என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    • முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல் சதத்தால் 199 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல் அசத்தல் சதத்தால் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.

    • டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய டெல்லி அணி 199 ரன்களை குவித்தது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அபிஷேக் பொரெல் 30 ரன்னும், அக்சர் படேல் 25 ரன்னும், ஸ்டப்ஸ் 21 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    சாய் சுதர்சன் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணியின் 5வது தோல்வி இதுவாகும்.

    • கே.எல்.ராகுல் டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்தார்.
    • இதனை தனது 224 இன்னிங்சில் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 60வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 36 ரன் எடுத்தபோது டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்தார். இதனை தனது 224 இன்னிங்சில் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்குமுன் விராட் கோலி 243 இன்னிங்சில் 8,000 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை கே.எல்.ராகுல் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய 3-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    • போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொண்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

    இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அசத்தியுள்ளார். மேலும், அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25, த்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களை எடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

    • ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது

    இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.

    இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.

    இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்கியது.

    ஆனால் ஆட்டத்தின் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இந்நிலையில், ஐபிஎஸ் தொடர் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.

    • இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

    டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது.

    குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.

    • ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியுள்ளது.

    ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளதால் அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடினமாக போராடும்.

    அதே சமயம் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்நிலையில், இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.

    இதன்மூலம், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்குகிறது.

    இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.

    • ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.

    ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளதால் அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடினமாக போராடும். அதே சமயம் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    • ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது என்று தோனி தெரிவித்தார்.
    • ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை.

    நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பு பேசிய சி.எஸ்.கே. அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, "எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதத்துக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    43 வயதான தோனி, ஓய்வு பெறுவது குறித்து எந்தவொரு தகவலையும் இன்னும் அணி நிர்வாகத்திடம் கூறவில்லை எனக் கூறப்படுகிறது

    • டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் உள்ளார்.
    • குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

    டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கம்பீரமாக தொடங்கிய டெல்லி அணி கடைசி 5 ஆட்டங்களில் 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் தடுமாறி வருகிறது. பஞ்சாப்புக்கு எதிரான அந்த அணியின் முந்தைய ஆட்டம் போர் பதற்றம் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. டெல்லி அணி எஞ்சிய 3 ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடினால் தான் அடுத்த சுற்றுக்குள் சிக்கலின்றி அடியெடுத்து வைக்க முடியும். மாறாக இரண்டில் வெற்றி பெற்றால் அடுத்த அணிகளின் முடிவுக்காக காத்து இருக்க வேண்டியது வரும்.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் உள்ளார். அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ், அஷூதோஷ் ஷர்மா, கருண் நாயர் அவ்வப்போது பங்களிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், முகேஷ் குமார், கேப்டன் அக்ஷர் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் தாயகம் சென்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் திரும்பாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். அவர் 14 விக்கெட்டுகள் (11 ஆட்டங்கள்) வீழ்த்தி இருந்தார்.

    குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் சாய் சுதர்சன் (509 ரன்), கேப்டன் சுப்மன் கில் (508), ஜோஸ் பட்லர் (500 ரன்) அசத்தி வருகின்றனர். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (20 விக்கெட்), முகமது சிராஜ் (15), சாய் கிஷோர் (14), ரஷித் கான் மிரட்டக்கூடியவர்கள்.

    டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 204 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையும் களம் காண்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முனைப்பு காட்டும். கடைசி 2 ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தடுமாறிய டெல்லி அணி எழுச்சி பெற்று எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் குஜராத் அணியின் சவாலை சமாளிக்க முடியும்.

    • புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
    • நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி மழையினால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

    இன்று பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மற்றும் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அல்லது டெல்லி அணிகள் தோல்வி அடைந்தால், பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடும்.

    பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் இன்றைய போட்டிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் உடல் தகுதியை எட்டி களம் திரும்புவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    ஜெய்ப்பூர்:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.

    ஏற்கனவே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 9 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும். நடப்பு தொடரில் உள்ளூரில் நடைபெறும் கடைசி ஆட்டமான இதனை வெற்றியுடன் நிறைவு செய்ய அந்த அணி ஆர்வம் காட்டும் என்பதில் ஐயமில்லை.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (473 ரன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், நிதிஷ் ராணா, ஹெட்மயர், 14 வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியும், பந்து வீச்சில் தீக்ஷனா, ஹசரங்கா, சந்தீப் ஷர்மாவும் நம்பிக்கை அளிக்கின்றனர். 11 விக்கெட்டுகள் (12 ஆட்டம்) வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) எஞ்சிய போட்டியில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பின்னடைவாகும். அதேநேரத்தில் காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் உடல் தகுதியை எட்டி களம் திரும்புவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

    ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) 15 புள்ளிகள் எடுத்துள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒன்றில் மட்டும் வெற்றி கண்டால் மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

    தர்மசாலாவில் கடந்த 8-ந் தேதி இரவு நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து இருந்த போது, எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதல் எதிரொலியாக ஸ்டேடியத்தில் மின்தடையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அதன் பிறகு பஞ்சாப் அணி களம் இறங்கும் முதல் ஆட்டம் இதுவாகும்.

    பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் (437 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (405), பிரியான்ஷ் ஆர்யா, ஷசாங் சிங், நேஹல் வதேராவும் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிராரும் வலுசேர்க்கின்றனர்.

    ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட பஞ்சாப் அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை அதிகரிக்கவும் தீவிரம் காட்டும். முந்தைய வெற்றியால் நம்பிக்கையுடன் உள்ள ராஜஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காகவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் 12 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ராஜஸ்தான்: வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, நன்ரே பர்கர், ஆகாஷ் மத்வால்.

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மிட்ச் ஓவென், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், கைல் ஜாமிசன்.

    மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×