என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெங்களூரு அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா?
    X

    பெங்களூரு அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா?

    • 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
    • பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி கடும் போராட்டத்திற்கு பிறகே தோற்றது.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் முதல் அணியாக லீக் சுற்றோடு வெளியேறியது.

    10 போட்டியில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 8 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே. 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது வெற்றிக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.

    பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி கடும் போராட்டத்திற்கு பிறகே தோற்றது. இதனால் இனி வரும் போட்டிகளில் சி.எஸ்.கே. வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    Next Story
    ×