என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    • பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் விளாசினார்.
    • தென் ஆப்பிரிக்காவின் பவுமா தொடர்ந்து 13 ஆட்டங்களில் 25 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் களம் இறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் (14 ஆட்டம்) குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 14 ஆட்டங்களில் 25 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவின் பவுமா தொடர்ந்து 13 ஆட்டங்களில் 25 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை சூர்யகுமார் யாதவ் முறியடித்தார்.

    அத்துடன் ஆரஞ்சு நிற தொப்பிக்கான போட்டியில் 3-வது இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் நடப்பு தொடரில் 5 அரைசதம் உள்பட 640 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சிறப்பையும் வசப்படுத்தினார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் (2010-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    • பெங்களூரு அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும்.

    லக்னோ:

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்றுடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்ட பெங்களூரு அணிக்கு இது முக்கியமான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பெங்களூரு 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக புள்ளிபட்டியலில் டாப்-2 இடத்தை பிடிக்க முடியும். மாறாக தோற்றால் 3-வது இடத்திலேயே இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய சண்டையால் போட்டி தொடர் 9 நாட்கள் தடைபடுவதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடைபோட்ட பெங்களூரு அணி மீண்டும் போட்டி தொடங்கிய பிறகு உத்வேகத்தை இழந்து நிற்கிறது. அதன் பின்னர் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் பணிந்தது. 232 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் பெங்களூரு 189 ரன்னில் அடங்கியது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (548 ரன்), பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதாரும், பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், நல்ல நிலையில் உள்ளனர். தோள்பட்டை காயத்தால் தாயகத்துக்கு சென்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் திரும்பி இருக்கிறார். 10 ஆட்டங்களில் ஆடி 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அவரது வருகை நிச்சயம் பெங்களூருவுக்கு வலுசேர்க்கும்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக 235 ரன்கள் குவித்த லக்னோ அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 560 ரன்), நிகோலஸ் பூரன் (511), மார்க்ரம் (445), ஆயுஷ் பதோனி (329) அசத்துகின்றனர். பந்து வீச்சில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், தற்காலிக மாற்று வீரர் வில்லியம் ஓ ரூர்கே நம்பிக்கை அளிக்கின்றனர். ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி (14 விக்கெட்) மீண்டும் களம் காண்பது பந்துவீச்சை பலப்படுத்தும்.

    டாப்-2 இடத்தை பிடிக்க பெங்களூரு அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு 3 ஆட்டத்திலும், லக்னோ 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், திக்வேஷ் ரதி, ஹிமாத் சிங், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், வில்லியம் ஓ ரூர்கே, ஆகாஷ் சிங்.

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஷ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு பஞ்சாப் முன்னேறியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் 57 ரன்களுடன் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து, 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஷ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றது.

    பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டியில் மும்பை விளையாடவுள்ளது.

    • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 2010-ம் ஆண்டு சச்சின் 618 ரன்கள் எடுத்ததே ஒரு சீசனில் மும்பைக்காக எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் 619 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 15 வருட சச்சினின் சாதனையை சூர்யகுமார் முறியடித்துள்ளார். 2010-ம் ஆண்டு சச்சின் 618 ரன்கள் எடுத்ததே ஒரு சீசனில் மும்பைக்காக எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.

    மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:-

    619* - சூர்யகுமார் யாதவ் (2025)

    618 - சச்சின் டெண்டுல்கர் (2010)

    605 - சூர்யகுமார் யாதவ் (2023)

    553 - சச்சின் டெண்டுல்கர் (2011)

    540 - லென்டில் சிம்மன்ஸ் (2015)

    538 - ரோஹித் சர்மா (2013)

    • மும்பை தரப்பில் சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்தார்.
    • பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர். தொடக்கம் முதலே ரியான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மந்தமாக விளையாடிய ரோகித் சர்மா 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்த வந்த வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஹர்திக் 26 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த நமன் தீர் - சூர்யாகுமாருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அவர் 11 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் 57 ரன்களுடன் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • வெற்றிபெறும் அணி முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும்.
    • பஞ்சாப் 17 புள்ளிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளிகளிலும் உள்ளன.

    ஐபிஎல் 2025 சீசனில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டியாகும். இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல 2 இடங்களுக்குள் செல்லும்.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், சான்ட்னெர், தீபக் சாஹர், பும்ரா, போல்ட்.

    பஞ்சாப் கிங்ஸ் அணி:-

    பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், ஜோஷ் இங்கிலிஷ், வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், கைல் ஜாமின்சன், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைஷாக்.

    • 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்தில் உள்ளது.
    • 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.

    இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி படைத்துள்ளது.

    அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும், 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கிளாசன் சதம் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை கிளாசன் தட்டிச் சென்றார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ச் ஐதராபாத் அணி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹென்ரிச் கிளாசென் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.

    அதன்படி இப்போட்டியில் கிளாசென் 37 பந்துகளில் சதத்தை பதிவுசெய்து அசத்தியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த 3-வது வீரர் எனும் சாதனையை சமன்செய்துள்ளார்.

    முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய நிலையில், தற்சமயம் ஹென்ரிச் கிளாசன் அவரின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.

    அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது ஹென்ரிச் கிளாசென், யூசுஃப் பதான் ஆகியோர் கூட்டாக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.

    ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள்

    30 பந்துகள் – கிறிஸ் கெய்ல் vs புனே வாரியர்ஸ் இந்தியா, 2013

    35 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs குஜராத் டைட்டன்ஸ், 2025

    37 பந்துகள் – ஹென்ரிச் கிளாசென் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2025*

    37 பந்துகள் – யூசுப் பதான் vs மும்பை இந்தியன்ஸ், 2010

    இதுதவிர்த்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் ஹென்ரிச் கிளாசென் படைத்துள்ளார். முன்னதாக அபிஷெக் சர்மா 39 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 43 பந்துகளில் சதமடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர்கள்

    37 - ஹென்ரிச் கிளாசென் vs கேகேஆர், 2025*

    39 - அபிஷேக் சர்மா vs பஞ்சாப் கிங்ஸ், 2025

    43 - டேவிட் வார்னர் vs கேகேஆர், 2017

    45 - இஷான் கிஷன் vs ராஜஸ்தான் ராயல்ஸ், 2025

    இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 278 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியானது 168 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

    • ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.
    • நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

    நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்து குவாலிபியர் 1 போட்டியில் பெங்களூரு அணி விளையாடும்.

    லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட சென்றுவிடுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில், லுங்கி இங்கிடிக்கு பதிலாக, ஆர்சிபி அணியில் ஜிம்பாப்வே வீரர் பிளசிங் முசராபானி. இணைந்துள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சிக்காக தென்னாப்பிரிக்க அணியுடன் லுங்கி இங்கிடி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் எதிரான போட்டியில் சென்னை அணி 230 ரன்கள் குவித்தது.
    • 83 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினாலும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களை சென்னை அணி சந்தோசப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, "அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்" என்று சுரேஷ் ரெய்னா கூறினார். அதற்கு அவர் பெயர் S-ல் தொடங்குமா?

    என்று சக வர்ணனையாளர் சோப்ரா, கிரிக்கெட் கேட்க, அவர் இந்த அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சுரேஷ் ரெய்னா சிரித்தபடியே பதில் கூறினார்.

    • குஜராத்தை விட ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும்.
    • பஞ்சாப் தோற்றால் 3 அல்லது 4-வது இடத்தில் இருக்கும்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று 'கிளைமாக்ஸ்' கட்டத்துக்கு வந்துவிட்டது. நாளையுடன் லீக் போட்டி முடிவடைகிறது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் 69-வது லீக்கில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர் கொள்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும்.

    கடைசி 8 ஆட்டங்களில் 7-ல் வாகை சூடி வீறுநடை போடும் மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் 18 புள் ளியை எட்டும். குஜராத்தை விட ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும். தோற்றால் 4-வது இடத்திலேயே நீடிக்கும்.

    டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 206 ரன்கள் குவித்தும் கடைசி ஓவரில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தினால் அதன் புள்ளிகள் 19-ஆக உயரும். அப்போது அந்த அணிக்கு டாப்-2 இடங்கள் உறுதியாகும். கடைசி லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோவை தோற்கடித்தாலும் பிரச்சினை இருக்காது. மாறாக பஞ்சாப் தோற்றால் 3 அல்லது 4-வது இடத்தில் இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட்டை பொறுத்தவரை டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டியை எட்ட இரண்டு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணியிலும் அதிரடி சூரர்கள் நிறைந்து இருப்பதால், ரன் விருந்தையும் எதிர்பார்க்கலாம். தொடர்ந்து 13 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் கால்சதத்தை எட்டினால் அது புதிய வரலாற்று சாதனையாக அமையும்.

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் நரைன் விளையாடியுள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.

    கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் விளையாடியுள்ள நரைன் 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இதற்கு முன்பு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக இங்கிலாந்தின் சமித் படேல் 208 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

    டி20 கிரிக்கெட்டில்ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்

    1. சுனில் நரைன் - 210* (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

    2. சமித் படேல் - 208 (நாட்டிங்ஹாம்ஷையர்)

    3. கிறிஸ் உட் - 199 (ஹாம்ப்ஷயர்)

    4. லசித் மலிங்கா - 196 (மும்பை இந்தியன்ஸ்)

    5. டேவிட் பெய்ன் - 193 (க்ளௌசெஸ்டர்ஷையர்)

    ×