என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது
    • இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் இந்திய சீனியர் வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலியும் இடம் பெற்றனர்.

    கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • ரோகித் சர்மா (38 வயது) அடுத்த உலக கோப்பைக்கு முன் 40 வயதை எட்டிவிடுவார்.
    • உலக கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க உள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகின்றனர். இதன் காரணமாக இந்திய ஜெர்சியில் அவர்களை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர்.

    விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் ஏறக்குறைய 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பினர். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். மறுமுனையில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றினாலும் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி தனது தரத்தை நிரூபித்தார்.

    இதில் ரோகித் சர்மா (38 வயது) அடுத்த உலக கோப்பைக்கு முன் 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி உடல் தகுதியை தக்கவைத்து கொள்ள முடியுமா? என்ற கேள்வி நிலவுகிறது. இருப்பினும் அவர் கடின உடற்பயிற்சி மூலம் உடலை பிட்டாக வைத்து கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியான தகவலின் படி, ரோகித் தனது எதிர்காலம் குறித்த ஊடகங்களுக்கு எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து, அவரது உடற்தகுதி மற்றும் செயல்திறனில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    • மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
    • கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஃபாப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடருக்கு பதிலாக பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் வருவிருக்கும் மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டனும், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவருமான ஃபாப் டு பிளெசிஸுக்கு இப்போது வயது 41.

    கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நாளை நடைபெற உள்ளது.
    • இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் இந்திய சீனியர் வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலியும் இடம் பெற்றனர்.

    • தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார்.
    • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறேன் என கூறினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்த தொடருக்கான, இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெயிக்வாட் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய அணியில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் ருதுராஜ் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என இந்திய அணியின் தற்காலிக கேப்டன் கே ரள் ராகுல் தெரிவித்துள்ளார்.

    அதில், தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறேன் என கூறினார்.

    • 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டது.
    • நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.

    4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டது. அதன்படி இந்தப் போட்டி ஜனவரி 9-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது. 

    நவிமும்பை, வதோதரா ஆகிய 2 இடங்களில் போட்டி நடக்கிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி வதோதராவில் நடக்கிறது. 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டது.

     

    • இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
    • இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.

    இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது கேள்விக்குள்ளாகி உள்ளது.

    இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஆலோசிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

    அகமதாபாத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பி.சி.சி.ஐ அதிகாரிகள், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.

    • மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.
    • ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது.

    சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2027-ல் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியதாவது:-

    ரோகித் சர்மா, விராட் கோலி உலகத் தரத்திலான வீரர்கள் ஆவார்கள். 2027-ல் நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவதற்காக முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு கடின உழைப்பை வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.

    ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. ரோகித் , கோலி முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றார்.

    • மகளிர் பிக்பாஷ் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின.
    • இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    மகளிர் பிக்பாஷ் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. போட்டியின் போது மழை பெய்ததால் ஆட்டம் 5 ஓவர் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்டைக்கர்ஸ் அனி 5 ஓவரில் 46 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தண்டர் அணி 2.5 ஓவரில் 43 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 13 பந்தில் வெறும் 3 ரன்களே தேவைப்பட்டது.

    அப்போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் ஆட்டத்தை நடுவர்கள் நிறுத்தி வைத்தனர்.

    இருப்பினும் களத்தில் இருந்த இரு நடுவர்களும் போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர். இதனை சற்று எதிர்பாரத தண்டர் அணி வீராங்கனைகள் கோபத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

    மேலும் வெளியில் இருந்த மற்ற வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலரும் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்தனர். இந்த முடிவை நடுவர்கள் வேண்டும் என்றே அறிவித்தது வெளிப்படையாக தெரிந்தது.  

    • சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் இன்று மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 72 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.'

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவரில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி அணி விளையாடியது.

    பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ஹிம்மாட் சிங் வேகமாக சுற்றினார். அந்த பந்து பவுண்டரி லைனில் நின்ற ஷாருக்கானிடம் சென்றது. அதனை பார்த்த அவர் உடனே முன்னாடி வந்தார். ஆனால் பந்து பின் நோக்கி செல்வதை அறிந்து மீண்டும் பின்னாடி போய் பந்தை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து அவரின் கையில் பட்டு சிக்சர் ஆனது.

    இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2 போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    • அரியானா- பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் 207 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.
    • இதனால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அங்கிட் குமார் தலைமையிலான அரியானா அணியும் அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த ஓவரை அன்ஷுல் காம்போஜ் வீசினார். முதல் பந்தில் 1 ரன் விட்டுக்கொடுத்த அவர் அடுத்த 2 பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அபிஷேக் சர்மா, சன்வீர் சிங் ஆகியோர் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்கள். இதனால் அரியானா அணிக்கு 2 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அரியானா அணி முதல் பந்திலேயே அடித்து வெற்றி பெற்றது.

    சூப்பர் ஓவரில் மிரட்டிய அன்ஷுல் காம்போஜ் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - இலங்கை அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இந்த தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    அதன்படி இந்த டி20 தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 2 போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

    முதல் டி20 டிசம்பர் 21-ந் தேதியும் 2-வது டி20 போட்டி 23-ந் தேதியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 3,4,5-வது டி20 போட்டிகள் முறையே 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

    ×