என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர்
- இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து- இந்தியா விளையாடுகிறது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை வலுப்படுத்தும் நோக்கில் அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் சிறப்பு திறன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் இணைய உள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை அவரது பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Next Story






