என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்சிபி ரசிகர்கள்"
- நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் பெங்களூரு-பஞ்சாப் ஆகிய அணிகள் நேற்று மோதின. இதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.
ஐபிஎல் அணிகளில் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளதாக அணியாக ஆர்சிபி உள்ளது. ஆனால் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாதது அந்த அணி வீரர்களை விட அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.
ஒவ்வொரு தொடரின் போதும், எதாவது ஒரு ஆர்சிபி ரசிகர், ஆர்சிபி கோப்பையை வென்றால்தான் திருமணம் முடிப்பேன், வேலைக்கு செல்வேன் என போட்டியின் போது பேனர்களை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இவர்களுக்கும் மேலாக ஒரு ரசிகர் அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கே ஒரு கடித்தத்தை எழுதியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றால் அந்த நாளை பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அந்த அணியின் தீவிர ரசிகர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் விடுமுறை கொடுத்து, ரசிகர்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
- பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி 379 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.
- இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.
பெங்களூரு அணி இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான். அளவுகடந்த ஆதரவு, அர்ப்பணிப்பு, அன்பிற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். எங்கள் ரசிகர்கள் குடும்பத்தின் அங்கமாக உள்ளனர்.
இவ்வாறு கோலி கூறினார்.






