என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் பிளேஆஃப்: ஜேக்கப் பெத்தேலுக்குப் பதிலாக நியூசிலாந்து வீரரை ஒப்பந்தம் செய்யும் ஆர்சிபி
    X

    ஐபிஎல் பிளேஆஃப்: ஜேக்கப் பெத்தேலுக்குப் பதிலாக நியூசிலாந்து வீரரை ஒப்பந்தம் செய்யும் ஆர்சிபி

    • இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் 24ஆம் தேதிக்குப் பிறகு சொந்த நாடு திரும்புகிறார்.
    • நியூசிலாந்து வீரரை 2 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 12 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

    இன்னும் இரண்டு போட்டிகளில் மீதமுள்ளது. நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத், 27ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேற முயற்சிக்கும்.

    லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட சென்றுவிடுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. ஆர்சிபி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த ஜேக்கப் பெத்தேல் இடம் பிடித்துள்ளார். பில் சால்ட் விளையாடாதபோது, பெத்தேல் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    இவர் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறார். இதனால் ஆர்சிபி இவருக்குப் பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த டிம் செய்பெர்ட்டை ஒப்பந்தம் செய்ய உள்ளது. இவர் நியூசிலாந்து அணிக்காக 66 டி20 போட்டிகளில் விளையாடி 1540 ரன்கள் அடித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக இவர் மூன்று ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக 2022 தொடரில் விளையாடினார். ஆர்சிபி 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.

    பெத்தேல் நாளைக்கு ஐதராபாத் அணிகெத்திரான போட்டியில் விளையாடுவார். ஆர்சிபி-ஐ தவிர்த்து குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    Next Story
    ×