என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

பெத்தேல், கோலி அரைசதம்: "CAMEO" செய்த ஷெப்பர்டு- சிஎஸ்கே-வுக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆர்சிபி
- விராட் கோலி, பெத்தேல் அரைசதம் விளாசினர்.
- மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆர்சிபி அணியால் 200 ரன்களை தொட முடியவில்லை.
ஐபிஎல் தொடரின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இவரும் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.
பெத்தேல் 28 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 9.5 ஓவரில் 97 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் விளையாடிய விராட் கோலி 29 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 62 ரன்கள் அடித்தார். இவரது ஸ்கோரில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.
விராட் கோலி ஆட்டமிழக்கும்போது ஆர்சிபி 11.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆர்சிபி-யின் ஸ்கோர் வேகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது.
தேவ்தத் படிக்கல் ஒரு பக்கம் நிற்க மறுமுனையில் படிகல் 17 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது விக்கெட்டுக்கு படிதார் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். 18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
19ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். ஷெப்பர்டு சந்தித்தார். முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். அதோடு அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். 5ஆவது பந்து நோ-பால் ஆகும். அதற்கு பதிலாக வீசிய பந்தில் ரன் கிடைக்கவில்லை. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, 4 சிக்ஸ் உடன் ஆர்சிபி-க்கு 33 ரன்கள் கிடைத்தது. இதனால் ஆர்சிபி 19 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்துள்ளது. ரொமாரியோ ஷெப்பர்டு 14 பந்தில் அரைசதம் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும்.