என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கர்நாடக கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராகிறார் வெங்கடேஷ் பிரசாத்
- இதற்கு முன்பு தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
- அனில் கும்ப்ளே போன்ற முன்னாள் வீரர்களும் அவரது வேட்புமனுவை ஆதரித்துள்ளனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளார் வெங்கடேஷ் பிரசாத் (Venkatesh Prasad). இவர் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கன்னட வர்ணனையாளராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துடன் (Karnataka State Cricket Association - KSCA) நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார். தற்போது, வெங்கடேஷ் பிரசாத் KSCA-யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம். ஏனெனில் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் தலைவராக பொறுப்பேற்க தயாராக உள்ளார்.
அனில் கும்ப்ளே போன்ற முன்னாள் வீரர்களும் அவரது வேட்புமனுவை ஆதரித்துள்ளனர்.
முன்னதாக 2010 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் அணில் கும்ப்ளே கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த சமயத்தில் வெங்கடேஷ் பிரசாத் துணை தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






