என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    எதிரணியை ஆல் அவுட் செய்வதில் யாரும் தொட முடியாத உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ்
    X

    எதிரணியை ஆல் அவுட் செய்வதில் யாரும் தொட முடியாத உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ்

    • எதிரணியை ஆல் அவுட் செய்த அணிகள் பட்டியலில் ஆர்சிபி 2-வது இடத்தில் (26 முறை) உள்ளது.
    • 24 முறை எதிரணியை ஆல் அவுட் செய்த சிஎஸ்கே 4-வது இடத்தில் உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    இந்த போட்டியில் எதிரணியை ஆல் அவுட் செய்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் யாரும் தொட முடியாத சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.

    அதன்படி எதிரணியை 40 முறை ஆல் அவுட் செய்து மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆர்சிபி அணி (26 முறை) உள்ளது. 3 முதல் 5 இடங்கள் முறையே கொல்கத்தா (25), சென்னை (24), பஞ்சாப் (19) ஆகிய அணிகள் உள்ளனர்.

    அடுத்த 5 இடங்கள் முறையே ஐதராபாத் (19 முறை), டெல்லி (18), ராஜஸ்தான் (17), குஜராத் (5), லக்னோ (4) ஆகிய அணிகள் உள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×