என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: ஐதராபாத்துக்கு எதிராக ஆர்சிபி பந்து வீச்சு தேர்வு
- ரஜத் படிதார் இம்பேக்ட் பிளேயராக களம் வருவதால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.
- மயங்க் அகர்வால் படிதாருக்குப் பதிலாக களம் இறங்குகிறார்.
ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, அபிநவ் மனோகர், கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனத்கட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:-
பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், லுங்கி நிகிடி, சுயாஷ் சர்மா.






