என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பபை இழந்து லக்னோ வெளியேறியது.

    இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டி போடுகின்றன.

    • மிட்செல் மார்ஷ், மார்கிராம், பூரன் அரைசதம் விளாசினர்.
    • ரிஷப் பண்ட் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ்- மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாடி மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பவர்பிளேயான முதல் 6 ஓவரில் லக்னோ விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 28 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 9 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 6 பந்தில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    3ஆவது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மார்கிராம் 28 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ 15.1 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது. மார்கிராம் 38 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 15.4 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் படோனி ஜோடி சேர்ந்தார். 17 ஓவர் முடிவில் லக்னோ 168 ரன்கள் எடுத்திருந்தது.

    18ஆவது ஓவரை இசான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமு விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனால் லக்னோ 18 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் லக்னோவிற்கு 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 19 ஓவரில் 185 ரன்கள் சேர்த்திருந்தது.

    கடைசி ஓவரை நிதிஷ் ரெட்டி வீசினார். பூரன் 26 பந்தில் 45 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். இந்த ஓவரில் 20 ரன்கள் அடிக்க லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.

    • ராஜஸ்தான் அணியால் இலக்கை நெருங்கி வெற்றி பெற முடியவில்லை.
    • வெற்றி பெறக் கூடிய சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

    ஐபிஎல் 2025 சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்க, பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து 200 ரன்களுக்கும் மேல் சேஸிங் செய்ய முயற்சித்து சொற்ப ரன் வித்தியசாத்தில் தோல்வியைடந்து பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.

    இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் ஐந்து போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் 8 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்துள்ளது.

    நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கெதிராக 10 ரன்னில் தோல்வியடைந்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 219 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 209 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடக்க ஜோடியான ஜெய்வால் (50)- சூர்யவன்ஷி (40) முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 76 ரன்கள் குவித்தது. ஜெய்வால் ஆட்டமிழக்கும்போது 8.4 ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.

    இந்த தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்களை குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. பந்து வீச்சில்தான் குறை உள்ளதாக நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இது 220 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் என நான் நினைக்கவில்லை. இது 195 முதல் 200 ரன்கள் அடிக்கக்கூடிய விக்கெட். நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம்.

    நிங்கள் ஸ்கோரை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. விக்கெட் வீழ்த்துவது மற்றும் ரன்னை கட்டுப்படுத்துவது ஆகிய இரண்டிலும்தான். ஒவ்வொரு போட்டியில் நாங்கள் 200 முதல் 220 வரை சேஸிங் செய்ய வேண்டியிருந்தது.

    இது மிகவும் கடினமானது. ஸ்கோரை நெருங்கி வந்தோம், ஆனால், எங்களால் போட்டியை முடிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சற்று கூடுதலாக ரன் சேர்க்க முடியாததால் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை என்பதை உணர்வீர்கள். கடைநிலை வீரர்களுக்கு கிளக் ஆகி எங்களுக்கு தேவையான பெரிய ஷாட்கள் கிடைக்கவில்லை.

    இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத்து அணிக்கு இந்த போட்டியின் வெற்றி தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏற்கனவே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. லக்னோ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

    மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில் ஓ'ரூர்கி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-

    இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, ஜீசன் அன்சாரி, எசான் மலிங்கா.

    • நாம் பேசும் ஒரு விசயம் விக்கெட்டுக்கு இடையில் ஓடுவது.
    • அதையும் தாண்டி நான் தவறு செய்தால் சுப்மன் கில் சுட்டிக் காட்டுவார்.

    ஐபிஎல் 2025 சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன் (108), சுப்மன் கில் (93) அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 19 ஓவரில் சேஸிங் செய்து குஜராத் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    அத்துடன் 617 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். சுப்மன் கில் 601 ரன்கள் அடித்துள்ளார். சுப்மன் கில்- சாய் சுதர்சன் ஜோடி இந்த தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இதற்கு எங்களுடைய புரிதல்தான் காரணம் என சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சாய் சுதர்சன் கூறியதாவது:-

    எனக்கும் சுப்மன் கில்லுக்கும் இடையில் அதிக அளவில் புரிதல் உள்ளது. விக்கெட்டுக்கு இடையில் ஓடுவது நாம் பேசும் ஒரு விசயம். அதையும் தாண்டி நான் ஒரு தவறு செய்தால், அவர் சுட்டிக்காட்டுவார். அதேபோல்தான் சுப்மன் கில் ஒரு தவறு செய்தாலும் நான் சுட்டிக்காட்டுவேன். இந்த சேஸிங் அணியின் வெற்றிக்கு உதவியதால் நான் சிறந்ததாக உணர்கிறேன்.

    இவ்வாறு சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    • லுங்கி நிகிடி தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட செல்வதால் பிளேஆஃப் சுற்றில் பங்கேற்கமாட்டார்.
    • ஜிம்பாப்வே வீரர் முசாரபானியை பிளேஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லியை குஜராத் அணி வீழ்த்தியதன் மூலம் குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    ஆர்சிபி அணியில் லுங்கி நிகிடி இடம் பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி ஜூன் 11ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனால் லுங்கி நிகிடி பிளேஆஃப் சுற்றில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த முசாரபானியை தேர்வு செய்துள்ளதை ஆர்சிபி உறுதி செய்துள்ளது. பிளேஆஃப் சுற்றுக்காக மட்டும் தற்காலிகமாக 75 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    முசாரபானி 70 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கான 12 டெஸ்ட் மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் முடிவடைந்த பின்னர் ஆர்சிபி அணியில் முசாரபானி இணைய உள்ளார்.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 93 ரன்கள் அடித்தார்.
    • 143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். .

    இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த 2வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்து உள்ளார்.

    143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார். சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்துள்ளார்.

    • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்தார்.
    • பஞ்சாப் அணிக்காக 2 சதங்களும் லக்னோ அணிக்காக 2 சதங்களும் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    மேலும், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.

    ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக 2 சதங்களும் லக்னோ அணிக்காக 2 சதங்களும் அடித்திருந்த கே.எல்.ராகுல் தற்போது டெல்லி அணைக்கவும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    • 2019, 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி அணியை பிளேஆப் சுற்றுக்கும் ஷ்ரேயாஸ் அழைத்து சென்றார்.
    • 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிற்கும் கோப்பையை ஷ்ரேயாஸ் பெற்றுக்கொடுத்தார்.

    நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.

    மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதன்மூலம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப் சென்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் படைத்துள்ளார்.

    2019, 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி அணியை பிளேஆப் சுற்றுக்கும் ஷ்ரேயாஸ் அழைத்து சென்றார். பின்பு 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிற்கும் கோப்பையை ஷ்ரேயாஸ் பெற்றுக்கொடுத்தார். தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் அணியை பிளேஆப் சுற்றுக்கு ஷ்ரேயாஸ் அழைத்து சென்றுள்ளார். 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.

    ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் தோற்றுள்ளது. முந்தைய மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது.

    தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில் இருக்கும் லக்னோ அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். மாறாக தோற்றால் அந்த அணியின் வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமத் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஷர்துல் தாக்குர், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளித்தாலும், தாக்கம் எற்படுத்த தவறுகின்றனர்.

    ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை (டெல்லிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணியில் அதிரடி சூரர்கள் அதிகம் இருந்தாலும், அவர்களது ஆட்டம் ஒருசேர நன்றாக அமையாததால் சறுக்கலை சந்தித்தது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (314 ரன்), ஹென்ரிச் கிளாசென் (311), நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன் என்று பெரிய அதிரடி பட்டாளமே இருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் சரியாக நிலைத்து நிற்கவில்லை. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கேப்டன் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி வலுசேர்க்கின்றனர். அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று இந்தியா வருகிறார். அவர் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.

    ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எல்லா வகையிலும் வரிந்து கட்டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் முடிந்த வரை முன்னேற்றம் காண ஐதராபாத் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான்.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ், கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது
    • தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது

    நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.

    மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இதன்மூலம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது. 11 ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது

    பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.

    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேசியதாவது:

    முந்தைய நாள் பயிற்சியின் போது கைவிரலில் பந்து தாக்கியதால் வலி இருந்தது. காயத்தின் தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. அதனை பரிசோதனை செய்யவேண்டும்.

    பீல்டிங் செய்ய களம் இறங்காததால் வெளியில் இருந்தபடி வீரர்களுக்கு தகவல்களை பரிமாறினேன். எதிரணி சிறப்பாக ஆடும் போது நமது வீரர்களுக்கு தளர்வு ஏற்படும். அதனை தவிர்க்கவே வீரர்களுடன் தொடர்ந்து பேசினேன். எங்கள் அணி வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது.

    ஹர்பிரீத் பிரார் வலைபயிற்சியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அருமையாக செயல்பட்டார். அவரது மனநிலை அபாரமாக இருக்கிறது.

    சூழ்நிலை எப்படி இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் என்ற மனநிலையை நாங்கள் ஒருங்கிணைந்து வெளிக்காட்டி இருக்கிறோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. எனவே பெரும்பாலான ரன்களை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தோம். எந்தச் சூழ்நிலையிலும் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என தெரிவித்தார்.

    ×