என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் கோப்பையை வென்றால்.. கர்நாடக முதலமைச்சருக்கு ஆர்சிபி ரசிகர் எழுதிய கடிதம் வைரல்
    X

    ஐபிஎல் கோப்பையை வென்றால்.. கர்நாடக முதலமைச்சருக்கு ஆர்சிபி ரசிகர் எழுதிய கடிதம் வைரல்

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    • குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் பெங்களூரு-பஞ்சாப் ஆகிய அணிகள் நேற்று மோதின. இதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

    ஐபிஎல் அணிகளில் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளதாக அணியாக ஆர்சிபி உள்ளது. ஆனால் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாதது அந்த அணி வீரர்களை விட அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.

    ஒவ்வொரு தொடரின் போதும், எதாவது ஒரு ஆர்சிபி ரசிகர், ஆர்சிபி கோப்பையை வென்றால்தான் திருமணம் முடிப்பேன், வேலைக்கு செல்வேன் என போட்டியின் போது பேனர்களை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    இவர்களுக்கும் மேலாக ஒரு ரசிகர் அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கே ஒரு கடித்தத்தை எழுதியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றால் அந்த நாளை பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அந்த அணியின் தீவிர ரசிகர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் விடுமுறை கொடுத்து, ரசிகர்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×