலியா அணியை இந்த முறை இங்கிலாந்து வீழ்த்தி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் "உண்மையிலேயே, எங்களுக்கு வாய்ப்பு என்பதுடன்தான் ஆஸ்திரேலியாவுக்கு செல்வோம். ஆஸ்திரேலியா உலகின் சிறந்த அணி. சொந்த மண்ணில் நம்பமுடியாதவை. ஆனால் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என வயதான பந்து வீச்சு குழுவை கொண்டுள்ளது. தொடக்க வீரராக விளையாட வாய்ப்புள்ள சாம் கோன்ஸ்டாஸ் உள்ளிட்ட அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.

    அவர்கள் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை மட்டுமே அதிக அளவில் நம்பியிருக்க வேண்டும். மார்னஸ் லபுசேன் ரன் சேர்க்க திணறுகிறார். ஆகவே, இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்தால், வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்வதற்கன அணி. இருந்தாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
    • ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    இவர் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் அமீர் கானுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் பேசும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

    இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்து கூலி படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்களான ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் இடம் பெற்றுள்ளனர்.

    கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.
    • நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    தொடர்ந்து நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    முன்னதாக, "பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்" என தெரிவித்தார்.

    சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.

    • சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
    • இதனால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு.

    வருகிற 17ஆம் தேதி சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் 6-ந்தேதி ராம நவமி பேரணி நடத்தப்படும்.
    • ஒரு கோடி மக்கள் பேரணியில் கலந்து கொள்வார்கள்.

    மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இந்துக்கள் பங்கேற்கும 2 ஆயிரம் ராம நவமி பேரணிகள் ஏப்ரல் 6-ந்தேதி நடத்தப்படும் என அம்மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடி இந்துக்கள் 2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்வார்கள்.

    இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை. இந்த வருட இறுதிக்கும் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அதிகாரி போன்ற பாஜக தலைவர்களின் எந்த வார்த்தை ஜாலங்களாலும் மாநில மக்கள் மயங்க மாட்டார்கள். மத சடங்குகளை கடைபிடிக்கவும், பண்டிகைகளை அவர்கள் விரும்பும் வழியில் கொண்டாடவும் அனைவருக்கும் உரிமை உண்டு என மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

    • அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.
    • கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஆந்திர மாநிலம் ரிஷி கொண்டா மலையில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ரூ.500 கோடி அரசு செலவில் பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை கட்டினார். இது முதல் மந்திரியின் முகாம் அலுவலகம் என கூறப்பட்டது.

    இந்த கட்டிடத்தில் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இது ஆந்திர மாநிலத்தின் ஷீஷ் மஹால் அரண்மனை என அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

    பிரமாண்டமான வளாகத்தின் உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்கள், இத்தாலிய பளிங்கு தரை மற்றும் பட்டுப் போன்ற அலங்காரங்கள் உட்பட ஆடம்பரமான உட்புறங்களை கொண்டுள்ளது.

    இந்த அரண்மனை ஒரு முக்கிய கடலோர சுற்றுலா மையமான அழகிய ருஷிகொண்டா பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நன்கு பரந்த தொகுதிகளைக் கொண்டுள்ளது.

    விரிவான உள்கட்டமைப்பு நடைபாதை சாலைகள், வடிகால் அமைப்புகள், 100 கே.வி. மின் துணை மின்நிலையம் ஆகியவை என வியக்கும் வைக்கும் வகையில் அபரிதமான செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஷீஷ்மஹால் அரண்மனையின் பிரம்மாண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆடம்பரமான கட்டுமானம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன. இது கடுமையான சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில்:-

    முன்னாள் முதல் மந்திரி நீதிமன்றங்களை ஏமாற்றி சுற்றுச்சூழல்களை மீறி பிரம்மாண்ட மாக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காக பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

    அரசியலில் இது போன்ற தலைவர்கள் இருப்பது உண்மையிலேயே நமக்கு தேவையா. இது போன்ற விவாகரத்தில் நீண்ட விவாதம் தேவை.

    தற்போது இந்த கட்டிடங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவது என்பதற்கு நாங்கள் எந்த விதமான ஆலோசனையும் செய்யவில்லை.

    இந்த கட்டமைப்புகள் சுற்றுலாத் துறைக்கு சாத்தியமானது அல்ல. இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    டெல்லியில் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவருடைய பங்களாவை ஆடம்பரமாக ரூ.36 கோடி செலவில் புதுப்பித்தார்.

    அதேபோல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஜெகன்மோகன் ரெட்டியும் ஷீஷ் மஹால் அரண்மனையை கட்டி உள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஷீஷ் மஹால் அரண்மனை விவகாரம் ஆந்திர அரசியலில் தற்போது புதிய புயலை கிளப்பி உள்ளது. * * * ஷீஷ் மஹால் அரண்மனையின் பிரமாண்ட தோற்றம்.

    • விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது

    விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    இரு வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். மேலும் மலைப்பகுதியில் ஒவ்வொரு மதத்திற்கு என தனி கிராமம் இருக்கின்றனர். இவர்களுக்கு நடுவே மத கலவரம் ஏற்ப்பட்டு வருகிறது. இம்மாதிரியான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. டிரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
    • கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

    அதன்படி, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.

    பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஏழு வார போர் நிறுத்தத்தின்போது 25 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
    • போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பதற்கான முன்னெடுப்பு நடைபெறாமல் உள்ளது.

    பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும், அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதியை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள் இஸ்ரேல்-காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதேவேளையில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஏடன் அலெக்சாண்டரை விடுவிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் ஹமாஸ் வெளியிடவில்லை.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அத்துடன் 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கண்மூடித்தனமாக தாக்குதலால் உலக நாடுகள் பணயக் கைதிகளை விடுவிக்க போர் இடைநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் மீது குற்றம் சுமத்திய இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் சுமார் 14 மாதங்களாக நீடித்தது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது 25 உயிரோடுள்ள பணயக் கைதிகளையும், 8 உயிரிழந்த பயணக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கவும், இதற்கு இணையாக சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கடைசி வாரம் வரை ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்து வந்தது. இஸ்ரேலும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

    ஏழு வார ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் இஸ்ரேல் காசாவிற்கு செல்லும் எல்லையை மூடியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளது.

    அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து உறுதியற்ற நிலையில் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் தற்போது ஒரு பயணக்கைதி மற்றும் உயிரிழந்த 4 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'
    • மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது படக்குழு டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் டீசர் எவ்வாறு உருவாக்கப்பட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. படத்தின் முன்பதிவு பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ள நிலையில்

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான OG சம்பவம் பாடல் வரும் 18 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு இந்த வீடியோவில் அறிவித்துள்ளனர். OG என்றால் ஒர்ஜினல் கேங்ஸ்டர் என அர்த்தம். இப்பாடல் மிகவும் மாஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த புதிய அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
    • இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அமீர் கானுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் பேசும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதில் அவர் " இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். நாம் பேசிய அந்த அழகான உரையாடலகளை நான் என்றும் மறக்க மாட்டேன். உங்களின் கதை சொல் ஆற்றலை கண்டு என்றும் வியந்துள்ளேன். இந்த ஸ்பெஷலான நாளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்." என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே அமீர்கான் கூலி திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த புகைப்படம் அதனை உறுதி படுத்தும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×