என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஒருநாள் பேட்டர் தரவரிசையில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
- முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் கோலி 5-வது இடத்திலும் தொடர்கின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் பின் தங்கி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே 11 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா முதல் முறையாக முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
- நீங்கள் ஒரு தனி நபரை மட்டும் குறை சொல்ல முடியாது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேசமயம் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக இந்திய அணி ஹோமில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சறுக்கல்கள் எற்பட்டுள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளார் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சறுக்கல்கள் எற்பட்டுள்ளன. ஆனால் யாராவது ஒருவர் நான் இதை தடுத்தாக வேண்டும் என்று விளையாட வேண்டும். அது இம்முறை நடக்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்த அணி வேறு. அனுபவம் வாய்ந்தது. இந்த அணி வேறு. நீங்கள் ஒப்பிட முடியாது. அவர்களுக்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும்.
நான் அனைவரிடமிருந்தும் இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறேன். நீங்கள் ஒரு தனி நபரை மட்டும் குறை சொல்ல முடியாது என கம்பீர் கூறினார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது.
- WTC போட்டிகளில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது.
கவுகாத்தி:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.
288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 549 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
549 ரன் என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த தோல்வியால் இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதனால் வெற்றியின் சதவீதம் 48.15 ஆகும். இதன் அடிப்படையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் 100 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. 3-வது 4-வது இடங்கள் முறையே இலங்கை பாகிஸ்தான் அணிகள் உள்ளது.
- இந்திய அணி 2-வது இன்னிங்சில் 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- கடைசியாக 2000-ம் ஆண்டு 2 போட்டிக் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
கவுகாத்தி:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.
288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 549 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டப்ஸ் 94 ரன்னும், சோர்சி 49 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்றினார்.
549 ரன் என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கே.எல். ராகுல் 6 ரன்னிலும் பெவிலியன் திரும்பினார்கள். சாய் சுதர்சன் 2 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. வெற்றிக்கு மேலும் 522 ரன் தேவை, கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தொடர்ந்தது.
குல்தீப் யாதவ் 5 ரன்னில் ஹார்மர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த துருவ் ஜூரல் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஹார்மர் கைப்பற்றினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 13 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக விளையாடினர். 139 பந்துகள் சந்தித்து 14 ரன்கள் எடுத்த நிலையில் சுதர்சன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 16, நிதிஷ் குமார் 0 என வெளியேறினார். ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த சிராஜ் அதே ஓவரில் ஆவுட் ஆக இந்திய அணி 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொட ரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2000-ம் ஆண்டு 2 போட்டிக் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
- இதற்கு முன்பு தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
- அனில் கும்ப்ளே போன்ற முன்னாள் வீரர்களும் அவரது வேட்புமனுவை ஆதரித்துள்ளனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளார் வெங்கடேஷ் பிரசாத் (Venkatesh Prasad). இவர் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கன்னட வர்ணனையாளராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துடன் (Karnataka State Cricket Association - KSCA) நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார். தற்போது, வெங்கடேஷ் பிரசாத் KSCA-யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம். ஏனெனில் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் தலைவராக பொறுப்பேற்க தயாராக உள்ளார்.
அனில் கும்ப்ளே போன்ற முன்னாள் வீரர்களும் அவரது வேட்புமனுவை ஆதரித்துள்ளனர்.
முன்னதாக 2010 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் அணில் கும்ப்ளே கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த சமயத்தில் வெங்கடேஷ் பிரசாத் துணை தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங் டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
- தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.
புதுடெல்லி:
மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.
4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மெகா ஏலம் டெல்லியில் நாளை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.
இந்த ஏலத்துக்கான பட்டியலில் 194 இந்திய வீராங்கனைகள், 83 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 277 பேர் இடம் பெற்றுள்ளனர். 5 அணிகளில் விளையாடுவதற்காக 50 இந்திய வீராங்கனைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.
வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்ட், இங்கிலாந்தின் சோபி எக்லஸ் டோன், நியூசிலாந்தின் சோபி டிவைன், அமீலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல் வார்ட் ஆகியோரை ஏலம் எடுக்கவும் அணிகள் இடையே போட்டி ஏற்படும்.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
- கே.எல். ராகுல் தலைமையிலான அணியில் ரோகித், கோலி, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. டெஸ்ட் தொடர் இன்று நிறைவடைந்த உடன் இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கே.எல். ராகுல் தலைமையிலான அந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று இந்தியா வந்தடைந்துள்ளார். மும்பை விமான நிலையத்திலிருந்து அவர் வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். விராட் கோலி ஏறக்குறைய 6 மாதங்கள் கழித்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடப்பு சாம்பியன் மும்பை அணி ‘ஏ’ பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு ‘டி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
- ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் லீக்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
ஐதராபாத்:
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை ஐதராபாத், ஆமதாபாத், கொல்கத்தா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் 'எலைட்', 'பிளேட்' என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 'எலைட்' பிரிவில் களம் காணும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
நடப்பு சாம்பியன் மும்பை அணி 'ஏ' பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு 'டி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.
'பிளேட்' பிரிவில் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த பிரிவு ஆட்டங்கள் புனேயில் நடக்கின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு போட்டியில் 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும். 'எலைட்' பிரிவில் கடைசி 2 இடத்தை பெறும் அணிகள் அடுத்த ஆண்டு 'பிளேட்' பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.
இந்த போட்டியில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (இருவரும் மும்பை), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), சஞ்சு சாம்சன் (கேரளா), அக்ஷர் பட்டேல் (குஜராத்), வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), ரியான் பராக் (அசாம்), வெங்கடேஷ் அய்யர் (மத்தியபிரதேசம்), தீபக் ஹூடா (ராஜஸ்தான்), ரவி பிஷ்னோய் (குஜராத்) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். மினி ஏலம் 16-ந் தேதி நடக்கிறது. இந்திய அணியில் இடம் உறுதி இல்லாத வீரர்கள் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கும் அணி நிர்வாகத்தின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பவும் இந்த போட்டியை சரியான களமாக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் வருண் சக்ரவர்த்தி தலைமையிலான தமிழக அணி, ராஜஸ்தானை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு சந்திக்கிறது. மற்ற ஆட்டங்களில் கர்நாடகா-உத்தரகாண்ட், மும்பை- ரெயில்வே, ஜம்மு காஷ்மீர்-மராட்டியம், இமாசலபிரதேசம்- பஞ்சாப், பரோடா-பெங்கால், டெல்லி-ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன.
- அவரது பந்து வீச்சை பார்த்து யாராவது ஆல்-ரவுண்டர் என்று சொல்வார்களா.
- அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஸ்விங் இல்லை. மெச்சத்தகுந்த பேட்ஸ்மேனும் கிடையாது.
மும்பை:
உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அணித் தேர்வை முன்னாள் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் கடுமையாக குறைகூறியுள்ளார்.
அவர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'ஒரு டெஸ்ட் முடிந்ததும் அடுத்த போட்டியில் யாராவது ஒருவரை அறிமுக வீரராக இறக்குகிறார்கள். அவர்கள் சோதனை முயற்சி என்று சொல்லி தவறு செய்கிறார்கள். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் விரும்பியதை சொல்லிவிட்டு போகட்டும். அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். தேர்வு குழுவின் முன்னாள் தலைவர். எனக்கு என்ன பேச வேண்டும் என்பது தெரியும்.
அணித் தேர்வில் தொடர்ந்து சீரான தன்மை இருக்க வேண்டியது அவசியம். கவுகாத்தி டெஸ்டுக்கு ஆல்-ரவுண்டர் என்ற பெயரில் நிதிஷ்குமார் ரெட்டியை கொண்டு வந்தார்கள். நிதிஷ்குமாரை ஆல்-ரவுண்டர் என்று சொன்னது யார்? அவரது பந்து வீச்சை பார்த்து யாராவது ஆல்-ரவுண்டர் என்று சொல்வார்களா? மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்தார்.
அதன் பிறகு என்ன செய்து விட்டார். அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஸ்விங் இல்லை. மெச்சத்தகுந்த பேட்ஸ்மேனும் கிடையாது. அவர் எப்படி ஒரு நாள் போட்டி அணியிலும் இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாகவா? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நிதிஷ்குமாரை நீங்கள் ஆல்-ரவுண்டர் என்று வர்ணித்தால், நான் அவரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் என்று சொல்ல முடியும். அக்ஷர் பட்டேலுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அனைத்து மட்டத்திலும் சீராக ஆடும் அவரை ஏன் நீக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும்.
- மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனையடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தாமதமாக டிக்ளேர் செய்தது எதனால் என தென் ஆபிரிக்க அணி பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் காரணத்தை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, இந்திய வீரர்கள் மைதானத்தில் அதிக நேரம் ஃபீல்டிங் செய்து விரக்தியில் தவிக்க வேண்டும் என்று நினைத்தோம்.
அவர்களை வெற்றி வாய்ப்பிலிருந்து முற்றிலும் வெளியேற்றும் வரை நாங்கள் பேட்டிங் செய்து, 'மீதமிருக்கும் நேரத்தில் முடிந்தால் பேட்டிங் செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்' என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதே எங்கள் திட்டம்.
அதனால்தான் தாமதமாக டிக்ளேர் செய்தோம். இருந்தாலும், போராட்டமே இல்லாமல் அவர்கள் எளிதாகச் சரிந்துவிடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாளை காலையும் நாங்கள் மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார். ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
அவருக்கு குசால் மெண்டிஸ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.
இறுதியில், இலங்கை அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 98 ரன்னும், குசால் மெண்டிஸ் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி தான் ஆடிய 3 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். இல்லையேல் தனது ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் . இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு ஜிம்பாப்வே அணி நுழைந்துவிடும்.
- டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன
- இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. .
தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.
இந்நிலையில், 2026 டி20 உலக கோப்பை லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளன. எனினும் இந்தியா விளையாடும் போட்டி சென்னையில் கிடையாது. அதனால் தமிழக ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் போட்டிகள்:
பிப்ரவரி 8: நியூசிலாந்து VS ஆப்கானிஸ்தான்
பிப்ரவரி 10: நியூசிலாந்து VS ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)
பிப்ரவரி 13: அமெரிக்கா (USA) vs நெதர்லாந்து
பிப்ரவரி 15: அமெரிக்கா (USA) vs நமீபியா
பிப்ரவரி 17: நியூசிலாந்து Vs கனடா
பிப்ரவரி 19: ஆப்கானிஸ்தான் vs கனடா
பிப்ரவரி 26: X1 vs X2 (சூப்பர் 8)






