என் மலர்tooltip icon

    விளையாட்டு

    போன முறை மாதிரி ஏமாந்திட கூடாது... டாஸ் போடும் போது டு பிளெசிஸ் செய்த செயல் வைரல்
    X

    போன முறை மாதிரி ஏமாந்திட கூடாது... டாஸ் போடும் போது டு பிளெசிஸ் செய்த செயல் வைரல்

    • 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
    • டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று இரவு வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி யார் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது. டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இதனிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் பங்கேற்ற டாஸ் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் போடுவதற்கான நாணயத்தை வாங்கும் போது டெல்லி அணி கேப்டன் டு பிளெசிஸ் அதனை சரிபார்ப்பது போன்று பார்க்கிறார். அப்போது மற்றொருவர் அந்த நாணயத்தை காண்பித்ததும் டு பிளெசிஸ் தலை ஆட்டியதும் ஹர்திக் பாண்டியா டாஸ் போடுகிறார்.

    கடந்தாண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடப்பட்டபோது பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் ஏமாற்றப்பட்டார் என்று அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அதனால் கடந்தாண்டு ஏமாந்தது போல இந்தாண்டு ஏமாற கூடாது என்று டாஸ் நாணயத்தை டு பிளெசிஸ் சரிபார்த்தார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.



    Next Story
    ×