என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
- முதலில் ஆடிய ஆர்.சி.பி. 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி 62 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 55 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரொமாரியோ 14 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
சிஎஸ்கே சார்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.
ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.
முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஷேக் ரசீது 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாம் கர்ரன் 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு ஆயுஷ் மாத்ரேவுடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி 114 ரன்கள் சேர்த்த நிலையில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பிரேவிஸ் டக் அவுட்டானார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 77 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி திரில் வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
- ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.
ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.
சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.
- ஜெய்ஸ்வால் 13 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.
- கே.எல். ராகுல், கம்மின்ஸ் ஆகிய இருவரும் 14 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.
ஐபிஎல் 2025 சீசனின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது.
ஆர்சிபி ஒரு கட்டத்தில் 17.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு டிம் டேவிட் உடன் ரொமாரியோ ஷெப்பர்டு ஜோடி சேர்ந்தார். 19ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார்.
4ஆவது மற்றும் 5ஆவது பந்தை மீண்டும் சிக்சருக்கு தூக்கினார். 5ஆவது பந்து நோ-பால் ஆகும். அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ரன் அடிக்கவில்லை. கடைசி பந்தை பவுண்டரிக்கு துரத்தினார்.
இதனால் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்தார் கலீல் அகமது. இந்த ஓவரில் 32 ரன்கள் அடித்தார் ஷெப்பர்டு. 9 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். முதல் பந்தில் டிம் டேவிட் ஒரு ரன் எடுத்தார். 2ஆவது பந்தை ஷெப்பர்டு பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் ரன் அடிக்கவில்லை. 4ஆவது பந்தை பவுண்டரிக்கு துரத்தினார். 5ஆவது மற்றும் 6ஆவது பந்தில் இமாலய சிக்ஸ் அடித்தார். அத்துடன் ரொமாரியோ ஷெப்பர்டு 14 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 53 ரன்கள் விளாசினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) 2023ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கெதிராக 13 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். இதுதான் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதமாக இருந்து வருகிறது.
கே.எல். ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்) 2018ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிராக 14 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) 2022ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 14 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.
- விராட் கோலி, பெத்தேல் அரைசதம் விளாசினர்.
- மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆர்சிபி அணியால் 200 ரன்களை தொட முடியவில்லை.
ஐபிஎல் தொடரின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இவரும் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.
பெத்தேல் 28 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 9.5 ஓவரில் 97 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் விளையாடிய விராட் கோலி 29 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 62 ரன்கள் அடித்தார். இவரது ஸ்கோரில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.
விராட் கோலி ஆட்டமிழக்கும்போது ஆர்சிபி 11.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆர்சிபி-யின் ஸ்கோர் வேகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது.
தேவ்தத் படிக்கல் ஒரு பக்கம் நிற்க மறுமுனையில் படிகல் 17 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது விக்கெட்டுக்கு படிதார் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். 18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
19ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். ஷெப்பர்டு சந்தித்தார். முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். அதோடு அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். 5ஆவது பந்து நோ-பால் ஆகும். அதற்கு பதிலாக வீசிய பந்தில் ரன் கிடைக்கவில்லை. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, 4 சிக்ஸ் உடன் ஆர்சிபி-க்கு 33 ரன்கள் கிடைத்தது. இதனால் ஆர்சிபி 19 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்துள்ளது. ரொமாரியோ ஷெப்பர்டு 14 பந்தில் அரைசதம் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும்.
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
- சிஎஸ்கே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.
ஐபிஎல் தொடரின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி:-
ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, படிக்கல், படிதர், ஷெப்பர்டு, ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவி, லுங்கி நிகிடி, யாஷ் தயாள்.
சிஎஸ்கே அணி:-
ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ஜடேஜா, பிரேவிஸ், தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.
- குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
- அவசரமாக சொந்த நாடு திரும்பினார். இந்த நிலையில் சஸ்பெண்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபடா. இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இதுவரை குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடியள்ளது. மீண்டும் அணியில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில் போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் தடை பெற்றுள்ளேன். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவில்லை.
இது தொடர்பாக ரபடா வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் ஏமாற்றிய அனைவருக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது. இது எனது தனிப்பட்ட விருப்பங்களை விட அதிகம். நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சமூக வலைத்தளத்தில் கே.எல். ராகுல் உடன் என்னுடைய நட்பு எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.
- அதை மேம்படுத்தி வருகிறேன். சிறப்பாக அமைந்து வருகிறது.
ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல். ராகுல் உள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆலோசகராக உள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி அணிக்காக விளையாடியவர்.
ஐபிஎல் கிரிக்கெட் இல்லாத நேரத்தில் பீட்டர்சன் வர்ணனையாளராக செயல்படுவார். வீரர்களின் ஆட்டம் குறித்து விமர்சிப்பார். அப்படி கே.எல். ராகுல் குறித்து விமர்சித்துள்ளார். அதற்கு கே.எல். ராகுலும் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது கெவின் பீட்டர்சன் ஒரு வாரம் மாலத்தீவுக்கு சுற்றுலா செய்திருந்தது. இது குறித்து கே.எல். ராகுல் கிண்டல் செய்திருந்தார்.
இருவருக்கும் இடையில் மிகப்பெரிய நட்பு என்பதெல்லாம் கிடையாது. ஆனால் டெல்லி அணி சிறப்பாக செயல்பட கே.எல். ராகுலின் பேட்டிங் முக்கிய காரணமாக இருக்கிறது. கே.எல். ராகுல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் கெவிட் பீட்டர்சன் அவருக்கு ஆலோசனை வழங்குகிறார். இதனால் ஆடுகளத்திற்கு வெளியில் அவர்களின் சந்திப்பு நீண்ட நேரம் நடக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைவதற்குள் நாங்கள் நண்பர்களாகிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பீட்டர்சன் கூறுகையில் "சமூக வலைத்தளத்தில் கே.எல். ராகுல் உடன் என்னுடைய நட்பு எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அதை மேம்படுத்தி வருகிறேன். சிறப்பாக அமைந்து வருகிறது. முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த தொடர் முடிவடைவதற்குள் நண்பர்களாகிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
- 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
- பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி கடும் போராட்டத்திற்கு பிறகே தோற்றது.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் முதல் அணியாக லீக் சுற்றோடு வெளியேறியது.
10 போட்டியில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 8 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே. 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது வெற்றிக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.
பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி கடும் போராட்டத்திற்கு பிறகே தோற்றது. இதனால் இனி வரும் போட்டிகளில் சி.எஸ்.கே. வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- அரை சதமடித்த சுப்மன் கில் 76 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார்
- தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டிற்கு எதிராக நடுவருடன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். ஆனால் தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டிற்கு எதிராக களத்திற்கு வெளியே நடுவருடன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியின் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஐதராபாத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அபிஷேக் சர்மாவின் காலில் பந்து பட்டதற்கு LBW முறையில் குஜராத் அணி அவுட் கேட்டது. ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார்.
இதனால் கடுப்பான சுப்மன் கில் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அபிஷேக் சர்மா அவரை சமாதானப்படுத்த முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
ஐபிஎல் போட்டியில் அறத்துடன் விளையாடினாள் நடுவர்கள் PAIR PLAY புள்ளிகள் வழங்குவார்கள். ஏற்கனவே PAIR PLAY பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் அணி சுப்மன் கில்லின் வாக்குவததால் மேலும் PAIR PLAY புள்ளிகளை இழக்கும் என்று கூறப்படுகிறது.
- நடிகை அவ்னீத் கவுரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டது இணையத்தில் பேசுபொருளானது.
- நடிகையின் கவர்ச்சி படத்திற்கு லைக் போடுவதா! என நெட்டிசன்கள் விராட் கோலியை வறுத்தெடுத்தனர்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகை அவ்னீத் கவுரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டது இணையத்தில் பேசுபொருளானது. நடிகையின் கவர்ச்சி படத்திற்கு லைக் போடுவதா! என நெட்டிசன்கள் பலரும் விராட் கோலியை இணையத்தில் வறுத்தெடுத்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார். அவரது ஸ்டோரியில், "நான் எனது சமூக ஊடக பதிவுகளை அழித்தபோது, தவறாக லைக் விழுந்திருக்கலாம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதற்கு பின்னால் எந்த நோக்கமும் இல்லை. தேவையற்ற அனுமானங்களை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
கோலியின் விளக்கதிற்கு பிறகு, 'நடிகை போட்டோவுக்கு லைக் போட்டது ஒரு குத்தமா' என நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
அகமதாபாத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தது.
இதற்கிடையே, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி மீண்டும் குஜராத் வீரரான சாய் சுதர்சன் வசமானது.
இந்த ஆட்டத்தில் 48 ரன் எடுத்த சாய் சுதர்சனின் ரன் எண்ணிக்கை 504-ஆக உயர்ந்தது. அவர் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவிடம் இருந்து (475 ரன்) ஆரஞ்சு தொப்பியை தட்டிப் பறித்துள்ளார்.
இந்நிலையில், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நேற்று 54 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்தார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்சுக்குப் பிறகு இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரராக சாய் சுதர்சன் திகழ்கிறார்.
இந்திய வீரர்களில் இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 59 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்ததே அதிவேகமாக இருந்தது. அதனை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
- ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
பெங்களூரு:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், ஆர்.சி.பி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் விராட் கோலி பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் டிரெய்லர் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அந்த டிரெய்லரில் விராட் கோலி பேசியதாவது:
ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்யவேண்டும்.
அவர் என்னிடம் ஒருமுறை, 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, நீங்கள் (கோலி) இந்தியாவுக்காக விளையாடுவதை நான் பார்க்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு விளைவிப்பீர்கள் என சொன்னார். என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை அவர் மிகவும் திகைக்க வைத்தார்.
ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பை, எந்த வெள்ளிப் பாத்திரமோ அல்லது எந்தக் கோப்பையோ நெருங்க முடியாது என்று நினைக்கிறேன்
எனக்கு எந்த விதத்திலும் நிலைமை மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. புதிய வீரர்கள் குழு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு நேரம் தேவை. அவர்களுக்கு பரிணமிக்க, அழுத்தத்தைக் கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட, உலகக் கோப்பை வரும்போது அவர்கள் தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாட 2 வருட சுழற்சி தேவை. இதைப் புரிந்துகொண்டே டி20 போட்டிகளை விட்டு வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.






