என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர்.
    • ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

    இந்திய மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

    முதலில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 16-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

    இந்த தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. முன்னதாக இவர்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.

    அதேசமயம் 7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் ஷபாலி வர்மா இடம் பிடித்துள்ளார். அவர் டி20 அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை.

    இந்திய டி20 அணி:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே

    இந்திய ஒருநாள் அணி:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே

    • விராட் கோலி இந்த ஆண்டு இங்கிலாந்தில் விளையாட மாட்டார் என்பதை அறிந்து நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பாத ஒரு அணியைத்தான் தோனி வழி நடத்தி வந்தார்.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 36 வயதான விராட் கோலி, தனது 14 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுகட்டி ஓய்வை அறிவித்தார். 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளை அதிக ரசிகர்கள் பார்க்கக் காரணமாக இருந்தவர் விராட் கோலி எனப் பலரும் தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி அணியில் இணைவதற்கு முன்பு இந்தியா, டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாத அணியாக இருந்தது எனவும், அந்த அணிக்குத்தான் தோனி கேப்டனாக இருந்தார் எனவும் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் டெஸ்ட் போட்டி ஓய்வுகளைப் பற்றி பெரும்பாலும் ஏமாற்றம் அடைய மாட்டேன். ஆனால், விராட் கோலி இந்த ஆண்டு இங்கிலாந்தில் விளையாட மாட்டார் என்பதை அறிந்து நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அவர் ஓய்வு பெற்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அது எனக்குச் சோகத்தையும் அளித்தது.

    கடந்த 30 ஆண்டுகளில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளுக்குச் செய்த நன்மையைப் போல வேறு யாரும் செய்ததில்லை. இந்தியா இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆர்வத்தை இழந்து கொண்டிருந்தது. விராட் கோலி கேப்டன் ஆகும் வரை அப்படித்தான் இருந்தது.

    வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தோனி ஒரு ஜாம்பவானாக இருந்தார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பாத ஒரு அணியைத்தான் அவர் வழி நடத்தி வந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதுதான் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய ஆர்வமும் திறமையும் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று வடிவமைக்கப்பட்டது. அவர் அந்த டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தை மற்றொரு உயரத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்கென அவர் நிறைய நேரத்தையும் ஆர்வத்தையும் முதலீடு செய்தார்.

    அவரது ஓய்வு என்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு அவரது டெஸ்ட் கிரிக்கெட் ஆர்வம் மிகப்பெரிய உந்துதலாக அமையும். பல்வேறு சகாப்தங்களைச் சேர்ந்த வீரர்களையும் ஒப்பிடுவது என்பது சாதாரணமானது அல்ல. டி20 போட்டிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலி மிகச் சிறந்த வீரராக இருந்திருக்கிறார்

    என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    • நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் தற்போது அவர்களது அணியில் இணைந்து வருகின்றனர்.
    • பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல் , டிம் டேவிட் , ஷெப்பர்ட் ஆகியோர் பெங்களூரு அணியில் இணைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

    போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் தற்போது அவர்களது அணியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு அணியில் முக்கிய வீரர்களான பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல் , டிம் டேவிட் , ரோமரியோ ஷெப்பர்ட் ஆகியோர் பெங்களூரு அணியில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். அவர் பயிற்சிக்கு செல்லும் வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து- இந்தியா விளையாடுகிறது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை வலுப்படுத்தும் நோக்கில் அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் சிறப்பு திறன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    எதிர்வரும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் இணைய உள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை அவரது பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • குஜராத் அணியின் நட்சத்திர வீரருக்கு பதிலாக குசல் மெண்டீஸ் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார்.
    • புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர்.

    தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.

    இதனிடையே இந்த மாத கடைசியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-ல் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இலங்கை அணி வீரர் குசல் மெண்டீஸ் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
    • 3-ம் இடம் பிடித்த இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

    2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் ஜூன் மாதம் 11-15-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 18.49 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இறுதிப் போட்டிக்கு ரூ. 49. 28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2 சீசனை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியுற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் 3-ம் இடம் பிடித்ததால் இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளின் பரிசுத்தொகை விவரம்:-

    வெற்றி பெற்ற அணிக்கு - ரூ. 30.78 கோடி.

    2-வது இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ. 18.46 கோடி.

    இந்தியா - ரூ. 12.31கோடி.

    நியூசிலாந்து - ரூ. 10.26கோடி.

    இங்கிலாந்து - ரூ. 8.2கோடி.

    இலங்கை - ரூ. 7.18கோடி.

    வங்கதேசம் - ரூ. 6.15கோடி.

    வெஸ்ட் இண்டீஸ் - ரூ. 5.13கோடி.

    பாகிஸ்தான் - ரூ. 4.10கோடி.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐசிசி-யின் தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பும்ரா அடிக்கடி காயம் அடைவதால் அவரை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.
    • சுப்மன்கில் கேப்டனாக அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந் தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது.

    விராட்கோலி, ரோகித் சர்மா மற்றும் ஆர்.அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தின்போது அஸ்வின் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தார்.

    ஐ.பி.எல். போட்டி நடைபெற்று இருக்கும்போது ரோகித் சர்மா கடந்த 7-ந் தேதி டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அதை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி யாருமே எதிர்பார்க்காத வகையில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான விராட்கோலி டெஸ்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தனக்கு முழு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வி, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தோல்வி போன்று மீண்டும் நடைபெறுவதை தடுக்க தனக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்திய அணியில் உள்ள வீரர்களில் தற்போது பும்ரா மட்டுமே காம்பீருக்கு சவாலாக இருப்பார். அவரது செயல்பாடுகளுக்கு பும்ரா முட்டுக்கட்டை போடுவார்.

    அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கும் சுப்மன்கில் இளம் வீரர், காம்பீர் சொல்வதை கேட்பார். அவருக்கு சவால் விடக்கூடிய நிலையை சுப்மன்கில் இன்னும் எட்டவில்லை.

    பும்ரா அடிக்கடி காயம் அடைவதால் அவரை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. சுப்மன்கில் கேப்டனாக அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட படுதோல்வியால் காம்பீருக்கான சில அதிகாரங்களை பி.சி.சி.ஐ. பறித்து இருந்தது. தற்போது அணி தனது முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். காம்பீரின் கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    • புள்ளிகளில் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.
    • கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை எதிர்பார்க்க முடியும்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான் Loc பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்து பதிலடியும் கொடுத்தது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.

    பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி வருகிறார்கள். பிளேஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இல்லாத அணிகள் இன்னும் 2 முதல் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டியுள்ளது. இதனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்காத வெளிநாட்டு வீரர்கள் உள்பட சில வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சொந்த காரணத்தை காட்டி விலக இருப்பதாக தெரிகிறது.

    அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, சொந்த காரணத்திற்காக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் மெக்கர்க் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    புள்ளிகள் பட்டியலில் கேகேஆர் 12 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. 17ஆம் தேதி ஆர்சிபியையும், 15ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டு பேட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தேட முடியும்.

    • ஆர்சிபி அணியில் ஹேசில்வுட், பில் சால்ட், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக இவர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்பினர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான் Loc பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்து பதிலடியும் கொடுத்தது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.

    பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த பில் சால்ட், டிம் டேவிட், பெத்தேல் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியேர்ர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

    புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 11 போட்டிகளில் விளைாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வருகிற 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் கொல்த்தா நைட் ரைடர்ஸ் அணியையும், 28ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும், 27ஆம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

    • ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்-க்கு பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • UAE உடனாக தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முஸ்தஃபிசுர் சென்றுள்ளார்

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர், UAE தொடரில் விளையாட புறப்பட்டுச் சென்றதால் குழப்பம்

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், UAE உடனாக தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் புறப்பட்டு சென்றதால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லா சான்று கோரி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வராததால், ஏற்கனவே உள்ள அட்டவணையின்படி அவர் UAE புறப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ. நிசாமுதின் தெரிவித்தார்.

    • வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
    • ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பிசிசிஐ புதிய முடிவை எடுத்துள்ளது. இப்போது வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடர் முடியும் வரை தற்காலிக மாற்று வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் கூறிவுள்ளது.

    அதேசமயம் இத்தொடர் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் தேர்வுசெய்யப்பட்ட லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், நந்த்ரே பர்கர், மயங்க் அகர்வால் மற்றும் செதிகுல்லா அடல் ஆகியோரை அணிகள் அடுத்த சீசனுக்கு தக்க வைக்க முடியும் என்பதையும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

    முன்னதாக இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஃபிரேசர் மெக்குர்க் தொடரிலிருந்து விலகியதை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
    • ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிராவோ உள்ளிட்ட 4 பேர் இந்திய வர உள்ளனர்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17-ம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

    ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாதுகாப்பு காரணம் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவார்காளா என்ற சந்தேகங்கள் உள்ளன.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிராவோ, ரசல், சுனில் நரைன், செப்பேர்ட் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். இது குறித்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளரான பிராவோ வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×