என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இடைக்கால தடை பெற்றுள்ளேன்: ரபடா
    X

    போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இடைக்கால தடை பெற்றுள்ளேன்: ரபடா

    • குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
    • அவசரமாக சொந்த நாடு திரும்பினார். இந்த நிலையில் சஸ்பெண்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபடா. இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    இதுவரை குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடியள்ளது. மீண்டும் அணியில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்து வந்தது.

    இந்த நிலையில் போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் தடை பெற்றுள்ளேன். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    எவ்வளவு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவில்லை.

    இது தொடர்பாக ரபடா வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் ஏமாற்றிய அனைவருக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது. இது எனது தனிப்பட்ட விருப்பங்களை விட அதிகம். நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×