என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 160, புதுச்சேரியில் இருந்து 140 , நெல்லூருக்கு 170 கி.மீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவுகிறது. மேலும் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது.

    சென்னை அண்ணாசாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ., பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. 

    • நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்கிறது.
    • தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் பல மணிநேரமாக மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை தொடர்ந்து நேற்று மாலைக்கு மேல் சற்று இடைவெளி விட்ட மழை நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
    • இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது

    திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு.

    இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்." என்று கூறியுள்ளார். 

    • உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை "மக்கள் மாளிகை" ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது.
    • இது, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

    தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    "காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் "மக்கள் மாளிகை" என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, "ராஜ்பவன், தமிழ்நாடு" என்பது "மக்கள் மாளிகை தமிழ்நாடு " எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை "மக்கள் மாளிகை" ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது.

    இது, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது. இந்த பெயர்மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும் எக்ஸ் (முன்னாள் டிவிட்டர்), முகநூல் பக்கங்களிலும் ராஜ்பவன் என இருந்த பக்கங்கள் லோக் பவன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    • சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.

    இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 3 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது.

    • தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்) (அறிவிக்கை எண்.07/2025, நாள்.25.04.2025 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் 2210.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பிற பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 08.12.2025 முதல் 18.12.2025 வரை (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நீங்கலாக) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை 600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் தொடரும் மழை
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.

    இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

    இதனால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்தும், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

    • சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட்.
    • ஒரு மணி நேரமாக இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் காலை முதல் பெய்து வந்த கனமழை சுமார் ஒரு மணி நேரமாக இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    • சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
    • 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெறும்.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையை தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
    • 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெறும்.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையை தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 10.12.2025 முதல் 18.12.2025 வரை விருப்பமனு பெறப்படுகிறது
    • விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி ஆகியவை அப்படியே தொடருமா, மாறாக இவற்றில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விலகுமா என யூகங்களும், பேச்சுகளும் இப்போதே அடிபட தொடங்கியுள்ளன.

    இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதவில், 

    "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    • தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவு.
    • பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஏற்கத்தக்கதல்ல என மனு தாக்கல்.

    திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஏற்கத்தக்கதல்ல என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×