என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

VIDEO: சோகத்தின் உச்சம்: பஞ்சாப் தோல்வி.. கண்ணீர் ததும்ப பிரீத்தி ஜிந்தா கொடுத்த ரியாக்ஷன் வைரல்!
- ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- புன்னகையுடனும், உற்சாகத்துடனும் இருந்த அவரின் முகம் மாறியது.
ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே ஆர்சிபி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆர்சிபி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம்ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனிடையே பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்வி அதன் இணை உரிமையாளரான நடிகை பிரீத்தி ஜிந்தாவை நிலைகுலைய வைத்திருக்கிறது. தனது அணி வெறும் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்தே பிரீத்தி ஜிந்தாவை கவலை தொற்றிக்கொண்டது.
புன்னகையுடனும், உற்சாகத்துடனும் இருந்த அவரின் முகம் மாறியது. அரங்கில் அமர்ந்திருந்த அவர் அதன்பின் சோகத்துடனேயே காணப்பட்டார்.
ஏமாற்றத்தாலும், வருத்தத்தாலும் அவர் கொடுத்த ரியாக்ஷன்கள் மற்றும் இறுதியில் தோல்வி உறுதியானதும் அவர் காணப்பட்ட நிலை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் சோகமடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர். குறிப்பாக முந்திய பஞ்சாப் வெற்றியின்போது அவர் துள்ளிக்குதித்த வீடியாவுடன் இதை பலரும் ஒப்பிட்டு வருகின்றனர்.






